Wednesday, February 3, 2010

லவ் பேர்ட்ஸ் - பகுதி 1

எல்லாமே சீரியசான விஷயங்களாக சொல்லிகிட்டு இருக்கிற மாதிரி இருக்கு. அதானால கொஞ்சம் ரசிக்க என் செல்லங்களைப் பத்தி கொஞ்சம் பேசலாம்னு இருக்கேன்.


நான் முதலில் வளர்க்கணும் நினைச்சது லவ் பேர்ட்ஸ் தான். பெட் அனிமல்னாலே சுத்தம் செய்வது, பராமரிப்பது போன்ற சிரமங்கள் இருக்குமேன்னு அந்தப் பக்கமே போகக் கூடாதுன்னு நினைச்சேன்.

பையன் மீன் தொட்டி வேணும்னு கேட்ட போது கூட ரொம்ப யோசிச்சு, எல்லாம் அவன் பொறுப்புன்னு சொல்லி ஒரு கிறிஸ்மசுக்கு வாங்கி கிஃப்டா கொடுத்தோம்.   மீன் செத்துப் போகும், திரும்ப வாங்கி விடுவான், செத்துப் போகும் இப்படியே போய் அவனே வெறுத்து கடைசியில் காலியாகவே விட்டுட்டான்.

பையனும் அந்த வருடம் ஸ்கூல் முடித்து காலேஜில் சேர வெளியூர் போய்ட்டா, நாம மட்டும் தனியா இருக்கணுமேன்னு கவலையா இருந்துச்சு. அப்பதான் இவர் என் பர்த்டேக்கு என்ன வேணும்னு கேட்டார். லவ்பேர்ட்ஸ் ஒரு ஜோடி வேணும்னு கேட்டேன். அழகா கூண்டோடு வாங்கிக் கொடுத்தார். லவ்பேர்ட்ஸ் முட்டை வைத்து, குஞ்சு பொரித்து பெரிய குடும்பமா ஆனது போல் கனவெல்லாம் வந்தது.



ரெண்டு லவ் பேர்ட்ஸும் பச்சையும், மஞ்சளும் கலந்த குட்டி குருவிகள். குட்டியாக இருந்ததால் கொத்தாமல் இரண்டுமே என் கையை நீட்டினால் ஏறி உட்கார்ந்து கொள்ளும். ஃபேனை நிறுத்தி விட்டு, எல்லாக் கதவையும் அடைத்து விட்டு கூண்டை திறந்து விட்டால் போதும். இரண்டும் கூண்டு மேலே வந்து உட்கார்ந்து விளையாடிக் கொண்டு இருக்கும். விளையாடியது போதும், உள்ளே போங்கள் என்று சொன்னால் போய்விடும். கதவை சாத்தி விடுவோம். அதிலும் முழுவதும் மஞ்சளாக இருக்கும் குருவி தான் எங்களின் பெட். கைகளில் ஏறி விளையாடும். பச்சை கலந்த குருவி கொஞ்சம் பயப்படும். நான் ஆபீசில் இருந்து வந்தால் போதும். கூண்டின் ஓரம் வந்து இதுக்கும், அதுக்கும் நடந்து என்னைக் கூப்பிடும். நான் மறுபுறம் போய் நின்றால் எப்படியோ கண்டு அங்கும் வந்துவிடும். கீழே உட்கார்ந்து காய் நறுக்கிக் கொண்டு இருந்தால் எட்டிக் கூப்பிடும். கீரை, கொத்தமல்லித் தழைன்னா ரொம்ப இஷ்டமா சாப்பிடுவாங்க.


எங்களுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகி ஆஸ்பிட்டலிலேயே ஒன்றரை மாதம் இருக்க வேண்டி வந்தது. டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்த அன்று என்னைப் பார்த்ததும் இங்கும் அங்கும் ஓடி மஞ்சள் குருவி கத்திய கத்தல் இன்னும் என் காதில் ஒலிக்கிறது. அவரை ஸ்டெரச்சரோடு மேலே தூக்கி வர வந்த எங்கள் ஆபீஸ் நண்பர்கள் அப்படி ஆச்சரியப்பட்டார்கள். கையில் எடுத்ததும் முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தியது. ஆறறிவு இருக்கும் மனிதர்களிடம் உள்ள அன்பை விட, அந்தப் பறவைகள் காட்டிய பாசத்தில் அன்று நெகிழ்ந்து அழுதே விட்டேன். நாங்கள் எவ்வளவோ நல்லது செய்தவர்கள் கூட, எங்களை ஆஸ்பிட்டலில் வந்து பார்க்காத ரணம், இந்தக் குட்டிக் குருவிகள் காட்டிய அன்பில் மறந்தது.

வாங்கி ரொம்ப நாளாச்சே, இன்னும் முட்டை வைக்கலையேன்னு ஒரே யோசனையாக இருந்தது. அப்போது தான் அவருக்கு பயிற்சி கொடுக்க எங்க வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பிசியோதெரபிஸ்ட் சொன்னார், இரண்டுமே ஆண் குருவிகள் என்று. ஏதாவது ஒன்றைக் கொடுத்து விட்டு வேறு பெண் குருவி மாற்றி வந்து விடுங்கள் என்று சொன்னார். இரண்டுமே எங்களுக்குப் பிடிச்சது. எதைக் கொடுக்க? கூண்டை வேணா பெரிசா மாற்றலாம்னு யோசித்துக் கொண்டிருந்தோம். விபத்தின் தாக்கம் குறையாததால் அவர் முதலில் நடக்கட்டும்,பிறகு பார்க்கலாம்னு இருந்தோம். அப்போது தான்,

அந்த சம்பவம் நிகழ்ந்தது......

மீதி சிறிய இடைவேளைக்குப் பின்..........

14 comments:

geetha said...

செல்விக்கா!
உங்க செல்(வ)லங்களை பற்றி படித்து ஆச்சர்யமாய் இருக்கு. அவர்களுக்கு நல்லவேளையாய் கடவுள் ஆறாவது அறிவைக்கொடுக்கலை.
அதனால்தான் மனிதர்களைவிட மகத்தானவர்களாய் இருக்காங்க.

geetha said...

செல்விக்கா!
எங்க நம்ம லக்கி போட்டோவை காணோம்???
சீக்கிரமா போட்டுடுங்க. அப்பறம் லக்கி கோவிச்சுக்கப்போறார்!!!

ஜீனோ said...

//எங்க நம்ம லக்கி போட்டோவை காணோம்???
சீக்கிரமா போட்டுடுங்க. அப்பறம் லக்கி கோவிச்சுக்கப்போறார்!!!// அதானே, ரிப்பீட்டேய்!

லக்கி கோவிச்சுக்கிரானோ இல்ல, ஜீனோ கோவிச்சுக்கும்! சீக்கிரம் லக்கிய காட்டுங்கோ செல்வி ஆன்ட்டி!

அழகான மலர்வனம்!! வாழ்த்துக்கள்!

லவ் பேர்ட்ஸ் - பகுதி 1 said...

Dear Mom,

When i saw this topic heading 'chellam' i thought you would be talking about us. :((

Anyway, most of the stories i missed because i was not with you. Good way to listen to those now. I know you have long list of chellam, i will keep watching this space for the remaining stories.

My Apologies, i don't know to type in tamil.
Luv,
Daughter No.1

Mrs.Menagasathia said...

ஆறறிவு மனிதர்களைவிட ஐந்தறிவு படைத்த உயிரினங்களுக்குதான் அன்பும்,அறிவும் ஜாஸ்தி.அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க செல்விமா...

athira said...

செல்வியக்கா, இதைத்தானே செல்லங்கள் பகுதியில் எழுத வருவேன் என்றீங்கள்... வரவில்லை... பறவாயில்லை... இங்கு எல்லாம் எழுதுங்கோ.. ஆவல் அதிகமாகி படித்தவேளை.. தொடரும் என நிறுத்திட்டீங்கள்... அடுத்த தொடருக்காக அதிரா வெயிட்டிங்.. பெயர் வைக்கவில்லையோ இவர்களுக்கு?... அபோ லக்கி இருக்கவில்லையோ?

kavisiva said...

செல்விம்மா இப்படி சஸ்பென்ஸ்லா வுட்டுட்டீங்களே! நீங்க எழுதியிருப்பதை படிக்கும் போது எனக்கும் லவ்பேர்ட்ஸ் வளர்க்க ஆசை வந்திடுச்சு :-). லக்கி பற்றியும் எழுதுங்க. சரியான குறும்புக் காரனாச்சே அவன்!

suvaiyaana suvai said...

அடுத்த தொடருக்காக வெயிட்டிங்!!!.

இலா said...

செல்விமா!!! எப்போ எங்கள பத்தி எழுத போறீங்க....

செந்தமிழ் செல்வி said...

கீதா,
/நல்லவேளையாய் கடவுள் ஆறாவது அறிவைக்கொடுக்கலை. அதனால்தான் மனிதர்களைவிட மகத்தானவர்களாய் இருக்காங்க/
நூற்றுக்கு நூறு உண்மை.
லக்கி தானே! வருவார். அவர் இல்லாமலா??!!! அவர் வருவதற்கு முந்தின காலம் இது.

ஜீனோ, கோவிச்சுக்க வேண்டாம். லக்கியை காட்டிட்டேன்.
வாழ்த்துக்கு நன்றி.

நெ.1,
உங்களைப் பற்றி எழுத வேறு பகுதி ஆரம்பிக்கப் போகிறேன்(என் வீட்டு வாலுகள்னும் பேர் இருக்கலாம்:-))
நீ பதிவு போட்டதே சந்தோஷம். தமிழ்ல இல்லைன்னா பரவாயில்லை.

மேனகா,
அடுத்த பதிவை எழுத கொஞ்சம் கஷ்டமாக இருப்பதால், தள்ளிப் போட்டுகிட்டே இருக்கேன்:-(

அதிரா,
ஆமாம். இதைதான் எழுத நினைத்தேன். அப்போ நேரமே இல்லை. மன்னிச்சுக்கோ.
பேர் வைக்கணும்னு தோணலை. லக்கி வருமுன் நடந்த கதை இது:-)

கவி,
லவ் பேர்ட்ஸ் வளர்ப்பது ரொம்ப சுலபம்.
பின்னே, கொஞ்சமாவது சஸ்பென்ஸாக இருக்க வேண்டாமா?
லக்கியைப் பற்றியும் இருக்கு.

சுவையான சுவை,
காத்திருங்க. வரும்.
இலா,
நெ.1 க்கு சொன்ன பதில் தான் உனக்கும்.

லவ் பேர்ட்ஸ் - பகுதி 1 said...

Dear Mom,

Excellent, Getting more more interested to check the daily updates. As Hyais uncle said you can write a story for the book or movie. I am very proud to be your daughter. How many more talents you have ...?

Good Luck!

Luv,
Daugnter No.1

செந்தமிழ் செல்வி said...

ஹாய் ஜோம்மா,
தேங்க்யூ. நீயும் ஹைஸ் அங்கிள் போல் சீரியல் ரைட்டர் ஆக்கப் பார்க்காதே.
அப்படியெல்லாம் பெரிசா ஒண்ணும் இல்லைம்மா. ஏதோ கொஞ்சம் தெரியுது. அவ்வளவுதான்!

Sugumaran said...

please, you can buy two female birds. It's Lovely love attachment with you.

Sugumaran said...

please, you can buy two female birds. It's Lovely love attachment with you.

Post a Comment