Monday, May 10, 2010
பிளாக்கில் எழுதி ரொம்ப நாட்கள் ஆனது போல் இருக்கு. இன்னமும் இரண்டு வாரங்களுக்கு கொஞ்சம் அதிகமான வேலை தான். உறவினர் வருகை, பேரனின் பிறந்தநாள் எல்லாம் முடித்த பிறகு தான் நேரம் கிடைக்கும். கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் இந்தப் பதிவு.
வருடாந்திரப் பொருட்களைப் பற்றியே தொடர்ந்து எழுதுவது போல் இருக்குன்னு போன பதிவோடு முடித்து விடலாம் என்று இருந்தேன். ஆனால், ஒரு விஷயத்தைப் பற்றி சொல்ல வந்தால் முழுவதும் சொல்லி முடித்தால் தானே உபயோகமாக இருக்கும். அது மட்டுமன்றி மேனகாவின் வேண்டுகோளும் முக்கிய காரணம்.
வருடாந்திரப் பொருட்கள் பாதுகாக்கும் முறை,பராமரித்தல்,சுத்தப்படுத்துதல் எல்லாம் சொல்லியாகி விட்டது. இந்தப் பகுதியில் எந்த அளவு வாங்குவது என்பது பற்றியும் சொல்லி விடுகிறேன்.
சராசரியாக 4 பேர் (2 பெரியவர்கள் + 2 சிறியவர்கள்) உள்ள குடும்பத்திற்கான, ஒரு வருடத்திற்கான அளவு இது. அவ்வப்போது வரும் விருந்தினர்களுக்கும் சேர்த்தே இருக்கும்.
அரிசி - 225 கிலோ (3 x 75 கிலோ),
இட்லி அரிசி - 50 கிலோ,
கோதுமை - 50 கிலோ,
துவரம் பருப்பு - 15 கிலோ (மாதம் ஒரு கிலோ + விருந்தினர் செலவு),
உளுத்தம் பருப்பு - 15 கிலோ,
கடலைப் பருப்பு - 3 கிலோ,
பாசிப்பருப்பு - 3 கிலோ,
புளி - 5 கிலோ,
மிளகாய் - 2 கிலோ,
கொத்தமல்லி (தனியா) - 3 கிலோ
கடுகு - 2 கிலோ,
சீரகம் - 2 கிலோ (தினமும் ரசம் வைப்பதாக இருந்தால் 2 கிலோ, இல்லைன்னா ஒரு கிலோ போதும்),
மிளகு -1/2 கிலோ,
சோம்பு - 1/2 கிலோ,
வெந்தயம் - 2 கிலோ,
கசகசா -1/2 கிலோ,
மஞ்சள் தூள் - 1/2 கிலோ,
பொட்டுக்கடலை - 5 கிலோ,
நிலக்கடலை - 2 கிலோ,
கொண்டக்கடலை - 2 கிலோ,
பச்சைப் பட்டாணி - 2 கிலோ,
பாசிப்பயிறு (முழு) - 2 கிலோ,
தட்டைப்பயிறு (காராமணி) - 2 கிலோ,
கொள்ளு - 2 கிலோ,
ராகி (கேழ்வரகு)- 5 கிலோ,
வெள்ளை சோயா - 2 கிலோ,
கருப்பு சோயா - 1 கிலோ,
மொச்சை - 1 கிலோ,
சின்ன ஜவ்வரிசி - 2 கிலோ (உப்புமா செய்வதற்கும், பணியாரம், இட்லிக்கு மாவு அரைக்கும் போது சேர்க்க),
கெட்டி அவல் - 2 கிலோ,
மீல் மேக்கர் -1 கிலோ,
பட்டை - 25 கிராம்,
ஏலக்காய் - 25 கிராம்,
கிராம்பு - 25 கிராம்,
பிரிஞ்சி இலை -5 கிராம்,
அன்னாசிப்பூ - 25 கிராம்,
மராட்டி மொக்கு - 25 கிராம்.
வருடத்திற்கும் தேவையான சாம்பார் பொடி அரைப்பதற்கு போதுமான மிளகாயும், தனியாவும் இதனுடன் சேர்ந்துள்ளது. சாம்பார் பொடி அரைக்கவில்லையெனில். ஒரு கிலோ மிளகாயையும், ஒரு கிலோ தனியாவையும் குறைத்துக் கொள்ளலாம்.
எனக்குத் தெரிந்தவரை எல்லாப் பொருட்களையும் கொடுத்துள்ளேன்.விடுபட்டவை எதுவும் இருந்தால் ஞாபகம் வரும் போது சொல்கிறேன். இங்கு கொடுக்கப்பட்ட அளவுகள் தோராயமான அளவு தான். இதிலுள்ள பொருட்களை கூட்டி, குறைத்து வாங்குவது அவரவர் விருப்பம்.
அரிசி மற்றும் கோதுமை தவிர்த்து எஞ்சிய பொருட்கள் வாங்க இந்த வருடம் சுமார் நான்காயிரம் ரூபாய் தேவைப்படும். அரிசியும், கோதுமையும் தரம் பொறுத்து விலை மாறும். மற்ற பொருட்களும் வெவ்வேறு தரத்தில் உள்ளன. இது முதல் தரத்திற்கான விலை. வருடம் ஒரு முறை வாங்குவதால், விலையைப் பார்க்கக் கூடாது. விலை குறைவென தரக்குறைவான பொருட்களை வாங்குவது புத்திசாலித்தனமல்ல.
மொத்தமாக, சீசனில் வாங்குவதால் பின்னாளில் வரக்கூடிய விலையேற்றத்தைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் வருடம் ழுழுமைக்கும் ஒரே மாதிரியான பொருட்கள் இருப்பதால் சமைப்பதற்கு தேவையான அளவுகளும் மாறாது. ருசியும் மாறாது.
கிடைக்ககூடிய இடங்கள் என்றால், எனக்குத் தெரிந்தவை மட்டும் தான் என்னால் சொல்ல முடியும்.
1) ஈரோடு அருகே அந்தியூர் சந்தையில் எல்லாப் பொருட்களும் தரமானதாகக் கிடைக்கும்.
2) இராசிபுரம் அருகே பேளுக்குறிச்சி சந்தையில் நல்ல பொருட்கள் கிடைக்கும். ஆனால், கொஞ்சம் விழிப்புடன் வாங்க வேண்டும். நன்கு தெரிந்தவர்கள் யாரேனும் கூட இருந்தால் நலம்.
3) சேலத்தில் லீ பஜார் என்னுமிடத்தில் எல்லாம் கிடைக்கும்.
4) கரூர், திண்டுக்கல்லில் மிளகாய் மட்டும் கிடைக்கும்.
5) சில டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்களில் சீசனில் இதற்கென தனி பிரிவே இருக்கும். அங்கேயே சில்லறையில் வாங்குவதற்கும், மொத்த பொருட்கள் வாங்குவதற்கும் விலை வித்தியாசம் உண்டு.
இவ்வளவு பொருட்களை நாம் முன் கூட்டியே வாங்கி விடுவதால், மாதாந்திர மளிகை லிஸ்ட்டில் கணிசமான தொகை குறையும். இவை போக ரவை, மைதா, எண்ணெய் வகைகள், சோப், பேஸ்ட் போன்றவைகள் மட்டும் வாங்கினால் போதும்.
கூடுமானவரை எல்லா விளக்கங்களும் கொடுத்து விட்டேன் என நினைக்கிறேன். அடுத்த பகுதி என்னவாக இருக்கும்னு யோசிச்சுகிட்டேஏஏஏஏஏ இருங்க:-)
Labels: சமையல்-பொது
Sunday, April 25, 2010
சமைக்கும் முன் - பகுதி 4 (வருடாந்திர பொருட்கள் தேர்வு)
15 comments Posted by செந்தமிழ் செல்வி at 11:31 PMபதிவு போட்டு ரொம்ப நாளாகி விட்டது. ஊருக்கு போனது, பேரன் வந்தது எல்லாம் போக, இங்கு சொல்லியவைகளை நான் செய்து கொண்டு இருப்பதும் நேரம் இல்லாததற்கு ஒரு காரணம். புரியலையா? வருடாந்திர சாமான்கள் வாங்கியாச்சு. காய வைத்து சுத்தம் செய்யணும். போட்டு வைக்கும் பாத்திரங்களை கழுவி காய வைக்கணும். வைக்கும் இடத்தை துடைத்து அடுக்கணும். எவ்வளவு வேலைகள்? அப்படி தான் இப்ப தோணும். ஆனால், சாமான்கள் வீட்டில் இருந்தால் மன மகிழ்ச்சியோடு சமைப்பதே தனி சுகம் தான்.
வருட சாமான்கள் வாங்க சரியான பருவம் மாசி மாதம் கடைசி முதல் பங்குனி மாதம் முதல் பாதி வரை (பிப்ரவரி 15 தேதியில் இருந்து மார்ச் 15 தேதி வரை) எப்படி பாதுகாப்பதுன்னு போன பதிவில் சொன்னேன். எப்படி பார்த்து வாங்கணும்னு இப்ப சொல்றேன்.
அரிசி அவரவர் விருப்பம்.வெள்ளைப் பொன்னி, கர்நாடகா பொன்னி, ஆத்தூர் கிச்சடி, மணச்சநல்லூர் பொன்னி இதெல்லாம் சாப்ப்பாட்டுக்கு நன்றாக இருக்கும். பவானியும் நன்றாக இருக்கும். சாதம் நீளநீளமாக இருக்கும். சிலருக்கு பிடிக்காது.
இட்லிக்கு ஐ.ஆர்.20 நன்றாக இருக்கும். நிறையப் பேர் கார் அரிசி என்று சொல்லப்படும் குண்டு அரிசியை பயன்படுத்துவார்கள். அந்த அரிசி மாவு காணும். ஆனால், ஐ.ஆர்.20 தான் இட்லி சாஃப்டாக இருக்கும்.
துவரம் பருப்பில் பச்சைபருப்பு அதிகம் கலக்காத, பாலிஷ் போடாத பருப்பு என்றால் தான் சாம்பார் ருசியாக இருக்கும். பருப்பு சிறிதும், பெரிதுமாக இல்லாமல் ஒன்று போல் இருக்க வேண்டும். சொத்தையான வெள்ளைப் பருப்பு, ஓட்டைப் பருப்பு இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். பருப்பில் தோல் அதிகம் ஒட்டி இருக்கக் கூடாது.
உளுத்தம் பருப்பு பார்க்கும் போதே ஒரு பளபளப்பு தெரியணும். அள்ளினால் நல்லா மாவு போல் வெள்ளையாக கையில் ஒட்டணும். சிலர் முழு உளுந்து வாங்கி உடைத்துக் கொள்வார்கள். அதற்கு தண்ணீர் குறைவான இடத்தில் விளைந்த பயிறே நன்றாக இருக்கும். முழு உளுந்தில் நல்லெண்ணெய் தடவி ஒரு நாள் முழுவதும் காய வைத்து, திருகு கல்லில் போட்டு உடைத்து, அதற்கென உள்ள சல்லடையில் சலிப்பார்கள். இப்பல்லாம், மிஷனில் கூட உடைத்து தருகிறார்கள். ஆனால், தோலை கழுவி எடுப்பதே பெரிய வேலையாக இருக்கும். சிலர் உடைத்த தோலுடன் கூடிய பருப்பும் வாங்குவார்கள். அதற்கு தோல் நல்ல கருப்பாக இருப்பதாக பார்த்து வாங்கணும்.
கடலைப்பருப்பு பெரிதாக இல்லாமல் சிறு பருப்பாக ஒன்று போல் இருக்கணும். கொஞ்சம் லேசாக மினுமினுப்பு இருக்கும். ஓட்டை, தோல் இருக்கக் கூடாது.
உளுத்தம் பருப்பு பார்க்கும் போதே ஒரு பளபளப்பு தெரியணும். அள்ளினால் நல்லா மாவு போல் வெள்ளையாக கையில் ஒட்டணும். சிலர் முழு உளுந்து வாங்கி உடைத்துக் கொள்வார்கள். அதற்கு தண்ணீர் குறைவான இடத்தில் விளைந்த பயிறே நன்றாக இருக்கும். முழு உளுந்தில் நல்லெண்ணெய் தடவி ஒரு நாள் முழுவதும் காய வைத்து, திருகு கல்லில் போட்டு உடைத்து, அதற்கென உள்ள சல்லடையில் சலிப்பார்கள். இப்பல்லாம், மிஷனில் கூட உடைத்து தருகிறார்கள். ஆனால், தோலை கழுவி எடுப்பதே பெரிய வேலையாக இருக்கும். சிலர் உடைத்த தோலுடன் கூடிய பருப்பும் வாங்குவார்கள். அதற்கு தோல் நல்ல கருப்பாக இருப்பதாக பார்த்து வாங்கணும்.
கடலைப்பருப்பு பெரிதாக இல்லாமல் சிறு பருப்பாக ஒன்று போல் இருக்கணும். கொஞ்சம் லேசாக மினுமினுப்பு இருக்கும். ஓட்டை, தோல் இருக்கக் கூடாது.
பாசிப்பருப்பு பெரிதாக இருந்தால் சுவை இருக்காது. சிறிசாக இருக்கணும். வெள்ளை கலராக இல்லாமல் மஞ்சள் கலராக இருக்கணும். பச்சை தோல் இருக்கக் கூடாது.
கொத்தமல்லி ரொம்ப பொடியாக இல்லாமல் கொஞ்சம் பெரிசா இருந்தால் தான் மணமாக இருக்கும். அள்ளும் போதே மணக்கும். அதிகம் களிமண் உருண்டைகள், குச்சி, தூசு இல்லாமல் பார்த்து வாங்கணும்.
கடுகு சிறுத்தாலும் காரம் போகாதுன்னு சும்மாவா சொன்னாங்க? சிறு கடுகு தான் நல்லது. கொஞ்சம் பெரிதாக இருந்தால், தாளித்ததும் முழிமுழிச்சு பார்த்துகிட்டு இருக்கும்:-) நிறைய பேருக்கு அது பிடிக்காது. கல், மண் இல்லாமல் பார்த்து வாங்கணும் (எப்படியும் இருக்கும், குறைவாக இருப்பதாக பார்க்கணும்).
மிளகாய் குண்டு மிளகாயை விட நீள மிளகாய் தான் தினசரி உபயோகத்திற்கு நல்லது. பொடி அரைக்கவும் நீள மிளகாய் தான் நல்லது. செத்துப் போன மிளகாய் அதிகம் இல்லாமல் பார்க்க நல்ல சிவப்பு கலராக, ஆட்டிப் பார்த்தால் நிறைய விதை ஆடுவது
போல இருக்கணும்.
புளி வரட்டு வரட்டுன்னு இல்லாமல் நல்லா சதைப்பிடிப்பாக இருக்கணும். கொட்டை, கோது அதிகம் இல்லாமல் சுத்தமாக இருக்கான்னு பார்க்கணும். புளியை சிறிது வாயில் போட்டு பார்த்தால் புளிப்பும் இருக்கணும், லேசான இனிப்பும் கலந்து ருக்கணும். புளிப்பு மட்டும் இருந்தால் குழம்பு வெடிப்பாக இருக்கும். கண் அடிக்க வைக்கும்;-) இனிப்பாக இருந்தாலும் குழம்பு இனித்துக் கொண்டு சுவை இருக்காது.
தட்டப்பயிறு (காராமணி) இளம் சிவப்பில் ஒன்று போல் முத்தாக இருக்கணும். ஓட்டை இருக்கக் கூடாது. அதிகம் பிஞ்சு பயிறு இருக்கக் கூடாது. பாசிபயிறும் பச்சைக்கலரில் ஒரே சைஸில் இருக்கணும். வெள்ளை கோடு அதிகம் தெரியக் கூடாது.
கொண்டக்கடலை அதிக சுருக்கம் இல்லாமல், ஓட்டை இல்லாமல் பெரிசு பெரிசா இருக்கணும்.
பொட்டுக்கடலை பெரிசு பெரிசாக இருக்கணும். பொடியாக இருந்தால் பிஞ்சு கடலையை வறுத்ததுன்னு அர்த்தம். கையில் நசுக்கினால் பொருபொருன்னு பொடியாகணும்.
கொத்தமல்லி ரொம்ப பொடியாக இல்லாமல் கொஞ்சம் பெரிசா இருந்தால் தான் மணமாக இருக்கும். அள்ளும் போதே மணக்கும். அதிகம் களிமண் உருண்டைகள், குச்சி, தூசு இல்லாமல் பார்த்து வாங்கணும்.
கடுகு சிறுத்தாலும் காரம் போகாதுன்னு சும்மாவா சொன்னாங்க? சிறு கடுகு தான் நல்லது. கொஞ்சம் பெரிதாக இருந்தால், தாளித்ததும் முழிமுழிச்சு பார்த்துகிட்டு இருக்கும்:-) நிறைய பேருக்கு அது பிடிக்காது. கல், மண் இல்லாமல் பார்த்து வாங்கணும் (எப்படியும் இருக்கும், குறைவாக இருப்பதாக பார்க்கணும்).
மிளகாய் குண்டு மிளகாயை விட நீள மிளகாய் தான் தினசரி உபயோகத்திற்கு நல்லது. பொடி அரைக்கவும் நீள மிளகாய் தான் நல்லது. செத்துப் போன மிளகாய் அதிகம் இல்லாமல் பார்க்க நல்ல சிவப்பு கலராக, ஆட்டிப் பார்த்தால் நிறைய விதை ஆடுவது
போல இருக்கணும்.
புளி வரட்டு வரட்டுன்னு இல்லாமல் நல்லா சதைப்பிடிப்பாக இருக்கணும். கொட்டை, கோது அதிகம் இல்லாமல் சுத்தமாக இருக்கான்னு பார்க்கணும். புளியை சிறிது வாயில் போட்டு பார்த்தால் புளிப்பும் இருக்கணும், லேசான இனிப்பும் கலந்து ருக்கணும். புளிப்பு மட்டும் இருந்தால் குழம்பு வெடிப்பாக இருக்கும். கண் அடிக்க வைக்கும்;-) இனிப்பாக இருந்தாலும் குழம்பு இனித்துக் கொண்டு சுவை இருக்காது.
தட்டப்பயிறு (காராமணி) இளம் சிவப்பில் ஒன்று போல் முத்தாக இருக்கணும். ஓட்டை இருக்கக் கூடாது. அதிகம் பிஞ்சு பயிறு இருக்கக் கூடாது. பாசிபயிறும் பச்சைக்கலரில் ஒரே சைஸில் இருக்கணும். வெள்ளை கோடு அதிகம் தெரியக் கூடாது.
கொண்டக்கடலை அதிக சுருக்கம் இல்லாமல், ஓட்டை இல்லாமல் பெரிசு பெரிசா இருக்கணும்.
பொட்டுக்கடலை பெரிசு பெரிசாக இருக்கணும். பொடியாக இருந்தால் பிஞ்சு கடலையை வறுத்ததுன்னு அர்த்தம். கையில் நசுக்கினால் பொருபொருன்னு பொடியாகணும்.
சீரகம் சன்னமாக, லேசாக தேய்த்து முகர்ந்தாலே மணக்கணும். கருப்பா இருந்தால் அது பழைய சீரகம். புதுசுன்னா ஒரு மாதிரி பிரவுனாக இருக்கணும்.
சோம்பு பச்சை கலரில் இருக்கணும். மஞ்சளாக இருந்தால் அது பழசு. ஒன்று போல் இருக்கணும். பிஞ்சு அதிகம் கலந்து ஏமாற்றி விடுவார்கள். பார்த்து வாங்கணும்.
கசகசா மண் போல கலரில் இல்லாமல், வெள்ளையாக இருக்கான்னு பார்த்து வாங்கணும்.
மிளகு சுருக்கம் அதிகம் இல்லாமல், மணமாக, நல்ல கருப்பு நிறத்தில் இருக்கணும்.
ஏலக்காய் பச்சை கலரில் திரண்டு இருக்கணும்.
வெந்தயம் மஞ்சள் வண்ணத்தில் கொஞ்சம் சதைப்பிடிப்பாக இருப்பது போல் இருக்கணும். பச்சை அதிகம் கலந்து இருக்கக் கூடாது.
வாங்கும் பருவம் முடிந்து விட்டதேன்னு நினைக்க வேண்டாம். இப்பக் கூட ஒண்ணும் மோசமில்லை. பருப்பு விலை ஏறி, திரும்பவும் இறங்கி உள்ளது. புளி விலையும் குறைந்து உள்ளது. மற்ற பொருட்களின் விலை ரொம்ப அதிகமாக ஏறவில்லை. வாங்கணும்னு நினைப்பவர்கள் இப்பவும் வாங்கலாம்.
பி.கு: இதையும் எந்தப் புத்தகத்திலிருந்தாவது காப்பி அடிச்சு போட்டேனான்னு சொல்வாங்களான்னு பார்ப்போம்:-)
சோம்பு பச்சை கலரில் இருக்கணும். மஞ்சளாக இருந்தால் அது பழசு. ஒன்று போல் இருக்கணும். பிஞ்சு அதிகம் கலந்து ஏமாற்றி விடுவார்கள். பார்த்து வாங்கணும்.
கசகசா மண் போல கலரில் இல்லாமல், வெள்ளையாக இருக்கான்னு பார்த்து வாங்கணும்.
மிளகு சுருக்கம் அதிகம் இல்லாமல், மணமாக, நல்ல கருப்பு நிறத்தில் இருக்கணும்.
ஏலக்காய் பச்சை கலரில் திரண்டு இருக்கணும்.
வெந்தயம் மஞ்சள் வண்ணத்தில் கொஞ்சம் சதைப்பிடிப்பாக இருப்பது போல் இருக்கணும். பச்சை அதிகம் கலந்து இருக்கக் கூடாது.
வாங்கும் பருவம் முடிந்து விட்டதேன்னு நினைக்க வேண்டாம். இப்பக் கூட ஒண்ணும் மோசமில்லை. பருப்பு விலை ஏறி, திரும்பவும் இறங்கி உள்ளது. புளி விலையும் குறைந்து உள்ளது. மற்ற பொருட்களின் விலை ரொம்ப அதிகமாக ஏறவில்லை. வாங்கணும்னு நினைப்பவர்கள் இப்பவும் வாங்கலாம்.
பி.கு: இதையும் எந்தப் புத்தகத்திலிருந்தாவது காப்பி அடிச்சு போட்டேனான்னு சொல்வாங்களான்னு பார்ப்போம்:-)
Labels: சமையல்-பொது
Saturday, April 10, 2010
சமைக்கும் முன் - பகுதி-3 (வருட சாமான்கள் பாதுகாப்பு)
53 comments Posted by செந்தமிழ் செல்வி at 8:20 PMஎந்தெந்த சாமான்களை எப்படி பாதுகாப்பதுன்னு இந்த பகுதியில் சொல்லப் போகிறேன். உண்மையில் எத்தனை பேருக்கு இது பயன்படும்னு தெரியலை. இருந்தாலும் ஓரிருவருக்காவது பயன்பட்டால் சந்தோஷமே. வெளிநாட்டில் இருப்பவர்கள் இதனைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். ஆனால், இங்கு இருப்பவர்களுக்கு இப்படி மொத்தமாக வாங்கி வைப்பது தான் நல்லதாக இருக்கும்.
இந்தப் பருவத்தில் எல்லாப் பொருட்களின் விலையும் குறைவாக இருப்பதும் ஒரு காரணம். இன்னொன்று மொத்தமாக வாங்குவதால், பொருட்கள் ஒரே மாதிரி இருக்கும். மாதாமாதம் வாங்கும் போது உளுத்தம்பருப்பே ஒரு மாதம் மாவு காணும். அடுத்த மாதம் சரியாக இருக்காது. முதல் மாதம் போல் போட்டால் சரி வராது. மிளகாய், புளி, கடுகு வகைகளும் அப்படியே. ஒரு வகை மிளகாய் காரம் அதிகமாக இருக்கும். சிலவகை காரமே இருக்காது. மொத்தமாக வாங்கி பயன்படுத்தும் போது ஒரே நாளில் நிதானம் தெரிந்து விடும். பிறகு எவ்வளவு பேர் வந்தாலும் சரியாக சமைக்க முடியும்.
தினப்படி உபயோகத்திற்கென்று கொஞ்சமாக எடுத்து வைத்து பயன்படுத்த வேண்டும். எந்த ஒரு பொருளை எடுப்பதானாலும் ஈரக்கையால் எடுக்காமல், சுத்தமான உலர்ந்த கையால் எடுக்க வேண்டும். தினப்படி உபயோகத்திற்கென முன்னால் வைக்கும் பொருட்கள் தீர்ந்து போகப் போகிறதென்றால், கொஞ்சம் முன்பே நிதானமாக பெரிய கண்டெயினரில் இருந்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சமைக்கும் போது அவசரம் அவசரமாக எடுத்தால் தண்ணீர் ஏதும் படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
காய வைத்த பொருட்கள் நன்கு ஆறியபின் தான் டப்பாக்களில் போட வேண்டும். டப்பாக்களையும் நன்கு கழுவி வெயிலில் காய வைத்து, சூடு ஆறிய பின் தான் பொருட்களை கொட்ட வேண்டும்.
எந்தெந்த சாமான்களை எப்படி பாதுகாப்பாதுன்னு இந்த பகுதியில் சொல்லப் போகிறேன்.உண்மையில் எத்தனை பேருக்கு இது பயன்படும்னு தெரியலை. இருந்தாலும் ஓரிருவருக்காவது பயன்பட்டால் சந்தோஷமே. வெளிநாட்டில் இருப்பவர்கள் இதனைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். ஆனால், இங்கு இருப்பவர்களுக்கு இப்படி மொத்தமாக வாங்கி வைப்பது தான் நல்லதாக இருக்கும்.
இந்தப் பருவத்தில் எல்லாப் பொருட்களின் விலையும் குறைவாக இருப்பதும் ஒரு காரணம். இன்னொன்று மொத்தமாக வாங்குவதால், பொருட்கள் ஒரே மாதிரி இருக்கும். மாதாமாதம் வாங்கும் போது உளுத்தம்பருப்பே ஒரு மாதம் மாவு காணும். அடுத்த மாதம் சரியாக இருக்காது. முதல் மாதம் போல் போட்டால் சரி வராது. மிளகாய், புளி, கடுகு வகைகளும் அப்படியே. ஒரு வகை மிளகாய் காரம் அதிகமாக இருக்கும். சிலவகை காரமே இருக்காது. மொத்தமாக வாங்கி பயன்படுத்தும் போது ஒரே நாளில் நிதானம் தெரிந்து விடும். பிறகு எவ்வளவு பேர் வந்தாலும் சரியாக சமைக்க முடியும்.
தினசரி உபயோகத்திற்கென்று கொஞ்சமாக எடுத்து வைத்து பயன்படுத்த வேண்டும். எந்த ஒரு பொருளை எடுப்பதானாலும் ஈரக்கையால் எடுக்காமல், சுத்தமான உலர்ந்த கையால் எடுக்க வேண்டும். தினசரி உபயோகத்திற்கென முன்னால் வைக்கும் பொருட்கள் தீர்ந்து போகப் போகிறதென்றால், கொஞ்சம் முன்பே நிதானமாக பெரிய கண்டெயினரில் இருந்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சமைக்கும் போது அவசரம் அவசரமாக எடுத்தால் தண்ணீர் ஏதும் படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
காய வைத்த பொருட்கள் நன்கு ஆறியபின் தான் டப்பாக்களில் போட வேண்டும். டப்பாக்களையும் நன்கு கழுவி வெயிலில் காய வைத்து, சூடு ஆறிய பின் தான் பொருட்களை கொட்ட வேண்டும்.
அரிசி:
====
அரிசியை வாங்கி சாக்குடன் வைக்காமல் 2 நாட்கள் தனி அறையில் கொட்டி வைத்திருந்து (முடிந்தால் புடைத்து) பிளாஸ்டிக் அல்லது எவர்சில்வர் கண்டெயினர்களில் கொட்டி வைக்கணும். இடையிடையே நன்கு காய்ந்த மிளகாயை போட வேண்டும். வசம்பை ஒரு துணியில் முடிந்து உள்ளே புதைத்தும் வைக்கலாம். நன்கு காய்ந்த வேப்பிலையை அடியில் போட்டு மேலே பேப்பர் போட்டு அதன் மேலும் அரிசி கொட்டலாம். இப்படி வைத்தால் வருடத்திற்கும் அரிசியில் வண்டு வைக்காது. தினப்படி உபயோகத்திற்கு சின்ன பாத்திரத்தில் கொஞ்சமாக எடுத்து வைத்து உபயோகிக்கணும்.
பருப்பு வகைகள்:
============
பருப்பு வகைகளை வாங்கி சுத்தம் செய்து வெயிலில் நன்கு காய வைக்கவும். வெயிலில் இருந்து எடுத்து நன்றாக ஆற விடவும். பருப்பு போட்டு வைக்கப் போகும் பாத்திரங்களை நன்கு கழுவி வெயிலில் காய வைத்து, ஆற வைத்து இடைக்கு இடை காய்ந்த மிளகாய் போட்டு டைட்டாக மூடி வைக்கவும். உபயோகிக்க தனியாக ஒரு கிலோ அளவுக்கு சின்ன டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளவும். தீர்ந்த பின் ஈரமில்லாத கையால் எடுத்துக் கொண்டு மீண்டும் இறுக்கமாக மூடி வைத்தால் வண்டு, பூச்சி வரவே வராது.
கடுகு:
====
கடுகை தண்ணீரில் கழுவி கல் அரித்து, தண்ணீரை வடித்து 2, 3 நாட்களுக்கு நன்கு காய வைத்து, ஆற விட்டு டப்பாவில் போட்டு வைக்கணும். தினப்படி உபயோகத்திற்கு கொஞ்சம் சின்ன டப்பாவில் வைத்துக் கொள்ளணும்.
மசாலா பொருட்கள்:
==============
சீரகம், சோம்பு, கசகசா, வெந்தயம், மிளகு போன்றவற்றை சுத்தப்படுத்தி, நன்கு வைத்து சூடு ஆறிய பின், சுத்தமாக கழுவி காய வைத்து ஆற வைத்த டப்பாக்களில் போட்டு வைத்து விட்டால் வருடமும் கெடாமல் இருக்கும்.
கொத்தமல்லியை சுத்தம் செய்து பாதியை வறுத்து வைத்துக் கொண்டு மீதியை நன்கு காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
மிளகாய்:
=======
மிளகாயை காய வைத்து காம்பை நீக்கி பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டு வைக்கணும். பாலிதீன் கவர்களில் போட்டு இறுக கட்டியும் டப்பாக்களில் போடு வைக்கலாம். காம்புடன் வைத்தால் வண்டு வரும் வாய்ப்பு உள்ளது.
புளி:
===
புளியை நன்கு காய வைத்து கொட்டை, தூசு, கோது நீக்கி, கல் உப்பு சிறிது சேர்த்து ஆரஞ்சு பழ அளவு உருண்டைகளாக்கி சுத்தமான பிளாஸ்டிக் கவரில் போட்டு இறுக்கமாகக் கட்டி, ஃபிரீஸரில் அடுக்கி வைத்து விட்டால் வருடம் முழுவதும் நிறம் மாறாத புது புளியாக இருக்கும்.
சோயா, சுண்டல், பொட்டுக்கடலை போன்றவைகளை நன்கு காயவைத்து ஆறியபின் டப்பாக்களில் போட்டு வைக்கலாம்.
வருட சாமான்கள் வாங்கிய பின் சாம்பார் பொடிக்கும் வறுத்து அரைத்து வைத்து விடலாம். (எங்கம்மா அரைக்கும் சாம்பார் பொடி ஒரு வருடமே ஆனாலும் வண்டு வைக்காமல் இருக்கும்.)
கொத்தமல்லி கூட வறுத்து பொடி அரைத்து வைத்துக் கொள்ளலாம். கொஞ்சம் சோம்புப் பொடி, சீரகப்பொடி, மிளகுப்பொடியும் அரைத்து வைத்துக் கொண்டால் அவசர சமையலுக்கு உதவும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய், கொஞ்சம் ஜாதிக்காய் சேர்த்து பொடி செய்து வைத்துக் கொண்டால், பிரியாணி, குருமா, அசைவ குழம்புகளுக்கு பயன்படுத்த வசதியாக இருக்கும். நிறைய பேருக்கு முழுதாக தாளித்து வாயில் பட்டால் பிடிக்காது.
சாம்பார் பொடி தவிர மீதிப் பொடிகளை மாதம் ஒருமுறை கொஞ்சம் ஃப்ரீயாக இருக்கும் போது அரைத்து வைத்துக் கொள்ளலாம்.
இது போக இன்னும் சில பொடிகளையும் செய்து வைத்துக் கொண்டால் அவசரமாக சமைக்கும் போது டென்ஷனின்றி சமைக்கலாம். என்னென்ன பொடிகள் என்று அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
முக்கியமாக சமையலறையில் எப்போதும் ஒரு பேனாவும், சின்ன நோட்டும் இருப்பது நல்லது. எந்தப் பொருள் தீர்ந்தாலும் அதில் குறித்து வைத்து விட்டால், மாதாந்திர லிஸ்ட் எழுதும் போது மறக்காமல் சேர்க்க வசதியாக இருக்கும்.
கேஸ் சிலிண்டர் மாற்றும் தேதி, அரிசி மூட்டை ஓப்பன் செய்யும் தேதி எல்லாவற்றையும் குறித்து வைத்து விட்டால், தீரும் நாள் உத்தேசமாக தெரிவதால், நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும்.
மூச்சு வாங்குது. கொஞ்சம் ரெஸ்ட்..........
Labels: சமையல்-பொது
Wednesday, March 31, 2010
சமையல் பற்றிய தொடர்ச்சி ரொம்ப நாளாக எழுதாமல் அப்படியே இருக்கு. எப்படியாவது இன்று அடுத்த பகுதி எழுத முடிவு பண்ணியாச்சு.
போன பகுதியில் சமைக்கும் போதும், சமையலுக்கு முன்னும் செய்ய வேண்டியது பற்றி சொன்னேன். இப்ப சமையலுக்கான பொருட்களைப் பற்றி சொல்கிறேன்.
எப்பவும் ஒரு மாதத்திற்கு வேண்டிய பொருட்களை மாத ஆரம்பத்திலேயே வாங்கி வைத்துக் கொண்டால் இடையிடையே கடைக்கு ஓட வேண்டி வராது.
கடைக்கு செல்லுமுன் தேவையான பொருட்களை லிஸ்ட் எழுதி தயாராக வைத்துக் கொண்டால் அங்கு போய் குழப்பம் வராது. மளிகை சாமான்கள் தனியாகவும், மற்ற ஐட்டங்கள் (சோப், பேஸ்ட் போன்றவை) எழுதிக் கொண்டால் அந்தந்த பகுதிகளில் எடுக்க வசதியாக இருக்கும்.
விலை குறைவாக இருக்குன்னு தரம் குறைந்த பொருட்களை வாங்கி, வீணாகி தூக்கி எறிவதை விட கொஞ்சம் விலை கூடினாலும் தரமான பொருட்களை வாங்கினால் கொஞ்சம் நாட்கள் இருந்தாலும் கெடாமல் இருக்கும்.
முடிந்தவரை வீட்டுக்குத் தேவையான வற்றல், வடகம், ஊறுகாயை நாமே கோடை காலத்தில் போட்டு வைத்துக் கொண்டால் நம் டேஸ்ட்டுக்கு ஏற்றாற் போலவும் இருக்கும், மாத பட்ஜெட்டிலும் குறைக்கலாம்.
அந்தந்த மாதத்தில் வரும் பண்டிகையையும் மனதில் வைத்து பட்ஜெட்டில் போட்டுக் கொண்டால், பண்டிகை நேரத்தில் கடையில் நேரத்தை வேஸ்ட் பண்ண வேண்டியதில்லை. உதாரணமாக ஜனவரி மாதம் என்றால் பொங்கல் வரும். மளிகை சாமான் லிஸ்டில் பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய், முந்திரி, ஏலக்காய் எல்லாம் சேர்த்து வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
விருந்தினர் வருவார்கள் என்று எதிர்பார்க்கும் மாதத்தில் கொஞ்சம் கூடவே எல்லா சாமான்களையும் வாங்கி வைத்து விட்டால், அவர்கள் வந்த பின் வாங்கும் நிலையை தவிர்க்கலாம்.
இப்ப வருட சாமான்கள் காலம் (பங்குனி மாதம்). துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், புளி, கடுகு, சீரகம், மிளகு, சோம்பு, கொத்தமல்லி, வெந்தயம், கசகசா, மொச்சை, சுண்டல் எல்லாம் வருடத்திற்கு வாங்கி வைத்துக் கொண்டால் இடையில் கன்னா பின்னாவென்று எகிறும் விலைவாசியில் இருந்து ஓரளவு தப்பிக்கலாம். அரிசி கூட வருடத்திற்கு வாங்கி வைத்துக் கொள்ளலாம். இந்தப் பருவத்தில் வாங்கினால் எல்லாமே விலை குறைவாக இருக்கும்.
ஐயோடா! அப்படி வாங்கி வைத்தால் வண்டு, பூச்சி வருமேன்னு கேட்கறீங்களா? சரியாக பக்குவப்படுத்தி வைத்தால் கண்டிப்பாக 2 வருடம் வரை கூட வைத்திருக்கலாம். இப்ப நான் வைத்திருக்கும் பருப்பு போன்றவை வாங்கி 2 வருடமாகிறது. ஒன்றில் கூட வண்டு, பூச்சி கிடையாது. ஒவ்வொன்றாக எப்படி பாதுகாப்பதுன்னு அப்புறம் சொல்கிறேன்.
Labels: சமையல்-பொது
Tuesday, March 23, 2010
சமையல் பகுதியில் சமைக்குமுன் சொல்ல வேண்டிய விஷயத்தில் சொல்லணும்னு நினைத்திருந்தேன். அதற்குள் எல்லாரையும் தொற்றும் வைரஸ் காய்ச்சல் என் ப்ளாக்கையும் தொற்றவே, அதற்கான வைத்தியத்தில் பொழுது போயிற்று. அப்பறம் ஊர்சுற்றல், உடம்பு படுத்தல்னு நாளைக் கடத்தியாயிற்று. இது யாருக்கும் தெரியாத புது விஷயம் அல்ல. ஆனாலும், இன்னும் அங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியால் தான் இதை எழுதுகிறேன். இதைப் படித்தால் விஷயம் தெரிந்தவர்கள கூட, இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
பிரஷர் குக்கர் இல்லத்தரசிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் போல் தான். அதையும் சரியாகப் பயன்படுத்தினால் தான் நமக்கும் நல்லது, குக்கருக்கும் நல்லது.
குக்கர் கழுவும் போது மூடியில் உள்ள வெண்ட் வால்வு எனப்படும் ஓட்டையை நன்கு சுத்தப்படுத்தி கழுவ வேண்டும்.
அந்த ஹோல் எப்பவும் எந்த அடைப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கேஸ்கட்டை கழுவி தண்ணீரிலோ, ஃப்ரீசரிலோ போட்டு வைப்பது அதன் ஆயுள் காலத்தை நீட்டிக்கும்.
வெயிட் எடுத்து ஆறியபின், பைப்பில் வேகமாக வரும் தண்ணீரில் வெயிட்டை காண்பித்து, உள்ளே அடைத்திருக்கும் உணவுத்துகள்களை நீக்கி காய வையுங்கள். பருப்பு, சாதம் முதலியவை வேகும் போது கஞ்சி போன்றவை வெளியே வரும் போது வெயிட்டின் சந்துகளில் அடைத்திருக்கும்.
உள்ளே பாத்திரம் வைத்து சமைக்கும் போது குக்கரில் போதுமான அளவு தண்ணீர் விட்டீர்களான்னு ஒரு முறைக்கு பலமுறை செக் செய்த பின் அடுப்பில் வையுங்கள். குக்கரில் தண்ணீர் இல்லாமல் வைத்தால் குக்கர் வெடிக்கும் அபாயம் உள்ளது.
அரிசிக்கு போதுமான தண்ணீர் வையுங்கள். அதிகமானால் பொங்கி வெளியே வரும். போதவில்லை என்றால், சாதம் தீய்ந்து விடும்.
குக்கரைத் திறக்கும் போது எப்போதும் கைப்பிடி பக்கம் மேலே தூக்காமல், எதிர்ப்புறத்தை மேலே உயர்த்தி திறக்க வேண்டும். அப்போதுதான் வேகமாக வெளியே வரும் ஆவி நம் கையில் படாமல் தப்பலாம்.
எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமான விஷயம் - குக்கரின் கொள்ளளவு தெரிந்து அந்த அளவு நிரப்ப மட்டுமே (ரிப்பீட்டு......) மட்டுமே வைக்க வேண்டும்.
எப்போதுமே குக்கரின் முக்கால் பாகம் வரை மட்டுமே நிரப்பி, மீதி பாகத்தை பொருட்கள் வேக இடம் விட வேண்டும்.
அரை லிட்டர் அரிசி தான் வேகும் கொள்ளவு உள்ள குக்கரில் அதைவிடக் குறைவாக அரிசி வைக்கலாம். எக்காரணம் கொண்டும் அதை விடக் கூட வைக்கவே வைக்காதீர்கள். உங்களுக்கு சந்தேகம் இருப்பின், குக்கர் வாங்கும் போது கொடுத்த விளக்கப் புத்தகத்தை படித்த பின்போ இல்லை அனுபவப்பட்டவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டோ செய்யுங்கள். இப்பதான் கையிலேயே போன் இருக்கே! ஒரு போன் செய்து கேட்டாலே எவ்வளவோ கஷ்டங்களைத் தவிர்க்கலாம். இதை ஏன் நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன் என்றால்......
பதினைந்து நாட்களுக்கு முன்பு என் பெண் செய்த காரியம். 3 டமளர் அரிசி மட்டுமே வேகும் கொள்ளளவு கொண்ட குக்கரில் 6 டம்ளர் அரிசியைப் போட்டு அடுப்பில் வைத்து விட்டு, பக்கத்து அடுப்பில் இவள் வேலை செய்து கொண்டிருக்க, பிரஷர் தாங்காமல் குக்கரின் அனைத்து கேஸ் ரிலீஸ் சிஸ்டம் வழியாகவும் உள்ளிருக்கும் அரிசி, கஞ்சியோடு வெளியே வந்து பக்கத்தில் இருந்த பெண்ணின் வலது கையில் பட்டு கை முழுக்க கொப்புளம் போட்டு, கையை பார்க்கவே வயிறெல்லாம் கலங்கியது. இன்னும் புண் ஆறவில்லை. ஆறினாலும் கை முழுக்க தழும்பாக இருக்கும். நல்லவேளையாக குழந்தை வேறு அறையில் தூங்கிக் கொண்டு இருந்ததால் தப்பியது. இல்லையென்றால், இவள் சமைக்கும் போது ஒன்று இடுப்பிலோ அல்லது சிட்டரில் உட்கார்ந்து கிச்சனில் இருந்திருப்பான்.
என் பெண் செய்த இன்னுமொரு தவறு, பக்கத்து வீட்டில் சொன்னாங்கன்னு, மேலே உப்பு தூவியது. தேவையா இது? கொஞ்சம் யோசிக்காமல் செய்த காரியம் எவ்வளவு கஷ்டத்திற்கு உள்ளாக்கி விட்டது.
இதுபோல் கையில் ஆவி பட்டாலோ, கொதிக்கும் பொருட்கள் பட்டு விட்டாலோ குளிந்த நீரில் நன்கு காட்டியபின், புளித்த மாவு (இட்லி மாவு) அல்லது தேனை நன்கு தடவ எரிச்சலும் அடங்கும். கொப்புளமும் அதிகம் போடாது. தேன் தடவினால், காயம் ஆறிய பின், தழும்பும் வராது. சோற்றுக் கற்றாழை இருந்தாலும் அதை இரண்டாகக் கீறி உள்ளிருக்கும் சதைப்பகுதியை ஜெல்லுடன் தடவலாம்.
இனி மேலும் யாரும் இது போல் செய்யாதீர்கள்!!! முக்கியமாக சமைக்கும் போது குழந்தைகளை சமையல் அறைக்குள் வரவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சமையலறை ஆபத்தான இடமாக மாறாமல் பார்த்துக் கொள்வது நம் கையில் தான் இருக்கு.
இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு. கொஞ்சம் கொஞ்சமாக சொல்கிறேன்:-)
Labels: சமையல்-பொது
Tuesday, January 26, 2010
சமையல்னு தலைப்பைப் பார்த்தவுடன் வழக்கம் போல ஏதாவது குறிப்பா இருக்கும்னு தானே நினைச்சீங்க! அதுவும் உண்டு. அதுக்கு முன்பு சொல்ல வேண்டிய சில விஷயங்களைச் சொல்லிட்டு அப்பறமா குறிப்புகளுக்கு போகிறேனே:-)
சமையல் ஒரு கடல். இதில் எல்லாம் தெரிந்தவர்கள் என்று யாரையும் சொல்லவே முடியாது. கொஞ்சமாகத் தெரிந்தாலும், ருசியாக சமைத்து, அழகாக பரிமாறத் தெரிந்தாலே போதும். வகை வகையாக சமைத்து, வாயில் வைக்க முடியாமல், கசகசன்னு பரிமாறினாலும் சாப்பிட தோன்றாது.
சமையலறை எனபது ஒரு பரிசோதனைக்கூடம் போல். ஒரே குறிப்பை, ஒரே அளவு பொருட்களை வைத்து 10 பேர் சமைத்தால், பத்தும் ஒன்று போல் இருக்காது. காய்கறி நறுக்கும் முறை, வதக்கும்(வேகும்) நேரம், அடுப்பின் எரிநிலை பொறுத்து ருசியும் மாறுபடும். இருக்கும் பொருட்களை வைத்து குறுகிய நேரத்தில் வாய்க்கு ருசியாக சமைப்பவர்களை சமையல் கலை நிபுணர்கள் என்றே சொல்லாம்.
சமைக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
சமையலறையில் சமைக்கப் போகும் பெண்ணே, அழகுக் கண்ணே,
சில புத்திமதிகள் சொல்லறேன் கேளு முன்னே :-)
அடுத்த நாளுக்கு என்ன சமையல்னு முந்தின நாளே யோசித்து முடிவு செய்து விட்டால், அடுத்த நாள் மளமளன்னு சமைக்க ஆரம்பிக்க முடியும். தேவையான காய்கறி, பொருட்கள் இருக்கான்னு பார்த்து, வேண்டுமானவற்றை வாங்கி வைத்து விடலாம்.
இல்லையென்றாலும் காலையில் எழுந்து பிரஷ் செய்யும் நேரத்தை வீணாக்காமல், யோசித்து வைத்துக் கொள்ளலாம்.
இப்போதெல்லாம் லூஸ் ஹேர்தான் ஃபாஷன். அந்த ஃபாஷனை சமையலறையில் மட்டும் தவிர்த்து, எப்போதுமே சமைக்கப் போகும் முன் தலையை தூக்கி வாரி கிளிப் போட்டுக் கொண்டால், சமைக்கும் போது முடி உதிர்ந்து சமைக்கும் பொருட்களில் விழுவதைத் தவிர்க்கலாம்.
1. காய்கறிகளை அழகாக, ஒரே அளவில் சீராக நறுக்கினாலே சமையல் பார்க்க நன்றாக இருக்கும்.
2. சமைக்க வேண்டிய பொருட்களை (நறுக்கிய காய்கறிகள், எண்ணெய், மசாலாப் பொருட்கள், பாத்திரம்) தயாராக எடுத்து வைத்துக் கொண்டு சமைக்க ஆரம்பித்தால், அடுப்பில் வைத்தது தீயாமல், குறுகிய நேரத்தில் சமைக்க முடியும்.
3. அரைத்து செய்யும் சமையலாக இருந்தால், அரைத்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
4. ஊற வைத்து செய்வதாக இருந்தால் முன்பே ஊற வைத்து தயாரான பின் சமைக்க ஆரம்பிக்க வேண்டும்.
5. பாத்திரத்தை பிடிப்பதற்கான டவலையோ, இடுக்கியையோ பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
6. அடுப்பை எப்போதும் மிதமான தீயில் வைத்து சமைக்க பழக வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே ஏற்றி வைக்க வேண்டும். பொருளும் தீய்ந்து போகாது, காஸும் மிச்சமாகும். (இப்போது இருக்கும் விலைவாசியில் 4 நாட்கள் கூட கேஸ் வந்தாலே கணவரிடம் ஒரு குட் வாங்கலாமே!)
7. காய்களின் தோல், வெங்காயத்தோல் முதலியவற்றை நறுக்கி முடித்தவுடன் அதற்கான குப்பைத் தொட்டியில் போட்டு விட்டால் கிச்சன் முழுக்க ஓடாது.
8. சமைக்கும் போது காட்டன் துணி வகைகளையே உடுத்த வேண்டும். இல்லையேல் மேலே ஏப்ரான் கட்டிக் கொள்ளலாம்.
9. உபயோகித்த பின் கழுவ வேண்டிய பாத்திரங்களை உடனுக்குடன் கழுவுமிடத்தில் போட்டு விட்டால், இடம் நிறைய இருப்பது போல் இருக்கும் (சில பேர் சமைத்து முடித்தபின் சமையலறையைப் பார்த்தால் ஒரு போர்க்களம் போல் இருக்கும்).
10. மிளகாய், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் முதலியவற்றை எடுத்த பின் மறக்காமல் கைகழுவி விட்டால், பிறகு கண்ணைக் கசக்கிக் கொண்டு இருக்கும் அவசியம் இருக்காது.
11. பிரிஜ்ஜில் இருந்து எடுத்து சமைப்பதாக இருந்தால் அரை மணி முன்பே வெளியே எடுத்து வைத்தால், எரிவாயு மிச்சமாகும்.
12. எப்போதும் சமைக்கும் போது ஒரு ஜக்கில் தண்ணீர் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
13. வேலைக்கு செல்லும் பெண்கள் வார விடுமுறை அன்றே தேங்காயைத் துருவி கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து கலக்கி பிரீஸரில் வைத்துக் கொள்ளலாம்.
14. அடுத்த 2 நாட்களுக்கு தேவையான வெங்காயம், பூண்டை உரித்து ட்ப்பாவில் போட்டு பிரிஜ்ஜில் வைக்கலாம்.
15. இஞ்சி, பூண்டு பேஸ்ட் செய்து வைத்துக் கொள்ளலாம்.
16. புளிக்கரைல் செய்து, சிறிது உப்பு போட்டு கலக்கி பிரிஜ்ஜில் வைத்துக் கொள்ளலாம்.
17. முந்தின நாள் இரவே காய்களை நறுக்கி டப்பாவில் போட்டு பிரிஜ்ஜில் வைத்துக் கொள்ளலாம்.
18. கொஞ்சம் வெங்காய சட்னி, வத்தக் குழம்பு செய்து பிரிஜ்ஜில் வைத்துக் கொண்டால் சமயத்துக்கு உதவும்.
19. மொத்தமாக இட்லிக்கு மாவு அரைத்து வைத்துக் கொள்ளலாம். ஒரேயடியாக இட்லிக்கு என்றில்லாமல், அடை, ஆப்பம், பணியாரம், காஞ்சீபுரம் இட்லி என பிரித்து அரைத்து வைத்துக் கொண்டால் வெரைட்டியாக செய்ய முடியும். (இரவும் டிபன் செய்பவர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்).
20. சப்பாத்திக்கும் மாவு பிசைந்து டப்பாவில் போட்டு மேலாக சுத்தமான துணியால் மூடி, டப்பாவை மூடி வைத்தால் 3 நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
...இன்னும் மணக்கும்.
Labels: சமையல்-பொது
;;
Subscribe to:
Posts (Atom)




















