Saturday, May 1, 2010

காணாமற் போன ரகசியம்...

ஒரு பதினைந்து நாட்களாக பிளாக்குக்கு மட்டுமன்றி, அங்கு இங்கென எங்கும் போக முடியாதபடி வேலை....வேலை...வேலை. அப்படி என்னதான் பெரிய வேலை என்கிறீர்களா? வருடாந்திர பொருட்கள் வாங்குங்கன்னு எல்லாருக்கும் சொன்னால் போதுமா? நானும் அந்த வேலையை செய்ய வேண்டுமே!

வருடாவருடம் வாங்குவது தான் என்றாலும், இந்த வருடம் பொருட்கள் வீடு வந்து சேர கொஞ்சம் தாமதம். தங்கை வாங்கி வைத்திருந்த பொருட்களை எடுத்து வருவதில் ஆரம்பித்த வேலை இன்னும் முடியவில்லை.

கவருடன் வாங்கி வந்த பொருட்கள் காய வைப்பதற்கு தயாராக ....


வெய்யிலில் காய்ந்து கொண்டிருக்கும் பொருட்கள்.....(பாதிப் பொருட்களின் படம் மட்டுமே போட்டுள்ளேன்).

கல் அரித்து, கழுவி முதல் நாள் துணியில் போட்டு காயவைத்து, அடுத்த நாள் தட்டில் காய வைக்கப்பட்டிருக்கும் கடுகு. 


காய வைத்து ஆற வைக்கப்பட்டிருக்கும் பருப்பு.


 ஆறிய பின் முதலில் புடைத்து....

பிறகு சல்லடையில் சலித்து சுத்தம் செய்யப்படுகிறது.


பொருட்கள் போட தயாராக கழுவி, காய வைத்து, ஆறிக் கொண்டிருக்கும் பாட்டில்களும், டப்பாக்களும்.


காய வைத்த புளி உப்பு சேர்த்து, உருண்டைகளாக்கி வைக்கப்பட்டுள்ளது. கவரில் போட்டு ஃபிரீஸரில் அடுக்கப்பட காத்திருக்கிறது.


சாமான்களை டப்பாக்களில் போட்டு ஷெல்ஃபில் அடுக்கியாச்சு.


தினப்படி உபயோகத்திற்கென்று வெளியே வைக்கப் பட்டிருக்கும் பொருட்கள்.


 
சமைக்கப் போவதும், சமைத்ததும் பிறகு வரும் படங்கள் காட்டும்:-)

இந்தப் பதிவு பார்த்துட்டு ஏதாவது சொல்லிட்டு போனால், கொஞ்சம் கொஞ்சம் உங்களுக்கும் சமைச்சு தருவேன் ;-)

30 comments:

சாந்தி மாரியப்பன் said...

உங்க கிச்சன் அழகா இருக்கு. நல்லா மெயிண்டெயின் செய்றீங்க. சீக்கிரம் சமையலை ஆரம்பிங்க.

athira said...

ஆ... செல்வியக்கா.... கடைசியாக சொன்னீங்க பாருங்கோ ஒரு வசனம் ... அதைப்பார்த்திட்டுத்தான் ஓடோடி வந்தேன்.. பந்திக்கு முந்தோணுமெல்லோ??? சொன்னபடி தந்திடுவீங்கதானே??? மட்டின் விண்டலூ மறக்கவேணாம் செல்வியக்கா... அதுதான் மெயின் டிஷ் ஆக இருக்கோணும்.

அதுசரி இப்படியெல்லாமா பொருட்கள் வாங்கி சேகரிப்பீங்க? பார்க்கவே தலை சுத்துது எனக்கு. நல்லாவே மினக்கெட்டு எல்லாம் அழகா செய்கிறீங்கள் வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

பின்ன வீட்டு வேலைன்னா சும்மாவா. இது மாதிரி சுத்தம் செஞ்சி வச்சா சமையல் நேரத்தில நேரமும் மிச்சமாகும், சமையலும் ருசியா இருக்கும்.. படங்கள் சூப்பர்

GEETHA ACHAL said...

சூப்பராக அழகாக படம் எடுத்து அசத்திவிட்டிங்க செல்வி ஆன்டி...அழகாக எல்லா பொருட்களை பார்த்து பார்த்து வாங்கினால் மாட்டும் போதது என்று சொல்லாமல் சொல்லிவிட்டிங்க...இதே மாதிரி காய்,பழங்களுக்கும் பதிவு போட்டால் என்னை போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்...இங்கு வாரத்திற்கு ஒரு முறை தான் இந்தியன் கடைகளுக்கு செல்வேன்..அதனால் காய்களை எப்படி பாதுகாப்பது, எந்த காய்கள் எவ்வளவு நாட்கள் தாங்கும் போன்றவை பதிவில் எழுதினால் நிறைய பேர் பயனடைவார்...நன்றி..

Asiya Omar said...

சூப்பர்.செல்விக்கா எல்லாம் ரெடி செய்தாச்சு,சமைத்தால் எனக்கும் கொஞ்சம் உண்டு தானே?ரொம்ப பசிக்குது,சீக்கிரம் அக்கா.

geetha said...

செல்விக்கா!
உங்க திறமையே திறமை. நிஜமாவே சொல்றேன். போட்டோக்களும் பார்த்து, உங்க வேலைகளையும் படித்து முடித்தபோது எனக்கே முதுகுவலி, உடம்புவலி வந்திடுச்சு.(இத்தனை வேலைகளையும் நானே செய்தார்போல்)
ரொம்ப பொறுமை உங்களுக்கு.
பாராட்டுக்கள்!

Anonymous said...

ஆன்ட்டி, அப்படியே எனக்கு என்ன வேணும்னு சொல்லிட்டே போகிறேன். சொல்லிட்டா, நிங்க செய்வது எனக்கு பிடிக்குமா இல்லையா என்கிற டென்சன் உங்களுக்கு இருக்காது பாருங்க. ரொம்ப எல்லாம் கேட்க மாட்டேன். இரண்டு வாரத்துக்கு தேவையான தவா பனீர், வெஜி பிரியாணி, வறுத்த நிலகடலை. சரியா? சீக்கிரம் அனுப்பிடுங்க please. ஓக்கேவா?

Menaga Sathia said...

எனக்கு பாதாம் புதினா சிக்கன் + நாண் செய்து கொடுத்திடுங்கம்மா...படங்கள் அழகாயிருக்கு அதைவிட உங்க கிச்சன் சூப்பராயிருக்கு.

அப்புறம் எனக்கு இந்த கேள்விக்கும் பதில் சொல்லுங்க. 1 வருஷத்துக்கு 2,3 பேர் கொண்ட குடும்பத்திற்க்கு சாமான்கள் எவ்வளவு வாங்கினால் சரியாக இருக்கும்.மொத்தமாக எங்கு கிடைக்கும்னு சொன்னீங்கன்னு எல்லோருக்கும் உதவும் செல்விமா....

செந்தமிழ் செல்வி said...

அமைதிச்சாரல்,
கிச்சன் பராமரிப்புக்கு நான் யாரையும் நம்புவதில்லை. என் கையே எனக்கு உதவி:-)
அதற்குள்ளே சமைக்க சொன்னா எப்படி? இன்னும் எவ்வளவு இருக்கு!!! மாதசாமான்கள், காய்கறி எல்லாம் வாங்க வேண்டாமா?
நன்றிம்மா.

செந்தமிழ் செல்வி said...

அதிரா,
/மட்டின் விண்டலூ மறக்கவேணாம் செல்வியக்கா/
மறக்க மாட்டேன்.. லிஸ்டில் முதலில் எழுதிக் கொண்டேன்.
ஆமாம் அதிரா, இப்படி பொருட்கள் இருந்தால் தான் டென்ஷனின்றி சமைக்க முடியும். காய்கறி இல்லாமல் கூட சில நாட்கள் சமாளிக்க முடியும்.
மிக்க நன்றி அதிரா.

செந்தமிழ் செல்வி said...

சகோ. ஜெய்லானி,
இரண்டு நாட்கள் லீவு போட்டு செய்ய வேண்டியதாயிற்று. ரொம்ப சரி தான். எல்லாம் சரியாக இருந்தால் தான் சமையலும் ருசிக்கும். நன்றி சகோதரரே!

செந்தமிழ் செல்வி said...

ஆசியா,,
என்ன இப்படி கேட்டுட்டே! உங்களுக்கெல்லாம் இல்லாமலா? நான் சமைக்க ஆரம்பித்தால் அரை மணி நேரத்தில் எல்லாம் ரெடியாகிடும். அதுவரை கொஞ்சம் ஸ்நேக்ஸ் தரவா?

செந்தமிழ் செல்வி said...

கீதா,
இன்னும் ஒரு ரகசியம் சொல்லவா? நான் சுத்தம் செய்து, பேக் செய்தது இரண்டு வீட்டு சாமான்களை, மகளுக்கும் சேர்த்து:-)
சும்மா சொல்லக் கூடாது.. பெண்டு கழண்டுடுச்சு.
பாராட்டுக்கு நன்றி கீதா!

செந்தமிழ் செல்வி said...

அனாமிகா,
லிஸ்டில் சேர்த்துக் கொண்டேன். கண்டிப்பாக சமைத்து தருவேன்.
என்ன! இரண்டு வாரத்திற்கு மட்டும் போதுமா:-)

பிடிச்சதை சொன்னதால் எனக்கும் சமைக்க சுலபம்.

செந்தமிழ் செல்வி said...

மேனகா,
/எனக்கு பாதாம் புதினா சிக்கன் + நாண் செய்து கொடுத்திடுங்கம்மா/
இவ்வளவு தானே! செய்து கொடுத்திட்டால் ஆச்சு:-)

/படங்கள் அழகாயிருக்கு அதைவிட உங்க கிச்சன் சூப்பராயிருக்கு/
படங்களின் பெருமை அப்பாவுக்கு.
கிச்சன் பார்த்து பார்த்து கட்டியதாச்சே!

நீ சொன்னது போல அளவுகள் எழுதலாமா, வேண்டாமான்னு யோசிச்சுகிட்டு இருந்தேன். அதையும் எழுதிடுவோம். விவரங்களும் எழுதறேன்.

செந்தமிழ் செல்வி said...

அன்பு கீதாச்சல்,
பொருட்களை வாங்குவது பெரிதல்ல, உடனடியாக உபயோகிக்க ஏற்றவாறு தயார் செய்து வைத்துக்கொள்வது தான் முக்கியம்.
மளிகைப் பொருட்களை முடித்து விட்டு காய்களுக்கு வருவதாக இருந்தேன். அடுத்தடுத்து வரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக சொல்கிறேன்.
நன்றி.

Anonymous said...

ஹாய் செல்விஅக்கா,

நலமா? என்னை ஞாபகமிருக்கிறதா?.....

உங்கள் தோட்டம், செல்லங்கள் எல்லாவற்றை படித்து பார்த்து ரசித்தேன்......அழகோ அழகு!!!! உங்க வீட்டுக்கு வந்துடுவா???? உங்க லவ்பேர்ட்ஸ் குட்டிம்மா சூப்பர்!!!!

எனக்கும் இது எல்லாம் ரொம்ப ஆசை...:-)))

அப்புறம் இந்த குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கண்டிப்பா இந்தியா சென்றதும் உபயோகமாக இருக்கும்.

நன்றி அக்கா....

அன்புடன்,
சுபத்ரா

INDIA 2121 said...

VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com

'பரிவை' சே.குமார் said...

உங்க கிச்சன் அழகா இருக்கு. நல்லா மெயிண்டெயின் செய்றீங்க. சீக்கிரம் சமையலை ஆரம்பிங்க.

செந்தமிழ் செல்வி said...

அன்பு சுபத்ரா,
நலமா? நான் நலமே!
நன்றாக ஞாபகம் இருக்கு.
தாராளமாக எங்க வீட்டுக்கு வந்திடலாம். தடையேதும் இல்லை.

உனக்கும் பயனளிக்கும் என்பதில் மகிழ்ச்சியே!

வருகைக்கும், பதிவிற்கும் மிக்க நன்றி.
அடிக்கடி வருகை தருக.

செந்தமிழ் செல்வி said...

சகோ.வால்பையன் (ஜுனியர்),
வந்து பார்த்து பதிவும் போட்டாச்சு.

செந்தமிழ் செல்வி said...

சகோ. குமார்,
//உங்க கிச்சன் அழகா இருக்கு. நல்லா மெயிண்டெயின் செய்றீங்க.//
மிக்க நன்றி. எனக்கு கிச்சன் இது போல் சுத்தமாக இருந்தால் தான் டென்ஷனின்றி சமைக்க முடியும்.

//சீக்கிரம் சமையலை ஆரம்பிங்க.//

நல்ல நாளாக பார்த்துக் கொண்டிருக்கேன்:-) நிறைய குறிப்புகள் படங்களுடன் வெயிட்டிங்.முதலில் ஒரு ஸ்வீட்டுடன் ஆரம்பிக்கலாம்னு காத்திருக்கேன். ஸ்வீட் செய்ய தான் நேரம் வரவில்லை:-(

மனோ சாமிநாதன் said...

பொருள்களின் பதப்படுத்தல் முறைகள் பற்றிய விளங்கங்களும் படங்களும் அருமை!

Anonymous said...

அருமையா இருக்கு செல்வி.பாத்து பாத்து சொலிருக்கீங்க.

செந்தமிழ் செல்வி said...

சகோதரி. மனோ,
மிக்க நன்றி! வழக்கமாக செய்வதை சொல்லி இருக்கிறேன். அவ்வளவுதான்.

செந்தமிழ் செல்வி said...

மிக்க நன்றி அம்மு!

Anonymous said...

அன்பு அக்கா,

"அன்னையர் தினவாழ்த்துக்கள்"

தினமும் ஒரு தடவையாவது நான் வந்துடுவேன். இந்த ப்ளாகில் எனக்கு தெரிந்தவரை எல்லாவற்றையும் படித்துவிட்டேன். இனியும் வருவேன்....:-)))

அன்புடன்,
சுபத்ரா.

செந்தமிழ் செல்வி said...

அன்பு சுபத்ரா,
உனக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள்.

தினமும் பதிவு போட எனக்கும் ஆசை தான். நேரம் தான் பிரச்னை. இன்னும் 2 வாரங்கள் இப்படித்தான். அம்மா, தங்கை எல்லாம் ஊரிலிருந்து வருகிறார்கள். வரும் 18ந்தேதி பேரனுக்கு பிறந்தநாள். எல்லாம் முடிந்தால் தான் கொஞ்சம் ஃப்ரீ ஆக முடியும்.

கண்டிப்பாக இனியும் வரணும். வருகைக்கு நன்றி.

Anonymous said...

Fastidious answers in return of this issue with firm arguments and explaining all on the topic of that.


my web-site ... league of legends hack

Anonymous said...

I'm really impressed with your writing skills and also with the layout on your weblog. Is this a paid theme or did you modify it yourself? Anyway keep up the excellent quality writing, it is rare to see a great blog like this one these days.

my weblog - download 7zip

Post a Comment