Monday, April 5, 2010

அழகாய் பூ(காய்)க்குதே!!

எங்க வீட்டுத் தோட்டத்தை கொஞ்சம் சுற்றிப் பார்க்கலாமா?

இந்த காலிஃபிளவர் - இமாவுக்கு!!!!


அழகான வெள்ளை ரோஜா!


இது ஒரு வகை கீரை!!!

 
குட்டி குட்டி கத்தரிக்காய்!!


ஸ்..ஸ்..ஸ்...ஆஆஆ!!!!! ரொம்ப காரம்!!


தென்னையும், புதினாவும்....

இன்றைக்கு சுற்றியது போதும். டயர்டா இருப்பீங்க! ஒரு காஃபி குடித்து விட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகிட்டு மீதி தோட்டத்தை நாளைக்கு சுற்றிப் பார்க்கலாமா?



இதோ சூடான காஃபி :-))))))
BYE! BYE!!

20 comments:

Malini's Signature said...

செல்விமா தோட்டம் அழகு... காஃபி பாத்துட்டே இருக்கலாம் போல இருக்கு குடிக்கவே மனசு வரலை!!!..

geetha said...

செல்விக்கா!
சூப்பரான தோட்டம். சுத்தி காமிச்சது போதும். முதல்ல சுத்தி போட்டுடுங்க தோட்டத்துக்கும்,பராமரிக்கும் உங்களுக்கும்.
எனக்கும் தோட்டம்னா உயிர். ஆனா, மாமாவுக்கும், இவருக்கும் ஆகாது.
பூச்சி வரும், புழு வரும்னு தடா. நல்லா பராமரிக்க நானும், அத்தையும் வாக்கு கொடுத்தாலும், அவங்க நம்ப தயாரில்லை.
உண்மையிலேயே ரொம்ப அழகாய் இருக்கு தோட்டம்.
சுத்தி காண்பித்ததுக்கு நன்றி!
காஃபி ரொம்பவே டேஸ்ட்!
வெள்ளை ரோஜா கொள்ளை அழகு!

Anonymous said...

தோட்டம் சூப்பர்.

Asiya Omar said...

செல்விக்கா இந்த ஹாட்டான காஃபிக்கு நன்றி.தோட்டத்தில் தென்னை சுற்றி புதினா ஐடியா அருமை.

Menaga Sathia said...

படங்கள் மிக அழகு,தோட்டத்துக்கு சுற்றி போடுங்கம்மா.அதைவிட காபி ரொம்ப சூப்பார்.அந்த போட்டோவை அப்படியே பார்த்துக்கிட்டிருக்கேன் குடிக்க மனம் வரலை...

செந்தமிழ் செல்வி said...

ஹர்ஷினிம்மா,
மிக்க நன்றி. குடிக்க வேறு காஃபி தரவா?

கீதா, எனக்கு நேரம் ரொம்ப குறைவு. காலையில் எழுந்ததும் தோட்டம் போய் ஒரு 'ஹாய்' சொல்லலைன்னா, அந்த நாள் என்னவோ மிஸ் பண்ணின மாதிரி இருக்கும். எந்த செடிக்கும் தண்ணீர் இல்லாமல் வாடியிருந்தால் பசிக்குதுன்னு அழற மாதிரி இருக்கும். நன்கு பராமரித்தால் பூச்சி வராது.

அம்மு, மிக்க நன்றி.

ஆசியா, தென்னையை சுற்றி வேறு செடிகள் சரியாக வராது. புதினா வேறு எங்கும் சரியாக வராது. ஸோ, இரண்டையும் ஃப்ரண்டாக்கிட்டேன். நன்றி.

மேனகா,
இது பாதி தோட்டம் தான். நான் வைக்க நினைக்கும் செடிகளுக்கு இடம் தான் போதவில்லை:-( நன்றி மேனகா.

அன்புடன் மலிக்கா said...

செல்விக்கா. சூப்பர் தோட்டம்
அந்த ரோஜா இந்தமல்லிக்குத்தானே!

இமாக்கு மட்டுந்தான் காளிஃப்ளவரா அது எனக்கு ரொம்ப பிடித்ததாச்சே ஹூம் எனக்கும் ஒன்னு

தோட்டமுன்னா எனக்கும் ஆசை வளர்க்க ஆனா இங்க [துபையில்]அதுக்கு வழியில்லைக்கா.

பால்கனியில் என்னமுடியுமோ அதை வளர்கிறேன்.
குட்டி குட்டி செடிகலாக.

ஸாதிகா said...

அட..உங்கள் வீட்டில் காலிஃபிளவர் காய்க்க்குதா?சொல்லவே இல்லை.அழகு கண்ணைக்கட்டுது தோழி.ஹ்ம்ம்ம்..உங்களை மாதிரி பிரயோஜனமாக காய்கறி செடிகள் பயிரிடாமல் காம்பவுண்ட் முழுக்க அழகு செடிகள்..அதான் க்ரோட்டன்ஸ் வளர்த்துட்டு வர்ரேன்.உங்களிடம் இருந்து தோட்டக்கலை நிறைய கற்றுக்கணும்.சொல்லித்தருவீங்களா தோழி?பீஸ் இல்லைதானே?தென்னையைச்சுற்றி புதினா..ஐடியாவுக்கு நன்றி.

geetha said...

செல்விக்கா! அம்மா வீட்டில் கொல்லைப்புறத்தில் நாங்களும் நிறைய காய்கறி செடிகள், பூச்செடிகள் போட்டிருந்தோம்.
காலை எழுந்ததும், எனக்கும் நேராய் போய் ஒரு குட்மார்னிங் சொல்லி அவங்களை நலம் விசாரிச்சிட்டு வந்தாதான் நிம்மதி!
அது ஒரு கனாக்காலமாய் போய்டிச்சு.
அதன் அருமையை என்னால் இவருக்கு புரியவைக்கமுடியலை.
காலிஃப்ளவர் வீட்டில்கூட வளரும்னு இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன்.இதற்குமுன் யார்வீட்டிலும் பார்த்ததில்லை.
இன்னைக்கு அவர்கிட்ட உங்க தோட்டத்தினை காண்பிச்சு மறுபடியும் அனுமதி கேட்கப்போறேன்.
சக்ஸஸ் ஆனா உங்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் தந்திட்றேன்!

மனோ சாமிநாதன் said...

செல்வி!

உண்மையிலேயே காலிஃப்ளவரும் கத்தரிக்காயும் பார்க்க ரொம்பவே அழகு! பாண்டிச்சேரி வரும்போது அப்படியே நிறைய காய்கறிகளை பறித்து வந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

Vijiskitchencreations said...

ஆஹா கன்னை பறிக்கும் தோடாம். எனக்கும் தோட்டம் என்றால் ரொம்ப பிடிக்கும். ஆமாம் எல்லாம் காயும் படம் போட்டு காட்டிங்க எப்போ சமையல் ஆரம்பிக்க போறிங்க. வீட்டு காய்கறிகள் ப்றித்து அதை சமைத்து காட்ட வேண்டாமா. வெயிட்டிங். சொல்ல மற்ந்துட்டேன் எப்ப பெயிண்டிங் போட போறிங்க. என்ன நம்ம பக்கம் வரவே இல்லை. நினைவு இருக்கா விஜியை. குட்டி பேரன் எப்படி இருக்கான். நல்ல ஹெல்ப் பன்றானா?

vanathy said...

செல்வி அக்கா, அழகான தோட்டம். அதென்ன இமாவுக்கு மட்டும் கொடுக்கின்றீர்கள். எனக்கு ஒரு மிளகாயாவது கொடுங்கள்!!!

செந்தமிழ் செல்வி said...

மலிக்கா,
என் வலைப்பக்கம் வந்ததற்காகவே அந்த ரோஜாவை உனக்கு தருகிறேன். காலிஃப்ளவர் இமாவுக்கு தருவதாக வாக்களித்து விட்டேன்:-) மொத்தம் 10 செடிகள் இருக்கு. மூன்றாவதாக பூக்கும் காலிஃப்ளவர் உனக்கு!! இரண்டாவது அதிராவுக்குன்னு சொல்லிட்டேன்:) பால்கனியில் செடி வளர்ப்பதே பெரிய விஷயம் தானே! வலைப்பூவிற்கு வந்தமைக்கும், பதிவிட்டமைக்கும் மிக்க நன்றி. பதிவு ஏதும் போடவில்லை என்றாலும் உன் ப்ளாக்கையும் நான் பார்ப்பேன்.

ஸ்னேகிதி ஸாதிகா,
எந்தக்கலையும் குருதட்சணை கொடுக்காமல் கத்துகிட்டா பலிக்காதாம். அப்படீன்னு சொல்லக் கேள்வி;-)
நீங்கள் சொல்லும் செடிகளும் இருக்கு, தொட்டியிலும், ஒரு ஓரமாகவும். நீங்க இது போல் கொஞ்சம் செடி வைக்கலாம். பாராட்டுக்கு நன்றி.

கீதா, கவலைப்படாதே! விரைவில் அந்நாள் வரும். காலிஃப்ளவர் இன்னும் கொஞ்சம் முன்பே வைத்திருக்கணும். இப்ப வெயில் வந்திடுச்சு. அந்த இடம் நிழலாகவும், அதிக தண்ணீர் விடுவதாலும் நல்லா இருக்கு. ட்ரீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

சகோதரி மனோ,
கண்டிப்பாக வாங்க. உங்களுக்கில்லாததா? சமைத்தும் தருகிறேன். எப்பன்னு மட்டும் சொல்லுங்க:-)

ஹாய் விஜி,
நலமா? என்ன விஜி அப்படி கேட்டுட்டே? எப்படி ஞாபகம் இல்லாமல் போகும்?
/எப்போ சமையல் ஆரம்பிக்க போறிங்க. வீட்டு காய்கறிகள் பறித்து அதை சமைத்து காட்ட வேண்டாமா. /
அதற்கான முன்னோடி தான் சமையல் பகுதி. சமைக்கமுன்பு என்ன செய்யணும்னு சொல்ல வேண்டாமா:-)
உன் பக்கம் வருவேன் விஜி, பதிவு தான் போட நேரம் இல்லை.
பெயிண்டிங் போட நேரம் வேணும்.
பேரன் நல்லா இருக்கான். இங்கு வரும் போது நல்லாவே ஹெல்ப் பண்ணுவான்:-)

வானதி, மிக்க நன்றி!
/எனக்கு ஒரு மிளகாயாவது கொடுங்கள்/
ஒன்றென்ன, ஒன்பதே தருகிறேன். எடுத்துக்கோ.

ஜீனோ said...

ஜீனோ டுக் தட் குட்டி ப்ரின்ஜால் செல்வி ஆன்ரீ..அது வைச்சு என்ன செய்யணும் எண்டு ஜீனோக்கு தெரியாது..பட் இட் லுக்ஸ் க்யூட்..ஹென்ஸ் ஜீனோ பிக்ட் இட். நீங்கோ "நோ"சொல்ல மாட்டேங்கோ எண்டு ஜீனோக்கு தெரியும். ஹி,ஹி!!

அதிராக்கா, செகண்ட் ப்ளவர்லே தம்பிக்கும் ஷேர் குடுக்கோணும்,ஓக்கை? சமைத்தே அனுப்பிட்டிங்கன்னா பெட்டரு! ;)

தோட்டம் நல்லா இருக்கு..சீக்கிரம் அடுத்த வியூ காட்டுங்கோ..ஓ..ஓ!

சாந்தி மாரியப்பன் said...

உங்க தோட்டத்துக்கு சுத்திப்போடுங்க. அவ்வளவு அழகா இருக்கு. எனக்கும் தோட்டம்ன்னா உயிர்.அப்புறம் அந்தக்கீரை வெள்ளை பொன்னாங்கண்ணின்னு நினைக்கிறேன்.

செந்தமிழ் செல்வி said...

ஜீனோ, அந்த கத்தரிக்காய் மட்டுமல்ல. இன்னும் இருக்கிற எல்லா கத்தரிக்காய்களையும் எடுத்துக்கோ.
அந்த காலிஃபிளவருக்கு எத்தனை பேர் தான் பங்கு போடுவீங்க?
தேங்க்ஸ் ஜீனோ, அடுத்த வியூ காட்டியாச்சு:-)

அமைதிச்சாரல்,
வருகைக்கும், பதிவிற்கும் மிக்க நன்றி. அழகா இருக்குன்னு சொன்னதுக்கு நன்றி.
/அந்தக்கீரை வெள்ளை பொன்னாங்கண்ணின்னு நினைக்கிறேன்/
இருக்கலாம். ஆனால், மார்க்கெட்டில் இந்தக் கீரை கிடைப்பதில்லை. வட இந்தியாவில் தான் அதிகம் கிடைக்குது. இதன் விதை கூட ஒரு பெங்காலி பையன் கொடுத்தார்.

இமா க்றிஸ் said...

அம்மாவுக்காக செல்வி கொடுத்த விருதைத் திறந்து காண்பிக்கையில் என் 'பரிசு' கண்ணில் பட்டது. படிக்காமலே 'இது என்னோடது' என்று மனது சொன்னது. ;) நன்றி செல்வி. ;)

இதென்னது!! எல்லாரும் புகையறாங்கோ!! நல்லால்ல. ;(


அது 'கங்குன்' கீரைதானே! மம்மியும் அப்படிப் போலதான் இருக்கு என்கிறாங்க செல்வி.

செந்தமிழ் செல்வி said...

இமா,
அம்மா இப்பவாவது விருதை பார்த்தாங்களே, சந்தோஷம்.

//எல்லாரும் புகையறாங்கோ!!//
கண்டுக்காதீங்க இமா, போகட்டும்.

//அது 'கங்குன்' கீரைதானே!//
கரெக்ட் இமா, அப்படித்தான் அந்தப் பையன் சொன்னார்.

Unknown said...

amma ungal garden superr plus cauliflower super, amma naan dubai vasikiren,naan nithyalamalli chedi vaidthulen but pogkavillai only leaves are growing pls give some tips amma.

செந்தமிழ் செல்வி said...

பிரேமா.
பாராட்டுக்கு மிக்க நன்றி!
இப்ப நேரம் இல்லை. சின்ன பிரேக்...
முடிந்து வந்ததும் சொல்கிறேன்.

Post a Comment