Tuesday, June 8, 2010

கைகளில் கை வண்ணம்!!!

சின்ன வயசிலிருந்தே எனக்கு மருதாணி வைத்துக் கொள்வதென்றால் ரொம்ப விருப்பம். மெஹந்தி கோனெல்லாம் இல்லாத காலத்தில் அரைத்த மருதாணியையே தீக்குச்சியின் பின்புறத்தால் கொடி போலெல்லாம் போட்டுக் கொள்வேன். எப்ப நேரம் கிடைத்தாலும் மெஹந்தி கோன் வாங்கி இட்டுக் கொள்வேன்.

நண்பரின் மகளுக்கு பிறந்தநாள் பரிசு வாங்க கடைக்கு போனபோது மெஹந்தி கோன் கண்ணில் பட்டது.  மெஹந்தி போட்டு ரொம்ப வருடமே ஆச்சேன்னு ஒரு கோன் வாங்கினேன். ஞாயிறு வரை காத்திருந்து, மதியம் சாப்பிட்டதும், மெஹந்தி போடலாமென்று கோனை எடுத்து வைத்தேன்.

பக்கத்தில் இருந்த என் பெண் பார்த்த பார்வை, 'நீ மட்டும் மெஹந்தி போட்டுக் கொள்ளப் போகிறாயா?' என்று கேட்டது. கார்ப்பரேட் ஆபீசில் வேலை செய்யும் அவள், மெஹந்தி போட்டுக் கொள்வாளா என்ற சந்தேகத்தோடு நீ வைத்துக் கொள்கிறாயா என்று கேட்டேன். அழகாக போட்டு விட்டால் வைத்துக் கொள்கிறேன் என்று சொன்னாள். எனக்குத் தெரிந்தவரை போடுகிறேன் என்று சொல்லி அவளின் இடது கையில் போட ஆரம்பித்தேன். ரொம்ப நாளாக வைக்காமல் இருந்து வைத்ததால் கைகளில் சிறிது தடுமாற்றம்.கோன் சின்னதாக இருக்கு, சரி, ஆளுக்கு ஒரு கைக்கு போட்டுக் கொள்ளலாமென நினைத்துக் கொண்டே ஒரு கையை போட்டு முடித்தேன். ரொம்ப குறைவாகவே கோனில் மீதி இருப்பது போல் தோன்றியது. எதற்கும் கேட்போமே என்று இன்னொரு கைக்கும் போடவா என்று பெண்ணிடம் கேட்டேன். உங்களுக்கு வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னாள். சின்னப்பெண் கை அழகை விடவா நமக்கு முக்கியம் என்று ஆர்வத்துடன் அடுத்த கைக்கும் போட ஆரம்பித்து விட்டேன். கொஞ்சமாக மெஹந்தி இருக்கவே டிசைனை சுருக்கி ஒரு வழியாக கோன் காலியாகவும் நானும் முடிக்கவும் சரியாக இருந்தது.


கொஞ்சூண்டு மீதி கோனில் ஒட்டிக் கொண்டு இருப்பது போல் தோன்றவே, அதையும் விடாமல் என் கையில் போட்டு, என் ஆசையையும் நிறைவேற்றிக் கொண்டேன்.

இரண்டு மணி நேரம் கழித்து எடுத்தபின் பெண்ணின் கை அழகாக சிவந்து இருந்ததில், நல்லவேளை! இரண்டு கைக்குமாக போட்டு விட்டோமே என்று சந்தோஷப்பட்டேன்!!

 என் கைக்கும் நல்லா சிவந்து தானே இருக்கு :-)

38 comments:

ஜெய்லானி said...

ஆஹா...உங்ககிட்ட ஒரு மாசம் டிரைனிங் எடுக்கனுமே!! அவ்வளவு அழகா இருக்கே!!!

Asiya Omar said...

அருமையாக இருக்கு அக்கா,உங்கதிறமைகள் இப்பதான் தெரியுது. உங்க கையில் சின்னதாக போட்டாலும் உங்க ஆசைப்படி அழகாக சிவந்து இருக்கு,மகள் கையும் அருமை.சமையல் குறிப்பு எப்ப கொடுக்க ஆரம்பிக்கப்போறீங்க,பார்த்து சமைக்க வெயிட்டிங்.

செந்தமிழ் செல்வி said...

சகோ. ஜெய்லானி,
அம்மாடி! என்ன வேகமா சுடசுட பின்னூட்டம்!

ஒரு மாதம் டிரெயினிங் தானே! மிகவும் குறைந்த கட்டணமாக மாதம் ஆயிரம் மட்டும் தான் ஃபீஸ்:-)

மிக்க நன்றி சகோதரரே!

செந்தமிழ் செல்வி said...

அன்பு ஆசியா,
ஏதோ கொஞ்சமா தெரியும். என்னை வெளி உலகத்திற்கு வெளிச்சமிட்டு காட்டிய என் கணவருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.

என் கையும் நல்லா சிவந்து தான் இருக்கா? அது போதும். நன்றி ஆசியா!

சமையல் குறிப்பு கொடுக்க ஆரம்பிக்கணும். போட்டோ எடுப்பது தான் சிரமமாக இருக்கு. காலையில் ஆபீஸ் போகும் அவசரத்தில் சமைக்கும் போது நேரமே இல்லை. அறுசுவையிலும் தொடர் எழுதுவதால் நேரமே பத்த மாட்டேங்குது. நான் எழுத ஆரம்பிச்சிட்டா உங்களையெல்லாம் முந்திடுவேனே:-) பரவாயில்லையா?

ஜெய்லானி said...

//ஒரு மாதம் டிரெயினிங் தானே! மிகவும் குறைந்த கட்டணமாக மாதம் ஆயிரம் மட்டும் தான் ஃபீஸ்:-)//

நல்ல வேளை தப்பிச்சேன் ரூபா , டாலர் ,பவுண்ட்ன்னு சொல்லல...கவிசிவா கிட்ட சொல்லி , இந்தோனேஷியா மில்லியனா குடுத்திடலாம் ஹி..ஹி..( தமாசு ) .. இதுக்கு ஆயிரம் கம்மிதான்..

செந்தமிழ் செல்வி said...

சகோ. ஜெய்லானி,
அச்சோ! ஏமாந்துட்டேனோ:-( இன்னும் அதிகமாக் சொல்லி இருக்கணுமோ?
இந்தோனேஷியா மில்லியனும் பரவாயில்லை தான்! கை நிறைய காசு இருக்குமில்லையா:-)

நானானி said...

ரொம்ப நல்லாயிருந்தது, உங்கள் கை வண்ணம். எனக்கு இதில் அவ்வளவு விருப்பமில்லாவிட்டாலும் என் மகள் அழகாக மெஹந்தி இடுவாள்.

Menaga Sathia said...

2 பேர் கையிலும் நல்லா அழகாவும் சிவப்பாக்வும் இருக்கும்மா..

kavisiva said...

செல்விம்மா அழகாயிருக்கு மருதாணி கைகள். ஆயிரம் இந்தோனெஷியன் ருப்பியா த்ரேன் என் கைக்கும் போட்டு விடுவீங்களா :)

செந்தமிழ் செல்வி said...

அன்பு நானானி,
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
மெஹந்தி இடுவது ரசனையுடன் கூடிய கலை. இந்த கலையை பெற்றிருக்கும் உங்கள் மகளுக்கு என் வாழ்த்துக்கள்.

செந்தமிழ் செல்வி said...

அன்பு மேனகா,
என் கை சிவப்பாக இருக்குன்னு சொல்லு, ஒத்துக்கறேன். அழகா இருக்குன்னு சொல்றது என்னை திருப்திப்படுத்த தானே :)

செந்தமிழ் செல்வி said...

அன்பு கவி,
//செல்விம்மா அழகாயிருக்கு மருதாணி கைகள். // இப்படி சொன்ன பிறகு கவிக்கிட்ட காசு வாங்குவேணா? ஜெய்லானிக்கு மட்டும் தான் ஃபீஸ்.:=)

Menaga Sathia said...

அப்படிலாம் இல்லமம,நிஜமா அழகா இருக்கு.இந்தளவுக்கு கூட எனக்கு போட வராது....

Jaleela Kamal said...

எனக்கும் மருதானி வைத்து கொளவ்து ரொம்ப பிடிக்கும்.

மாதம் ஒரு முறை எப்படியே வைத்து கொள்வேன்.
இப்ப கை நம்னஸ் வந்ததிலிருது வைகக் பயம்.

இத்தனைக்கும் தைலம் டைகர் பாம் எலலம் போட்டு தான் வைப்பேன்.

இத பார்த்த்தும் இபப் உடன்னே வைக்கனும் போல் இருக்கு.

ரொம்ப அழகாக இருக்கு.

செந்தமிழ் செல்வி said...

மேனகா,
/இந்தளவுக்கு கூட எனக்கு போட வராது.//
அது தான் என் கையை அழகா இருக்குன்னு சொல்றே:-)

செந்தமிழ் செல்வி said...

ஜலீலா,
நான் வேணா போட்டு விடவா?
நன்றி ஜலீலா!

எல் கே said...

nalla irukunga designs.. vaalthukkal;

செந்தமிழ் செல்வி said...

அன்பு எல்கே,
வரவுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

ஹைஷ்126 said...

கண்ணு பட்டு போச்சுதம்மா :( சுத்தி போடுங்க

Mrs.Mano Saminathan said...

மெஹந்தி டிசைன் கலை வண்னத்துடன் பார்க்க ரொம்பவும் அழகாயிருக்கிறது, செல்வி!
உங்கள் பொறுமைக்கு என் வாழ்த்துக்கள்!!

இமா க்றிஸ் said...

Superb Selvi.

செந்தமிழ் செல்வி said...

unmai sakotharar.haish!
intha maruthani itta kai inru operation seitha nilayil. accident-l makalin kai elumbu otinthu vittathu. nan innum makalai kannil koota parkkavillai.

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள செல்வி!

மகளுக்கு கையில் எலும்பு முறிவானதறிந்து மிகவும் வருந்தினேன். அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்திருக்கும் என நம்புகிறேன். மகளுக்கு விரைவில் உடல் நலம் குணமாகும் என்ற நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் இருக்கவும்.

ஜெய்லானி said...

ச்சோ..ச்சோ..படித்ததும் மனசு கேக்கல..இப்ப அவங்க கை எப்படி இருக்கு ? பரவாயில்லயா ? இறைவன் உதவியால் விரைவில் குணமாகிவிடும். நம்பிக்கையா இருங்கள். அவங்களுக்கும் குடுங்கள்..

:-(

geetha said...

செல்விக்கா!
மகள் எப்பிடி இருக்காங்க? ரொம்ப வருத்தமாய் இருக்கு. கடவுள் அருளால் அவங்க கை பழைய நிலைக்கு கூடியசீக்கிரம் திரும்பனும்னு கடவுளை வேண்டிக்கிறேன்!
நீங்களும் உடம்பை கவனிச்சுக்குங்க!

Jaleela Kamal said...

செல்வி அக்கா மகளுக்கு ஆப்ரேஷன் முடிந்து பரவாயிலலையா?

எப்படி இருக்கிறாள் சென்னையிலா இருக்கிறீர்கள்.

ஹைஷ்126 said...

நேற்று 19 ஜூன் மாலை அனைவரும் புதுவைக்கு திரும்ப வந்து விட்டார்கள்.

அறுவை சிகிச்சை நல்ல விதமாக முடிந்தது.

விரைவில் குணமடைய அருட்பேராற்றலிடம் வேண்டுகிறேன்.

Vijiskitchencreations said...

செல்வி அக்கா சூப்பர் கைவண்ணாம். நல்லா இருக்கு.
இந்த செய்தியை படித்ததும் மனதுக்கு ரொம்ப வருத்தமா இருந்ததது. எப்படி இருக்கா மகள். பூரண குணமடைய வேண்டுகிறேன்.

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப அழகாக இருக்கு.

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி <
################

செந்தமிழ் செல்வி said...

அன்பு சகோதரி.மனோ,
தங்களின் விசாரிப்புக்கு மிக்க நன்றி. நீண்ட நாட்கள் கழித்து இன்று தான் கணினி முன்பே அமர்கிறேன். மகளுக்கு தற்போது பரவாயில்லை.

செந்தமிழ் செல்வி said...

சகோதரர்.ஜெய்லானி,
மிக்க நன்றி உங்கள் விசாரிப்புக்கு. நம்பிக்கை?! அது இல்லாவிட்டால் வாழ்க்கை ஏது?

செந்தமிழ் செல்வி said...

கீதா,
மிக்க நன்றி! விரைவில் கை பழைய நிலைக்கு வரணும்.

செந்தமிழ் செல்வி said...

ஜலீலா,
போனிலேயேயும் விசாரித்தமைக்கு மிக்க நன்றி.

செந்தமிழ் செல்வி said...

சகோதரர்.ஹைஸ்,
தங்களின் ஹீலிங்க்குக்கும், தகவல் கொடுத்தமைக்கும் மிக்க நன்றி.

செந்தமிழ் செல்வி said...

விஜி, மிக்க நன்றி.

அதுதான் கண்ணுபட்டு போச்சு சகோதரர். குமார்.

செந்தமிழ் செல்வி said...

சகோதரர். ஜெய்லானி,
விருதுக்கு மிக்க நன்றி! நான் இன்று தான் பார்த்தேன். (நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் என்று தெரியுது. அது நான் வராமலும் வருமாக்கும்)
அங்கேயே பத்திரமாக இருக்கட்டும். மெதுவாக வந்து எடுத்துக் கொள்கிறேன்.

Srividhya Ravikumar said...

hai selvi... 1st time to your wonderful space... very nice... nalla azhaga anubavichu ezhuthureenga... romba nalla irukku... do visit my site whenever.. following you..

Post a Comment