Wednesday, February 10, 2010

லவ் பேர்ட்ஸ் (பகுதி - 3)


பெண் குருவி எப்பப் பார்த்தாலும் சட்டிக்குள்ளேயே உட்கார்ந்திருக்குதேன்னு எட்டிப் பார்த்தால்..........

சின்னக் கோலிக்குண்டு சைஸில் பழுப்பு கலரில் ஒரு முட்டை!! ஐ! ஒரு வழியா நம்ம வீட்டு லவ் பேர்ட்ஸும் முட்டை வெச்சிருக்குன்னு சந்தோஷமாக இருந்தது. எல்லோரும் சொன்னாங்க.கூண்டுக்குள் பஞ்சை போட்டு வைங்கன்னு.  கொஞ்சம் பஞ்சை பிய்த்து கூண்டுக்குள் போட்டு வைத்தோம். அதைத் தூக்கிக் கொண்டு போய் சட்டிக்குள் வைத்துக் கொண்டது.

ஒரு நாள் விட்டு அடுத்த நாள் எட்டிப் பார்க்கும் போது இன்னொரு முட்டை. அதே போல் ஒரு நாள் விட்டு அடுத்த நாள் மூன்றாவது முட்டை. 21 நாட்கள் ஆகும், குஞ்சு பொரிக்கன்னு சொன்னாங்க. அம்மாக் குருவியும், அப்பாக் குருவியும் மாற்றிமாற்றி சட்டிக்குள் உட்கார்ந்து அடை காத்தது. நாளை எண்னிக் கொண்டே வந்தேன்.

22 வது நாள் காலையில் எழும் போதே ஏதோ வித்தியாசமான சப்தம் கேட்டது. இஸ்க், இஸ்க்னு மெதுவா கேட்டது. எழுந்து நேரே போய் சட்டியைப் பார்த்தால், விரல் நுனி பெருசுக்கு ஒரு புழு போல் ஒன்று சட்டுக்குள் இருந்தது. மூக்கும், கண்ணும் மட்டும் தான் பெரிசா தெரிந்தது. கண் சரியா விழிக்கலை. ஆனா, வாயைத் திறந்து கொண்டே சத்தம் மட்டும் போட்டுக் கொண்டே இருந்தது.

அம்மாக் குருவி வெளியில் வந்து தினையை எடுத்துப் போய் குட்டிக்கு ஊட்டிக் கொண்டே இருக்கும்.  அப்பாக் குருவி அந்த வேலையைச் செய்யலைன்னு கொத்திக் கொண்டே இருக்கும். அது ஒரு ஓரமாக போய் உட்கார்ந்திருக்கும். எத்தனை சாப்பிட்டாலும் போதாமல் குட்டி கத்திகிட்டே இருக்கும்.

அடுத்த ரெண்டு முட்டையும் எப்ப பொரிக்கும்னு பார்த்துகிட்டே இருந்தால் குட்டி வெளியில் வரவே இல்லை..... ஒரு நாள் ஆபீஸ் போய்ட்டு வந்து பார்த்தால், முட்டைகளை சட்டிக்கு வெளியில் தூக்கிப் போட்டு இருந்தது. உள்ளேஒன்றும் இல்லை. முட்டை கெட்டுப் போய்ட்டா, அப்படித்தான் தூக்கிப் போடுமாம். பாவமாக இருந்தது.

அப்பப்ப எட்டிப் பார்க்கும் போதெல்லாம், குட்டிக்குருவிக்கு லேசாக முடி வந்திருக்கும். பார்க்கவே அருவருப்பாக இருப்பது போல் இருக்கும். நாங்க எட்டிப் பார்த்தாலே அம்மாக் குருவி உள்ளே போய் தன் இறகால் குட்டியை மூடிக் கொள்ளும். அம்மாக்குருவி, அப்பாக்குருவி இரண்டுமே மஞ்சள், பச்சை, கருப்பு கலந்த கலர். ஆனால் குட்டி என்னவோ ஊதா வண்ணத்தில் இருப்பது போல் தெரிந்தது. சரியாக முடி வளராததால் என்ன கலர்னு சரியா தெரியலை. ஆனா, ரொம்ப வேகமாக வளர்ந்துகிட்டு வந்தது. எப்படி சட்டியை விட்டு வெளியில் வரும்னு எங்களுக்கெல்லாம்  யோசனையாக இருந்தது.

ஒரு நாள் காலையில் எழுந்து வந்து பார்த்தால் எங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது........
இன்னும் வளரும்...

9 comments:

geetha said...

செல்விக்கா!
லவ் பேர்ட்ஸ் பத்தின இந்த தொடர் ரொம்ப அழகாய், அருமையாய் இருக்கு.
ஏதோ, நானே இதையெல்லாம் நேரில் பார்த்தார்போல் இருக்கு.
எல்லாம் சொல்லிட்டு கடைசியாய் வைக்கிற ஒரு சஸ்பென்ஸ் சூப்பர்!!!

asiya omar said...

செல்விக்கா லவ் பேர்ட்ஸ் தொடர் ரொம்ப interesting ஆக போய்கிட்டு இருக்கு.தொடர்ந்து எழுதுங்க.

Mrs.Menagasathia said...

ரொம்ப இன்ஸ்ட்ரெஸ்ட்டா இருக்கு செல்விமா...

ஹைஷ்126 said...

இது சதா சீரியல் இல்லை, மெகா சீரியல் ஆகிவிடும் போல் இருக்கு... உணமையிலேயே டீவிக்கு கதை எழுத வாழ்த்துகள். சூப்பர்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

குட்டி போட்டாச்சா.. எங்களுக்கும் சந்தோஷமா இருக்கு..

ஜீனோ said...

//குட்டி போட்டாச்சா..// ஹா...ஹ்ஹாஹ்..ஹா!! எல்போர்டு, திஸ் இஸ் லவ் பேர்ட்..முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பறவை இனங்கோ..குட்டி போடும் பாலூட்டி இல்லைங்கோ!!

லவ் பேர்ட்..லவ் பேர்ட்..தக்க திமி த..என்ற தாளத்தில் வா!!:D :D

ஹேப்பி வெகேஷன் செல்வி ஆன்ட்டி!

athira said...

ஆ... செல்வியக்கா... குஞ்சு வந்திட்டுதோ? முட்டையை விட்டோ?... சூப்பராக நகர்த்திக்கொண்டு போறீங்கள் கதையை... நன்றாக இருக்கு... தொடருங்கோ.. அடுத்தது என்ன.. குஞ்சு பறந்ததாக்கும்... எனக்குத்தான் தெரியுமே.. இருப்பினும் மனம் கிடந்து துடிக்குது... அடுத்தது என்ன என்பதை அறிய:).

செந்தமிழ் செல்வி said...

கீதா,
உண்மையில் நான் யோசிச்சு எழுதுவது இல்லை. என் மனதில் நடந்தவை ஓடிக் கொண்டிருக்க அப்படியே டைப் செய்வேன். எழுத்துப்பிழை கூட பிறகு தான் சரி பார்ப்பேன். இல்லைன்ன்னா, தொடர்ச்சி அறுபட்டுவிடும். நன்றிம்மா.

ஆசியா & மேனகா,
மிக்க நன்றி ஊக்கத்திற்கு.

சகோ.ஹைஸ்,
என்ன இப்படி சொல்லிப் போட்டீங்கள்! இன்னும் ஏகப்பட்டது எழுத இருக்கே. நான் சீரியலே பார்ப்ப்பதில்லை. என்னை சீரியல் ரைட்டர் ஆக்கப் பார்க்கறீங்களே:-(

சந்து,
நன்றி.

ஜீனோ,
ஹேப்பி வெகேஷன் இல்லை. அவசர பிரயாணம்.

அதிரா,கதையா இது? உதை விழும். உண்மை நிகழ்வம்மா. அவ்வளவு சீக்கிரம் நம் குஞ்சு பறக்காது:-)

geetha said...

ஹை செல்விக்கா!
மறுபடியும் அடுத்த பகுதி வந்திட்டதா! ரொம்ப சந்தோஷம். ஆனா, அப்பாக்குருவியின் முடிவு வருத்தமாய் இருக்கு!
அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திட்டு இருக்கேன்!

Post a Comment