Thursday, April 8, 2010

என் வீட்டு தோட்டத்தில்....


அழகான வெள்ளை ரோஜா - மலிக்காவுக்கு!!!
டபுள் கலர் ரோஸ் தான்! இப்படி இருக்கு!!!

மஞ்சள் ரோஜா - யாருக்கு வேணுமோ, எடுத்துக்கலாம்!!!

அடுக்கு செம்பருத்தி - ஒரு வகை...

அடுக்கு செம்பருத்தியில்   இன்னொரு வகை...

வெண்டைக்காய் பூ கூட அழகுதான்!!

கத்தரிப்பூ கலருக்கு  வேறு பெயர் இருக்கா???

பாகல் பூ தான் வெச்சிருக்கு, காய் ஒன்றே ஒன்று தான்!!!

அரளிப்பூவும் அழகு தான், இல்லே???

மல்லிகையும், மணி ப்ளாண்ட்டும்....

கிறிஸ்மஸ் மரம் (செடி???!!!)

இன்றைய அறுவடை :-)))))
ரொம்ப சுத்தி காண்பிச்சு டயர்டாகியாச்சு. அதனால் இன்னிக்கு காஃபி போட முடியலை :-(

44 comments:

Menaga Sathia said...

மஞ்சள் ரோஜா எனக்குதான்...எல்லாமே கொள்ளை அழகு...

GEETHA ACHAL said...

எல்லாம் செடிகளும் சூப்பராக இருக்கின்றது..சூப்பர்ப் போட்டோஸ்...

Ammu Madhu said...

செல்வி மேடம் கத்தரி,வெண்டை,மிளகா செடிகளும் வச்சு எவ்ளவு நாளுக்கு அப்புறம் காய்க்க ஆரமிசுசு.படங்கள் அருமை.

ஸாதிகா said...

ஸ்ஸ்ஸ்ஸ்..அப்பா..கண்ணைக்கட்டுதே!

athira said...

suppeeeer.... எனக்கு பொறாண்மையாவே இல்லை...

geetha said...

செல்விக்கா!
ஹைய்யோ! நம்பவேமுடியலை. சூப்பராய் இருக்கு !
இலையெல்லாம் தளதளக்க, பூவெல்லாம் பளபளக்க!
எடுத்துக்கவேண்டி கையெல்லாம் பரபரக்க!
முடியாத ஏக்கத்தில் இதயம் படபடக்க!
வாயிலில் காத்திருப்பேன் கால்கள் கடுகடுக்க!
பார்சல் அனுப்பிடுக மனசு சிலுசிலுக்க!

Malini's Signature said...

செல்விமா தோட்த்தை பார்க்கும் ஆவலை அதிகமாக்கிட்டீங்க...அப்படியே எல்லாத்தையும் எப்படி பராமரிக்குறீங்கன்னு கொஞ்சம் டிப்ஸ்ம் குடுங்கமா!!!!!

'பரிவை' சே.குமார் said...

பூக்களின் வாசம் வீசும் உங்கள் தளத்துக்குள் எதேச்சையாய் நான்...
காலையில் பூக்களை பார்க்கும் சந்தோஷமே தனிதான்...

அது என்ன மலிக்காக்காவுக்கு மட்டும் அழகான வெள்ளை ரோஜா. எனக்கு பொறாமையா இருக்கு. எனக்கும் வேணுமின்னு அவங்ககிட்ட சொல்லுங்க.

வாழ்த்துக்கள்.

prabhadamu said...

எல்லாம் செடிகளும் சூப்பராக இருக்கின்றது. எல்லாமே கொள்ளை அழகு... செல்விம்மா.

செந்தமிழ் செல்வி said...

ஓகே மேனகா, எடுத்துக்கோ. மிக்க நன்றி.

கீதாச்சல், மிக்க நன்றி! அது மூவரின் கைவண்ணம். கணவர், மகன், நான் மூவருமாக எடுத்தது. ரொம்ப அழகா இருப்பதெல்லாம் நான் எடுத்தது;-)))

அம்மு, தோட்டம் அழகா இருக்கு, அது தான் படமும் அழகா இருக்கு:-)
வெண்டை 30 நாட்களில் காய்க்கும். கத்தரியும், மிளகாயும் 45 - 60 நாட்கள் ஆகும்.

ஸ்னேகிதி ஸாதிகா,
இதுக்கே கண்ணைக் கட்டினால் எப்படி? நேரில் பார்க்க வேண்டாமா?

செந்தமிழ் செல்வி said...

அதிராக்கு எப்பவாவது பொறாமை வருமா? திருஷ்டி சுற்றிப் போடப் போவதே அதிராதானே???!!!

கீதா, என் தோட்டத்தை பார்த்து உனக்கு என்ன அழகான வந்திருக்க்கு, பார். இதற்காவே இன்னும் 10 படங்கள் போடலாம் போல இருக்கே:-)

ஹர்ஷினிம்மா,
டிப்ஸ் கொடுப்பது நமக்கு என்ன கஷ்டமா, என்ன?கொடுத்திடுவோம். இந்த பகுதியை தொடர்ந்திட்டால் போச்சு. நன்றிம்மா!

சகோ. குமார்,
தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி.
/காலையில் பூக்களை பார்க்கும் சந்தோஷமே தனிதான்.../
என்னைப் போன்றோருக்கே அது சந்தோஷம் தான். உங்களைப் போல் கவிஞருக்கு.... சொல்லவா வேண்டும்?

மலிக்காவிற்கு மட்டுமில்லை. உங்களுக்கும் ஆரஞ்சு வண்ண ரோஜா தருகிறேன்.

ஒரு வலைப்பூவில் பதிவிடவே நேரம் போதவில்லை. 4 வலைப்பூவை எப்படி நிர்வகிக்கிறீர்கள்!!!??
நாளை நிதானமாகப் பார்த்து விட்டு சொல்கிறேன் அங்கு.
மீண்டும் நன்றி!!

ப்ரபா, மிக்க நன்றி!!

அண்ணாமலையான் said...

கடேசி தட்ல இருக்கறதுதான் பிடி கத்தரிக்காவா?

செந்தமிழ் செல்வி said...

சகோ. அண்ணாமலையான்,
அது பிடி கத்தரிக்காயல்ல, சாதாரண நாட்டி சாரி நாட்டு கத்தரிக்காய் தான்.

Unknown said...

உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

நன்றி
தமிழ்10.காம் குழுவினர்

sathishsangkavi.blogspot.com said...

All Flowers very Nice.........

Jaleela Kamal said...

செல்வி அக்கா எல்லாம் உங்கள் வீட்டில் பூத்த மலர்கள், காய்களா ரொம்ப அருமை.

எல்லா ரோஜாவும் எனக்கு பிடிக்கும், ஆகையால் எடுத்து கொண்டேன், ரொம்ப நன்றி.

Starjan (ஸ்டார்ஜன்) said...

இதெல்லாம் உங்க தோட்டத்தில் பூத்ததா.., ரொம்ப அழகாக இருக்கு.

Ahamed irshad said...

ரோஜா பூக்கள் அழகு..

செந்தமிழ் செல்வி said...

நன்றி தமிழினி! முயற்சிக்கிறேன்.

செந்தமிழ் செல்வி said...

சங்கவி,
மிக்க நன்றி தங்கள் முதல் வருகைக்கும், பாராட்டுக்கும்

தெய்வசுகந்தி said...

வாவ் ரொம்ப நல்லா இருக்குதுங்க!!!!!!!!!!!
கண்ணுக்கு விருந்து!:-)

செந்தமிழ் செல்வி said...

சகோதரர் ஸ்டார்ஜன்,
எல்லாமே எங்க தோட்ட மலர்கள் தான். மிக்க நன்றி.

செந்தமிழ் செல்வி said...

எல்லாமே எடுத்துக்கலாம் ஜலீலா, நன்றியெல்லாம் வேண்டாம்:-))

சாமக்கோடங்கி said...

ஆஹா. ஆஹா.. அருமையான தோட்டம்.. சூப்பர்..

எங்கள் வீட்டில் முன்னர் இருந்தது இது போன்ற தோட்டம்.. இப்போது புது வீடு கட்டிக் கொண்டு இருப்பதால் அந்த இடம் இப்போது இல்லை.. கொஞ்சம் இடம்தான் உள்ளது...

நன்றாக பராமரியுங்கள்..நன்றி..

செந்தமிழ் செல்வி said...

அஹமது,
ரோஜா மட்டும் தான் அழகா இருக்கா?
மிக்க நன்றி முதல் வருகைக்கும், பதிவிற்கும்.

செந்தமிழ் செல்வி said...

தெய்வ சுகந்தி,
மிக்க நன்றி. எப்போதோ உங்க பிளாக் பக்கம் வந்திருக்கேன். நம்ம பக்க சமையலா இருக்கேன்னு பார்த்தேன். அப்பறம் தான் கொங்கு நாடுன்னு தெரிஞ்சுது:-) வருகைக்கும், பதிவிற்கும் மிக்க நன்றி!

செந்தமிழ் செல்வி said...

வாருங்கள் ப்ரகாஷ்! வருகைக்கு நன்றி!
இருக்கும் கொஞ்ச இடத்திலும் நல்ல செடிகள் வைங்க.
கண்டிப்பாக பராமரிக்கிறேன். நன்றி.

அன்புடன் மலிக்கா said...

வெள்ளை ரோஜா எனக்கு ஹை ரொம்ப சந்தோஷம்
செல்விக்கா.

//அது என்ன மலிக்காக்காவுக்கு மட்டும் அழகான வெள்ளை ரோஜா. எனக்கு பொறாமையா இருக்கு. எனக்கும் வேணுமின்னு அவங்ககிட்ட சொல்லுங்க.//

செல்விக்கா போனாப்போயிட்டுபோகுது குமாருக்கும் கொடுத்துவிடுங்க.

அப்புறம் பூக்களின் வாசம் துபையில் வீசுது.

அப்பப்பா எத்தனை வண்ணங்களில்.எனக்கு ரொம்ப ஆசையாக இருக்கு நேரில் தொட்டுப்பார்க்க மலர்களை.

நாளும் நலமே விளையட்டும் said...

மரங்கள் வைக்கலாமே?
அரளிப் பூ தான் ஆண்டவனுக்கு அழகு!
ரோஜாப் பூ பெண்களுக்கு அழகு!
எல்லாப் பூவுமே செடிகளுக்கு அழகு!

geetha said...

செல்விக்கா!
உங்க தோட்டத்தினை பார்த்து எல்லார்க்கும் கவிதை பிச்சுக்கிட்டு கொட்டுது பாருங்க. கவித!கவித!
பூவும், காயுமாய் எல்லார்க்கும் அள்ளி தர்றீங்களே, எனக்கு ஒண்ணும் இல்லியா????
கேட்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுமோ???
விருதுகள் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

இமா க்றிஸ் said...

எனக்கும் பொறாமையாவே இல்லை. ;)
nice.

Kousalya Raj said...

really fantastic!

Priya said...

wow..... I love these photos!!
So beautiful!

SurveySan said...

nice garden.

Vijiskitchencreations said...

அக்கா. சூப்பர் பூக்கள் வனம். எனக்கும் மல்லி என்றால் ரொம்ப பிடிக்கும். அதன் வாசமே தனி.ஆமாம் எனக்கும் என் குட்டிஸுக்கும் பிங் ரோஸ் பிடிக்கும். இருந்தால் எனக்கு குடுத்துடுங்க. ஒ.கே வா. நான் தான் முதல்ல கேட்டிருக்கேன். பிங்க் வந்தால் என் நினைவு வரனும். ஒ.கே. மீண்டும் வருகிறேன்.

செந்தமிழ் செல்வி said...

மலிக்கா,
//போனாப்போயிட்டுபோகுது குமாருக்கும் கொடுத்துவிடுங்க//
கொடுத்துடலாம்;-)

எப்ப வேணாலும் நேரில் வந்து தொட்டுப் பார்க்கலாம்.

செந்தமிழ் செல்வி said...

நாளும் நலமே விளையட்டும்,
மரங்களும் வைத்துள்ளோம். இப்ப செடிகளாக இருக்கு.
உங்கள் வரிகளும் அழகு.

செந்தமிழ் செல்வி said...

என்ன கீதா இப்படி கேட்டுட்டே? உனக்கில்லாததா?
எது வேணுமோ எடுத்துக்கோ:-)
வாழ்த்துக்கு மிக்க நன்றி.

செந்தமிழ் செல்வி said...

இமாவுக்கு என்ரைக்கு பொறாமை வந்திருக்கு? தேங்க்யூ இமா!

செந்தமிழ் செல்வி said...

மிக்க நன்றி கௌசல்யா!

செந்தமிழ் செல்வி said...

பிரியா,
வருகைக்கு சந்தோஷம். மிக்க நன்றி!

செந்தமிழ் செல்வி said...

மிக்க நன்றி சர்வேசன்!

செந்தமிழ் செல்வி said...

அன்பு விஜி,
மல்லிகை வாசம் பிடிக்காதவர் உண்டோ?
பிங்க் கலர் ரோஸ் தானே? விரைவில் மொட்டு விடும். கண்டிப்பாக தருகிறேன். செடியை பார்த்தாலே உன் நினைவு வரும்.

malathi said...

செல்வி...... உங்க தோட்டம் ரொம்ப நல்லா இருக்கு. நல்ல ஃப்ரஷாகவும், நல்ல கவனிப்புடன் பராமரிக்கப்பட்டதாகவும் தோன்றுகிறது. செடிகளுக்கு தண்ணீர் ஊற்றியவுடன் ஃபோட்டோ எடுத்திருப்பீர்கள் போல...... வெண்டைக்கு மட்டும் இன்னும் கொஞ்சம் கவனிப்பு தேவையோ....... பூக்கள் நல்ல கலர்ஃபுல்....... காலிஃப்ளவர் கொஞ்சம் காஸ்ட்லி என்பதால் பத்திரமாக இலைக்கூட்டிற்குள் உட்கார்ந்து இருப்பது போல தோன்றுகிறது.....

Post a Comment