Sunday, March 7, 2010

செய்திக்கு சென்ஸார் வருமா?

சமீபமாக மீடியாக்களிலும், பத்திரிக்கைகளிலும் அடிபடுவது சாமியாரைப் பற்றிய செய்தி தான்.

பெட்டிக்கடைகளில் இருந்து ஐடி ஆபீஸ் வரை இது தான் பேச்சாக உள்ளது. திரும்ப திரும்ப பலமுறை ஒரு சினிமாக் காட்சியைப் போன்று மீடியாக்கள் போட்டி போட்டுக் கொண்டு காட்டியது. வந்த விருந்தினர்கள் முன்பு செய்தியைப் பார்க்கவே நெளியும் நிலை. குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஒரு செய்தியைக் கூட நாம் பயமின்றி பார்க்க முடியுமாங்கிறது இப்ப சந்தேகமா இருக்கு.

பூட்டிய கதவுக்குள் நடந்தவற்றை அநியாயம், அயோக்கியத்தனம் என்று சொன்னவர்கள், அதை மறைத்து வைத்த காமிராவால் படம் எடுத்தது எந்த அளவு அயோக்கியத்தனம்? அந்த நிகழ்ச்சி ஒன்றும் இன்று, நேற்று புதியதாக நடந்தது போல் தெரியவில்லை. இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போது மட்டும் வெளியில் வர என்ன காரணமோ? அந்த ஆராய்ச்சியெல்லாம் நமக்கு வேண்டாம்!!

ஒரு சாமியார் இவ்வாறு செய்யலாமான்னு கொதித்து எழும் மக்கள் தானே அவரை இந்த அளவுக்கு உயர்த்தியது? சாமியைக் கும்பிடலாம். அதற்கு எதற்கு இடைத்தரகர்கள்? என்னை சாமியாராக்கு, என்னை நம்புன்னு எநத சாமியார் சொல்கிறார்? யாரோ ஒருவர் எதையோ சொல்லப் போக, அதுவும் தற்செயலாக நடக்க அவர் சொல்வதெல்லாம் நடக்குதுன்னு ஒரு கோஷ்டி கிளப்பி விட்டு சுயலாபம் பார்க்கிறாங்க.

மக்களும் அதை நம்பி காசு, பணம்னு கொட்ட வேண்டியது. அப்பறம் அந்த சாமியாரைப் பற்றி ஏதாவது உண்மை தெரிய வரும் போது ஆத்திரப்பட்டு எல்லாவற்றையும் அடித்து நொறுக்குவது. திருந்தணும்னு நினைச்சிருந்தா ஒரு பிரேமானந்தா பற்றிய உண்மை வந்த போதே, எந்த சாமியார்களையும் மக்கள் ஏறெடுத்தும் பாராமால் இருந்திருந்தால், இன்று இப்படி அவன் அயோக்கியன், இவன் அயோக்கியன்னு சொல்லும் நிலை வந்திருக்குமா? தவறு முழுவதும் தம்மிடம் வைத்துக் கொண்டு ஏமாற்றுவர்களை குறை சொல்லி என்ன பயன்?

ஆங், நான் சொல்ல வந்தது இதுவே இல்லை.

செய்திகள் என்றால் நாட்டு நடப்பு, உலக நடப்புகளை தெரிந்து கொள்வதற்கு என்றிருந்த காலம் போய், செய்திக்கிடையே இப்படிப்பட்ட படங்களைக் காட்டினால் பெரியவர்கள், குழந்தைகள்னு உட்கார்ந்து எப்படி செய்திகளைப் பார்ப்பது?

இது போன்ற படங்களைக் காட்டும் செய்திகளுக்கும் இனி சென்ஸார் வருமா?

8 comments:

geetha said...

செல்விக்கா!
சரியா சொன்னீங்க. சாமியை நம்பலாம். ஆசாமியை அல்ல!
காலம் கலிகாலமாய் போய் பல வருடங்கள் ஆச்சு. மக்கள்தான் இன்னும் திருந்தவே இல்ல!
"கதவை திறந்தா காத்து வரும், ஜன்னலை திறந்தா காத்து வரும்னு" ஏதோ இதுவரை யாருக்குமே தெரியாத தத்துவத்தினை சொன்ன மாதிரி விழுந்து விழுந்து படிச்சவங்களுக்கு சாமியார் வீட்டு கதவை திறந்தா சாக்கடை நாற்றம் வரும்னு இப்பவாவது புரிந்ததே.
அதுவரையில் சந்தோஷம்தான்!

ஸாதிகா said...

தோழி நீங்க சொன்னார்ப்போல் சென்சார் செய்து செய்தியை ஊடகங்களில் போட்டால்தான்,முளைத்து இருக்கும்,இனி முளைக்கப்போகும் சுவாமிகளுக்கு ஒரு பயம் வரும்.இதிலாவது மக்களுக்கு விழிப்புணர்வு வந்தால் சரி.

ஹுஸைனம்மா said...

//செய்திகளுக்கும் இனி சென்ஸார் வருமா?//

ம்ம்.. நியூஸ் சேனல் பாக்கக்கூட யோசிக்கணும்போல இப்ப!!

ஹைஷ்126 said...

உண்மைதான். கூடிய விரைவில் வரும். இதுவரை திரைமறைவாக இருந்தது. இனி திரைக்கு வெளியிலேயே வரும். உ.ம் 26 நவம்பர் 08 இல் இந்த செய்தியாளர்களின் அட்டகாசம் தாங்கமுடியாமல் ஐக்கிய நாடுகள் நம்நாட்டுக்கு கொடுத்த எச்சரிக்கையின் பலன்தான் அது.

வாழ்க வளமுடன்

செந்தமிழ் செல்வி said...

கீதா,
இப்பவும் மக்களுக்கா எங்கே புரிஞ்சது? யாரோ எதற்கோ எடுத்து விட்ட ஆயுதம், மக்களுக்கு சாதகம் போல் தெரியுது. அவ்வளவுதான். இப்ப புரிஞ்ச மாதிரி இருக்கு. நாளைக்கே இன்னொரு சாமியார் வந்தா எல்லாத்தையும் மறந்துடுவாங்க:-)

ஸ்னேகிதி ஸாதிகா,
புதுசா முளைக்கப் போறவங்களுக்கு பயம் எங்க வரப் போகுது. மாட்டிக்காமல் எப்படி ஏமாத்தறதுன்னு இன்னும் கொஞ்சம் உஷாரா ஆகிடுவாங்க!!!

ஹுசைனம்மா,
கண்டிப்பாக இனி யோசிக்கணும்.

சகோ. ஹைஸ்,
ஓ, அப்படியா? வந்தால் நல்லது தான். மிக்க நன்றி.

geetha said...

ஆமா செல்விக்கா!
யாரோ சாமியாரை பழிவாங்க எடுத்துவிட்ட அஸ்திரம்தான் அந்த வீடியோ. என் மாமனார், கணவர் இருவரும் சத்யசாய் பாபாவின் பக்தர்கள். ஆரம்பத்தில் இருந்து எனக்கு அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும், அவரது போதனைகள் ரொம்ப பிடிக்கும்.
கண்மூடித்தனமாய் ஆசாமிகளை நானும் நம்புவதில்லை.
சில நல்ல விஷயங்களை சொல்பவர்களை, செய்பவர்களை நல்ல மனிதர்களாக மட்டும் பார்த்தால் போதும்!

Music Composer Vivek Narayan said...

I agree with ur point
realy it was delicate to watch the news with my children

ஹைஷ்126 said...

சரியா வருது.

வாழ்க வளமுடன்

Post a Comment