Thursday, February 25, 2010
என் பெண் டைலரிடம் ஒரு சுடிதார் தைக்க கொடுத்திருந்தா.
இவள் ஒரு மாடல் சொல்ல, டைலர் ஒரு மாதிரியாக தைத்துக் கொடுக்க.....
பெண்ணுக்குப் பிடிக்கவில்லை அந்த மாடல்.
என்னிடம் கொடுத்து, எதையாவது தைத்து கொஞ்சம் மாற்றிக் கொடுங்கன்னு சொன்னாள்.
சுடிதாரை மாற்ற எனக்குத் தேவையானதாக இருந்தவை.
1) திலக வடிவ டபுள் கலர் குந்தன் ஸ்டோன்.
2) வெள்ளை கலர் குந்தன் ஸ்லோன்.
3) நூல்கண்டு.
4) த்ரி டி மல்ட்டி கலர் அவுட் லைனர்.
5) ஊசி
6) ஃபெவி க்ளூ
7) இரண்டு கைகள் :-))
இப்ப எப்படி இருக்குன்னு பார்த்துட்டு சொல்லுங்க.
நான் மாற்று முன் எப்படி இருந்ததுன்னு போட்டோ எடுக்க மறந்துட்டேன் :-(
Labels: கை வண்ணம்
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
இப்பவும் நாந்தான் பர்ஸ்ட்..
ரொம்ப அழகாயிருக்கு செல்விமா!! இன்னும் என்னன்ன திறமைலாம் ஒளித்து வைத்திருக்கிங்க...
செல்விக்கா!
பரவாயில்லையே! "பேசாம தூக்கிபோட்டுட்டு போம்மா"ன்னு சொல்லாம, பொறுமையா பண்ணியிருக்கீங்க.
நான்கூட ஒருமுறை சுரிதார் தைக்க கொடுத்தப்ப பின்கழுத்து ரொம்ப இறக்கி வெட்டிட்டாங்க.. அதை போடவே முடியலை.
3 செட்டை வேலைக்கார பெண்ணிடம்தான் தூக்கிகொடுத்தேன்.
இப்பதான் புரியுது. ஏதாவது இந்தமாதிரி வேலை செய்து அதனை சரிபண்ணலாம்னு. ரொம்ப நல்லா இருக்குங்க்கா!
ஐடியாவிற்கு நன்றி!
செல்விமா!!! நல்லா இருக்கு சுடி/டிசைன்....
ரொம்ப அழகாயிருக்கு செல்விமா!!
நல்லா இருக்கு சுடிதார் டிசைன்
தேவையான அளவு பொறுமை மற்றும் நேரம் - சொல்லாம விட்டீங்களே :)
முன்னாடி இருந்த சுடிதாரைக் காட்டினாத் தான் மார்க் :))) சும்மா சொன்னேன்.. நல்லாப் பண்ணியிருக்கீங்க.
அழகா இருக்கு. என் சுடியும் அனுப்புறேன். வர்க் பண்ணி அனுப்புங்க செல்வி.
குத்தன் ஒர்க் நல்லாயிருக்கு
//த்ரி டி மல்ட்டி கலர் அவுட் லைனர்.//
இது என்ன? எப்படி பயன்படுத்தி இருக்கீங்க இதில?
தோழி,சுடியை சூட்டிகையாக்கிட்டீங்களே!!சமையல்,கைவேலை,தோட்டக்கலை,தையல்,வலைப்பூ,பிராணி வளர்ப்பு,அலுவலகம் இப்படி ஆல் இன் ஆல் அழகு ராணி என்பதில் சந்தேகம் இல்லை.சபாஷ்!!!
என்கிட்ட இப்படி டெய்லர் சுமாராக தைத்து தந்த சுடிதார் நிறைய இருக்கு,இனி ஆசியா ஊசியும் கையுமாகத்தான் இருப்பா.
அய்யோ செல்விமா உங்களை கண்டுபிடுச்சாச்சு...நேத்து கூட உங்களை பத்தி தான் அவகிட்டே சொல்லிட்டு இருந்தேன் ...நல்லா இருக்கீங்களா செல்விமா?
பாலோவ்ர்ஸ் ஆப்ஷன் இல்லை என்று ஏற்கனவே பதில் போட்டு இருந்தேன்,
குந்தன் வொர்க் சுடியில் நல்ல இருக்கு
சுடி நானும் இது போல் மணி , லேஸ், பைப்பிங் என்று தைப்பதுண்டு இப்ப சுத்தமாக நேரம் கிடையாது, நீங்கள் எப்படி தான் இப்ப போடுறீங்க என்று தெரியவில்லை.
மேனகா,
எனக்கே தெரியலை. என்னெல்லாம் தோணுதோ அதை அப்பப்ப செய்து பார்ப்பேன். அவ்வளவுதான். நன்றிம்மா.
ம்ம்ம்.... இப்பவும் நீதான் ஃபர்ஸ்ட்.
கீதா,
அப்படி தூக்கிப் போட மாட்டேன்னு தான் எங்கிட்ட கொடுக்கிறாங்க. கொஞ்சம் யோசிச்சா எதையும் மாற்றலாம்:-) நன்றி கீதா.
இலா,
நல்லா மாற்றி இருக்கேனாக்கும்;-)
ரொம்ப தேங்க்ஸ் ப்ரபா, நீ கொடுக்கச் சொன்னதை பேரனிடம் கொடுத்து விட்டேன்.
சந்தனா,
பொறுமை கூட பரவாயில்லை. நேரம் தான்.... யாரும் கடன் கொடுத்தால் பரவாயில்லைன்னு இருக்கு. நன்றி.
இமா,
அதற்கென்ன? நல்லாவே அனுப்புங்க. செய்து தர்றேன். கூட 2 சேர்த்து அனுப்புங்க:-)
வாருங்கள் தமிழ்க்குடும்பம்!!! உங்கள் வரவும், பதிவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆச்சரியமாகவும் இருக்கு.
மிக்க நன்றி. அடிக்கடி வந்து கருத்து சொல்லுங்க.
ஹுசைனம்மா,
கையிலும், ஓரத்திலும் வெள்ளைக்கலர் குந்தன் ஸ்டோனைச் சுற்றி வட்டம் போட்டிருப்பது த்ரீ டி அவுட் லைனரால். அதுவும் ஃபேப்ரிக் பெயிண்ட் போலத்தான்.
ஸ்னேகிதி ஸாதிகா,
உங்களின் எழுத்துத் திறமையைப் பார்த்து நான் வியக்கிறேன். நீங்கன்னா என்னைச் சொல்றீங்க! உங்களுக்கும் இங்கேயே வாழ்த்து சொல்லிக்கிறேன்.
ஆசியா,
பார்த்து... இரவு படுக்கப் போகும் போதாவது ஊசியைக் கீழே வையுங்கோ:-)
ஹர்ஷினிம்மா,
நலமா? என்னைக் கண்டுபிடிக்க இவ்வளவு நாள் ஆச்சுதோ?
நல்லா இருக்கேன்.
ஜலீலா,
ஆமாம், நானும் எவ்வளவோ முயற்சித்து விட்டேன். ஃபாலோயர்ஸ் ஆப்ஷன் வரமாட்டேங்குது.
நீங்க தினம் பிளாக்கில் எழுதறீங்க, என்னால் முடியலையே:-(
நேற்றே பல முறை பதிவு போட்டு, எர்ரர் வந்து போடவே முடியலை. தாமதமான பதிவுக்கு அனைவரும் மன்னிக்கவும். தொடர்ந்த ஆதரவுக்கு வேண்டுகிறேன்.
செல்விக்கா,நீங்க ரொம்ப பிஸின்னு தெரியும்,என் ப்ளாக் பக்கம் வாங்க,உங்களுக்காக லவ் பேர்ட்ஸ் இருக்கு,காலம் மாறிப்போச்சு இடுகையில்.
dashborad - layout- addgadget - இதில் சென்று பாலோவர்ஸ் என்று இருப்பதை கிளிக்செய்து சேவ் கொடுத்து நீங்கள் சைன் இன் ஆகுங்கள், பிறகு மறுபடி சைன் அவுட், சைன் இன் செய்து பாருஙக்ள். இல்லையென்றால் டெம்ப்லேட் தான் மாற்றனும்.
ஆசியா,
கண்டிப்பாக வருகிறேன். இன்று ஒரு முக்கியமான அசைன்மெண்ட் இருக்கு. முடித்து விட்டு வருகிறேன். ஒரு கர்ப்பிணி பெண்ணின் வேண்டுகோள். தப்பா நினைக்காதீங்க. ப்ளீஸ்!
ஜலீலா,
பாலோவர்ஸ் சோதனை முயற்சியில் இருப்பதாக வருகிறது. 2வது வழிதான், அதற்கு தான் யோசிக்கிறேன்.
வேறு வழி இருக்கான்னு பார்க்கிறேன்.
very cute work . kindly send me a mail whn u post... ... pls mail. me too not havn ur mail id so i had nt infrm u...dnt mistake me. am so sorry. thank u
மிக்க நன்றி சகோதரரே! அப்படியே ஆகட்டும்:-)
நீங்க வேற பெயர் போட்டு புதுசா மாற்றுங்க. இந்த டிசைன் ரொம்ப பிடிச்சி இருந்தா இதை மறுபடி கொஞ்சம் நாள் கழித்து மாற்றி கொள்ளலாம்.
இடுகைகள் குறைவாக இருப்பதால் இப்பவே மாற்றிடலாம்.
மலர் வனம் என்று மற்றொரு பிளாக் இருக்கு கொஞ்சம் நாள் பார்த்ததா ஞாபகம் ஆகையாலா என்னவென்று தெரியல.
எதுக்கும் பிலாக் பெயரையும் மாற்றுங்கள்.
ஜலீலா,
எத்தனையோ டெம்ப்லேட் செலக்ட் செய்து அதிலெல்லாம் தமிழ் ஃபாண்ட் சரியாக வராமல் இதில் தான் நன்றாக வந்ததுன்னு செலக்ட் செய்தேன். மற்றவர்கள் எடுத்ததையும் எடுக்க முடியாது, இல்லையா? டெம்ப்லேட் மாற்றினால், பின்னூட்டம் போகிறதே. அத்ற்கு என்ன செய்ய? நீங்க மாற்றினீங்க தானே?
அதே பெயரும் எத்தனையோ நாட்கள் மண்டையைக் குடைந்து இந்தப் பெயரை செலக்ட் செய்தேன். பிளாக் பதிவு செய்த போது இது ஃப்ரீயாக இருக்குன்னு தான் வந்தது. பெயர் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கே:-(
டெம்ப்லேட் வேணா, மாற்றிப் பார்க்கிறேன்.
பொறுமையாக உட்கார்ந்து செய்ய நேரமும் இல்லை. இருப்பதை வைத்து ஓட்டுவோம்னு இருக்கு. பார்ப்போம்.
செல்விம்மா நீங்கள் இந்த ப்ளாக் ஆரம்பிக்கும் போது மொழி தமிழ்னு செலக்ட் செய்து அதுக்கப்புறம் ப்ளாக் ஆரம்பீசுருந்தீங்கன்னா(அதான் ஸ்டெப்ஸ் எல்லாமே தமிழில் வருமே) ஃபாலோவர்ஸ் கேஜெட் சேர்ப்பது கஷ்டம். முதலில் ஆங்கிலத்திற்கு மாத்திட்டு மீண்டும் புதுசா ப்ளாக் ஆரம்பிங்க. இதில் இருப்பது எல்லாத்தையும் புதிய ப்ளாகுக்கு மாற்றிவிடலாம். நான் அப்படித்தான் செய்தேன். ஃபாலோவர்ஸ்கேஜெட்டும் போட்டாச்சு. கொஞ்ச நாள் கழிச்சு முதலில் ஆரம்பிச்ச இந்த ப்ளாகை நீக்கிவிடலாம்.
Selvi akka, very impressive work. Can you fix mine too?
Post a Comment