Sunday, February 21, 2010

மணல் ஓவியம்

தேவையான பொருட்கள்:

1) மணல் ஓவியம் கிட் - 1 அல்லது கருப்பு வெல்வெட் துணி - தேவையான அளவு,
2) விருப்பமான படம்,
3) ஃபெவிக்ளூ - 1,
4) வெள்ளை மணல் (கடைகளில் கிடைக்கும்)
5) தேவையான ஃபேப்ரிக் கலர்கள்,
6) வண்ணம் தீட்ட நெ. 1 பிரஷ் - 1.


செய்முறை:

 1) கிட் என்றால் அதிலேயே படம் வரைந்து இருக்கும். இல்லையென்றால் விருப்பமான படத்தை மஞ்சள் கலர் டிரேஸ் பேப்பர் வைத்து துணியில் வரைந்து கொள்ளவும்.
2) படத்தின் அவுட் லைனைக்குள் ஃபெவிக்ளூவை நன்றாக தடவவும்.


3) வெள்ளை மணலை அதன் மேல் இடைவெளி இன்றி தூவி கையால் அழுத்தி விடவும்.


4) சிறிது நேரம் கழித்து துணியைத் தூக்கி தட்டினால், மேலாக ஒட்டாத மணல் தனியாக வந்து விடும்.


5) பிரஷ்ஷின் பின்புறத்தால் அவுட்லைனை விட்டு வெளியே பிசிறாகத் தெரியும் மணலை சீராக்கவும்.

 
6) ஒரு நாள் முழுதும் நன்கு காய விட்டு, பொருத்தமான ஃபேப்ரிக் கலரை பிரஷ்ஷால் எடுத்து பிசிறின்றி தீட்டவும்.

7) டபுள் ஷேடிங் கூட கொடுக்கலாம்.
 

8) படம் முழுவதும் வண்ணம் தீட்டியபின் நன்கு காய விடவும்.

 

9) விருப்பம் போல் பிரேம் செய்து அழகாக மாட்டலாம். பிரியமானவர்களுக்கு பரிசாகவும் கொடுக்கலாம்.

19 comments:

Mrs.Menagasathia said...

me the firs?????????

Mrs.Menagasathia said...

ஆல் இன் ஆலாக இருக்கிங்க.ஓவியம் கூட வரைவிங்களா செல்விமா? ரொம்ப சூப்பரா இருக்கு...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ரொம்ப அழகா பண்ணியிருக்கீங்க செல்வி!!

ஹைஷ்126 said...

அடுத்த முறை விடுமுறையில் வரும்போது வந்து நேரில் பார்த்து பாராட்டுகிறேன்...:)

வாழ்க வளமுடன்

kavisiva said...

ரொம்ப அழகா இருக்கு செல்விம்மா!

geetha said...

செல்விக்கா!
மணல் ஓவியம் ரொம்ப அழகாய் இருக்கு. நாங்கள்ளாம் பீச்சில் மணல் வீடுதான் கட்டியிருக்கோம்.
நீங்க ஓவியமே வரைஞ்சிட்டீங்க. ரொம்ப சூப்பர். எளிமையாவும் இருக்கு!

ஹுஸைனம்மா said...

அழகு, கொள்ளை அழகு!!

அக்கா, இந்த Word Verification- ஐ எடுத்துருங்களேன்!!

செந்தமிழ் செல்வி said...

மேனகா,
ஸ்கூல் படிக்கும் போது ஓவியங்கள் வரைந்தது. இப்ப அதற்கெல்லாம் திரும்ப வாய்ப்பு கிடைச்சிருக்கு.
மிக்க நன்றி.
yes, ur the first:-)

சந்தனா,
மிக்க நன்றி.

சகோ. ஹைஸ்,
அடுத்த முறை வரும் போது அவசரமின்றி வாருங்கள். அப்ப தான் எல்லா ஓவியங்களையும் பார்க்க முடியும்.

ரொம்ப நன்றி கவி.

கீதா,
பீச் மணலில் வீடு கட்டி தான் விளையாட முடியும். யார் வேண்டுமானாலும் வரையும் அளவு சுலபம் தான்ப்பா! நன்றி கீதா.

ஹுசைனம்மா,
பாராட்டுக்கு நன்றி.

/இந்த Word Verification- ஐ எடுத்துருங்களேன்/
எடுத்தாச்சு:-)

Mrs.Menagasathia said...

செல்விமா மணல் ஓவியம் கிட் எங்க வாங்கினிங்க?ஜெயா எம்போரியத்தில் கிடைக்குதா?

asiya omar said...

செல்விக்கா,ஆர்ட் & கிராஃப்ட் இன்னும் பண்ணுறீங்கன்னா மனசு school going girl -ஆக இருக்குன்னு அர்த்தம்.சூப்பர்.

prabhadamu said...

செல்வி அம்மா இந்த மணல் ஓவியம் சூப்பர் அம்மா. நான் 3 முறை உங்கலுக்கு பதிவு போட வந்து போடமுடியலை. போகவே இல்லை. ஏன்னு தெரியலை. இப்ப இதுவாச்சு போகுதான் பாப்போம்.


உங்க பெறன் தான அம்மா. ரொம்ப ரொம்ப யூட்டா இருக்கான். அவனுக்கு இந்த உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆஆஅ அந்த யூட்டு பேபிக்கு குடுத்துடுங்க என் சார்பில்.

Jaleela said...

செல்வி அக்கா உங்கள் கை வண்ணம், மணல் ஓவியம் மிக அருமை.

எத்தனையோ முறை வந்தாச்சு ஆனால் பாலோவர்ஸ் பகுதி இல்லை இங்கு

செந்தமிழ் செல்வி said...

மேனகா,
ஜெயா எம்போரியத்தில் கிடைக்குது. தாமத்திற்கு மன்னிக்கவும். உடல்நிலை சரியில்லை 2 நாட்களாக.

ஆசியா,
உண்மை. என் மனதின் வேகத்திற்கு உடம்பு தான் ஈடு கொடுக்க மாட்டேன் என்கிறது. இருந்தாலும் இழுத்துக் கொண்டு ஓடுகிறேன்.
நன்றி ஆசியா.

ப்ரபா,
மிக்க நன்றி. சில சமயம் எனக்கும் அப்படி நடப்பது உண்டு. காரணம் தெரியவில்லை.
நாளை பேரனைப் பார்க்கப் போகிறேன். கண்டிப்பாக கொடுத்துடறேன்.

ஜலீலா,
மிக்க நன்றி. இந்த டெம்ப்லேட்டில் அந்த ஆப்சன் வரமாட்டேங்குது. ஏதாவது செய்து சேர்க்க முயற்சிக்கிறேன்.
அடிக்கடி வாங்க. நன்றி.

Mrs.Menagasathia said...

பதிலுக்கு மிக்க நன்றிமா!! இப்போ உடல்நலம் எப்படி இருக்கு? பேரனுக்கு சுத்தி போடுங்க..சோ க்யூட்....

இமா said...

ரொம்ப அழகா இருக்கு செல்வி. அடுத்த தடவை பீச் போறப்ப கொஞ்சம் மண் கடத்திட்டு வரணும்.

போட்டோஸ், இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எல்லாம் சூப்பர்ப்.

செந்தமிழ் செல்வி said...

மேனகா,
இப்பதான் கொஞ்சம் பரவாயில்லை.

இமா,
மிக்க நன்றி. பீச் மணலை பிளீச் செய்தல்லவோ உபயோகிக்கணும்:-)

இமா said...

appo neenga eppadip pannineenga?

செந்தமிழ் செல்வி said...

இமா,
வெள்ளை மணல் என்று தனியாக கடைககளில் விற்கிறது. அதில் தான் இந்த ஓவியம் போட முடியும். பீச் மணலில் கலர் கலந்து கோலம் மட்டும் தான் போடுவேன்.

இமா said...

tkz for the information Selvi. i'l look for it when i go shopping next time.

Post a Comment