Monday, June 27, 2011
அம்மாவின் 51வது திருமணநாளுக்கு (27-06-2011) என்ன பரிசு கொடுப்பது என யோசித்த போது, அம்மா கொஞ்ச நாளாக கேட்டுக் கொண்டிருந்தது போல் புடவையில் நானே பெயிண்டிங் செய்து கொடுத்தால் என்னவென்று தோன்றியது. 15 நாட்களே இருந்த நிலையில் அதற்குள் முடிக்க முடியுமா என தோன்றியது. இதென்ன பிரமாதம்? ஊதித் தள்ளி விடலாம். 5 நாட்களிலேயே முடித்து விடலாம் என்று சுறுசுறுப்பாக வேலையை ஆரம்பித்தேன். புடவையின் கலரும், டிசைனும் ஏற்கனவே அம்மா சொல்லி இருந்தார்கள்.
அந்த டிசைனை டிரேஸ் பேப்பரில் வரைந்து எடுத்து, ஊசி வைத்து துளை போட்டு தயார் செய்தேன்.
தேவையான ஃபேப்ரிக் கலர்கள், அவுட்லைனர் எல்லாம் வாங்கி வந்தாயிற்று.
புடவையில் பிளவுசுக்கான பகுதியை அளந்து விட்டுவிட்டு, தொடங்க வேண்டிய இடத்தை மார்க் செய்து ஸ்டென்சில் பேப்பரை புடவை மேல் வைத்து சாக் பவுடரை மண்ணெண்ணையில் கரைத்து சின்ன துணியில் தொட்டு பேப்பர் மேல் தேய்க்க டிசைன் புடவையில் விழுந்தது.
3D அவுட்லைனர் கொண்டு டிசைனின் வெளிப்புறம் முதலில் வரைந்தேன்.
அவுட்லைனர் காய்ந்தபின் உட்புறம் பெயிண்ட் செய்தேன்.
ஆபீஸ் போய் வந்து மாலை 6 மணி போல் உட்கார்ந்தால் இடையில் டிபனுக்கு ஒரு மணி நேரம் போக, இரவு பனிரெண்டு அல்லது ஒரு மணி வரை போடுவேன். எப்படியும் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடித்து விடலாம் என நினைத்தேன். பாதி புடவை முடித்தபின் பிரச்னை ஆரம்பமானது. உடம்பு ரொம்ப முடியாமல் போக உட்கார்ந்து வேலை செய்யவே முடியவில்லை. இதனால் நான்கு நாட்கள் வேலை தடைபட்டது.
இப்போதைக்கு உடம்பு முழுதும் சரியாகாது என்று தெரிந்தபின், இனியும் கால தாமதம் செய்தால் சரியான நேரத்திற்கு புடவையை அனுப்ப முடியாது என்று தோன்றவே திரும்பவும் புடவையைக் கையில் எடுத்தேன்.
இப்போதைக்கு உடம்பு முழுதும் சரியாகாது என்று தெரிந்தபின், இனியும் கால தாமதம் செய்தால் சரியான நேரத்திற்கு புடவையை அனுப்ப முடியாது என்று தோன்றவே திரும்பவும் புடவையைக் கையில் எடுத்தேன்.
உடம்பு ரொம்ப முடியாமல் போக உட்கார்ந்து வேலை செய்யவே முடியவில்லை. இதனால் நான்கு நாட்கள் வேலை தடைபட்டது. உடம்பு ரொம்ப முடியவில்லையென்று ஆபீஸுக்கு லீவு போட்டேன். இப்போதைக்கு உடம்பு முழுதும் சரியாகாது என்று தெரிந்தபின், இனியும் கால தாமதம் செய்தால் சரியான நேரத்திற்கு புடவையை அனுப்ப முடியாது என்று தோன்றவே மனது கேட்காமல் பெயிண்ட் பண்ண திரும்பவும் புடவையைக் கையில் எடுத்தேன். தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் உடம்பு கஷ்டப்படுத்த, சிறிது நேரம் பெயிண்ட் செய்வது, சிறிது நேரம் படுப்பதுமாக வேலையைத் தொடர்ந்தேன். லீவும் இரண்டு நாட்கள் தான். திரும்ப ஆபீஸ் போக ஆரம்பித்தாயிற்று. மூன்றே நாட்கள் தான், அதுவும் இடையில் ஞாயிற்றுக்கிழமை வேறு. அடுத்த நாள் அனுப்பினால் தான் திங்களன்று அம்மா கைக்கு போய்ச் சேரும். வெள்ளியன்று இரவு உட்கார்ந்து வேலையை முடித்து விட்டுத்தான் படுத்தேன்.
இரவு முழுக்க காயவிட்டு, காலையில் அயர்ன் செய்து கையோடு ஆபீஸ் எடுத்து போனோம்.
அப்பாவுக்கு ஒரு சர்ட் எடுத்து அதையும் சேர்த்து பேக் செய்து மாலை வீடு திரும்பும் போது நேரே கொரியர் ஆபீஸ் போய் பார்சலை அனுப்பி விட்டு வந்தோம்.
எப்படியும் திங்கள் காலை அம்மா கையில் போய் சேர்ந்து விடும் என்ற மகிழ்ச்சியில் இருந்தேன். இன்று காலையில் அம்மா, அப்பாவை போனில் கூப்பிட்டு வாழ்த்தி விட்டு, கூரியர் வந்தது பற்றி ஏதும் சொல்வார்களோ என்று பார்த்தேன். தங்கையிடமும் கூப்பிட்டு விசாரித்தால் இன்னும் வில்லையென்று சொன்னாள். கொரியர் ஆபீஸ் கூப்பிட்டு கேட்டால் கொண்டு போய்க் கொடுக்க ஆள் இல்லை, நாளைக்கு தான் டெலிவரி செய்ய முடியும் என்று சொல்கிறான். நாங்களும் எங்கெங்கோ கூப்பிட்டு பேசியும் பலனில்லை. நாளை காலை 10 மணிக்கு எப்படியும் கொண்டு போய்க் கொடுத்து விடுகிறோம் என்று சொல்லி விட்டார்கள்:-(
(கூரியரில் ஒவ்வொரு முறையும் இதே போல் தான். வீட்டிற்கு போன் செய்து உங்களுக்கு கூரியர் வந்திருக்கு, ஆபீஸுக்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். 80 வயதான அப்பா ஆட்டோ பிடித்து போனால், ஒரு மணி நேரம் உட்கார வைத்து ஐடி செக் செய்து பிறகு பார்சலைக் கொடுப்பது என்பதே வழக்கமாக வைத்திருக்கிறார்கள். போன முறை மருந்து அனுப்பி மூன்று நாட்கள் கழித்து, கொண்டு வந்து கொடுத்தார்கள். இவ்வளவுக்கும் எல்லா ஊர்களிலும் கிளை பரப்பி, பெரிய பெயரோடு இருக்கும் புரஃபசனல் (!!!!) கூரியர் தான் அது.)
சர்ப்ரைஸாக இருக்கட்டுமென்று அம்மாவிடம் இன்னமும் சொல்லவில்லை. பரிசு தான் போய்ச் சேரவில்லை. உங்கள் அனைவரின் வாழ்த்துக்களாவது அவர்களுக்கு போய் சேரட்டும்!!!

Labels: கை வண்ணம்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
தங்கள் அம்மாவுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்,வாழ்த்த அவயதில்லை,வணங்குகிறேன்..டிசைனும்,புடவையும் ரொம்ப அழகாயிருக்கு..
உங்களின் அம்மாவிற்கு, இனிய திருமண நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,
புடவையில் உங்கள் கை வண்ணத்திலான டிசைனிங் அருமையாக இருக்கிறது.
Heartiest Greetings.
Kindly send the articles by SPEED POST they are delivering in time. Now the Postal & Telephone Department people are more courteous. Kindly encourage our Postal & BSNL.
Blessings.
அம்மாவுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்...
செல்விம்மா.. அம்மா அப்பாவுக்கு எங்க வாழ்த்துக்களையும் சொல்லிருங்க.
புடவை அழகா இருக்கு. அம்மா கலர் செலெக்ஷன் நல்லா இருக்கு. எனக்கும் இந்தக் கலர் பிடிக்கும். அழகான டிசைன் & நேர்த்தியா பெய்ன்ட் செய்து இருக்கீங்க. பாராட்டுக்கள்.
இனி ரெண்டு மூணு நாளைக்கு நல்லா ரெஸ்ட் பண்ணுங்க. பிறகு... அடுத்த பார்ட்டிக்கு ரெடியாகணும்ல. ;))
ஒரு வருஷத்துக்கு 6 போஸ்டிங் தான் போட்டு இருக்கீங்க. ;( அங்கயும் காணோம். இனிமேல் அடிக்கடி வரணும் செல்வி.
செல்வி..... உங்க க்ளாஸ் பெயிண்டிங் லவ்லி...... சாதாரணமாக எல்லோரும் பூக்களுக்கு மஞ்சள், ஆரஞ்ச், ரெட் இந்த மாதிரியான கலர்தான் தேர்ந்தெடுப்பார்கள்.... நீங்க ப்ளூ கலரை பூக்களுக்கு கொடுத்திருப்பது வித்தியாசமாகவும் ரொம்ப அழகாக பளிச் என்றும் இருக்கிறது.......கடின உழைப்பு தெரிகிறது. உடல்நிலையையும் கவனித்துக்கொள்ளுங்கள்.
அந்த குட்டி மயில் மருதாணியாக கையில் உட்கார்ந்து இருப்பது நல்ல கற்பனை..... விரல் நகங்களை தொட்டபடி வங்கி மோதிரங்களை அணிவித்த மாதிரியான டிஸைனும் புதுமையாக இருக்கிறது.
நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
Post a Comment