Thursday, April 1, 2010

விஜய் சூப்பர் சிங்கர் ஜூனியர் -2


விஜய் சூப்பர் சிங்கர் ஜூனியர் -2 தொடர்ந்து பார்ப்பவர்களில் நானும் ஒருத்தி. பெரியவர்களே பாட கஷ்டப்படும் பாடல்களை சின்ன குழந்தைகள் பாடுவது ரொம்ப அழகு. அதிலும் குறிப்பாக ஸ்ரீகாந்த். ஆறே வயது நிரம்பிய அசத்தல் குழந்தை.

அத்தனை போடியாளர்களின் நடுவில் தன் திறமையால் தேர்வாகி, இதுவரை தன் வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தார் ஸ்ரீகாந்த்.

எந்த சுற்றானாலும் தன் இனிய குரலால் எல்லோரையும் வசப்படுத்தி வந்தார். அவனது குரல் இனிமைக்கு இந்நிகழ்ச்சியைப் பார்ர்க்கும் அனைவருமே கண்டிப்பாக ரசிகராகத்தான் இருந்திருப்பார்கள்.

கடைசி எட்டு பேரில் ஒருவராக இருந்த ஸ்ரீகாந்த் இந்த வார எலிமினேஷனில் வெளியேறினார். முடிவை சொன்ன மனோ அவர்கள், ஸ்ரீகாந்தை மடியில் உட்கார்த்தி வைத்து வாழ்த்தி பாடியது கூட அந்தக் குழந்தைக்கு புரிந்திருக்குமா என்பது சந்தேகமே. ஸ்ரீகாந்த் இல்லாமல் எப்படி இன்னும் 6 வாரம் போகப் போகுதுன்னு நினைச்சாலே கஷ்டமா இருக்குன்னு மனோ சொன்னார். நீ ஏதாவது பாட விரும்புகிறாயா என்று கேட்டவுடன், எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே என்று அக்குழந்தை பாட, மனோவே அழுது விட்டார். அவர் வெளியேறும் போது கலங்காதவர்கள் இல்லை. நம் கண்களும் குளமாக பிரியா விடை கொடுத்தோம்.

அக்குழந்தையின் பெற்றோர் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இப்படி குழந்தையைப் பெற என்ன புண்ணியம் செய்தார்களோ? இந்த சின்ன வயதிலேயே எவ்வளவு திறமை!!!

ஹை பிட்ச் பாடல்களுத்தான் அவர் குரல் ஏற்றதாக இருந்தாலும், எல்லாப் பாடல்களையும் பயமின்றி அவர் பாடுவதே தனி அழகு தான். அதுமட்டுமன்றி மற்றவர்கள் அளவுக்கு அவர் வயதும் இல்லை. இந்த வயதில் இவ்வளவு தூரம் பாடல்களை நினைவில் வைத்துப் பாடுவதே பெரிய விஷயம். அதற்காவே அவரைப் பாராட்டலாம். எது எப்படியோ இந்நிகழ்ச்சியில் அவர் பாடுவது எல்லோருக்கும் ஒரு எண்டர்டெயினிங்காவே இருந்தது.

அவரின் திறமைகள் வளர்ந்து, பெரிய பாடகராக வர நாமும் வாழ்த்துவோம்.

கொசுறு: விரைவில் ஸ்ரீகாந்தை வெள்ளித்திரையிலும் காணலாம். சத்யராஜின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்காராம்.

6 comments:

asiya omar said...

செல்விக்கா மாமா மாமி மகள் என்று நால்வரும் தினமும் அமர்ந்து ரசித்து பார்க்கும் ஒரு நிகழ்ச்சி,நேற்று மனோசாரை பார்த்து சிரித்து சிரித்து மகிழ்ந்தோம்,இன்று ஸ்ரீ காந்த் வெளியேற்றம் தொடர்ந்து கண்களில் வழிந்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்து கொண்டேன்.என்னவொரு அதிசயம்!6 வயது பையனிடம் இத்தனையும் எப்படி,ஆச்சரியம் தான்.

இமா said...

I haven't watched that bit yet. ;(

Srikanth reallly is sweet. ;)

geetha said...

செல்விக்கா!
எங்களுக்கு விஜய்டிவி வராது. இருந்தாலும் உங்க கமென்ட்டைப்படித்ததும் இன்டர்நெட்டில் பார்க்கத்தோணுது.

athira said...

நான் விஜய் ரீவி பார்ப்பதில்லை.

எனக்கு ஸ்ரீகாந்தை மிகவும் பிடிக்கும்.

Mrs.Menagasathia said...

விஜய் டிவி இங்கு தெரியாது,நெட்டிலும் பார்ப்பதில்லை.மேலும் சிறக்க ஸ்ரீ காந்த்க்கு வாழ்த்துக்கள்!!

செந்தமிழ் செல்வி said...

உண்மை ஆசியா. எல்லோருமாக பார்க்க முடிகிற ஒரு நிகழ்ச்சி. குழந்தைகளைப் பார்ப்பதே அழகு தான்.


ஆமாம் இமா,
நல்ல துருதுருன்னு, ஸ்வீட் பாய்!

கீதா, முடிந்தால் பார், நன்றாக இருக்கும்.

அதிரா, க்யூட் பாயை பிடிக்காதவர்களே இருக்க முடியாது:--)

நன்றி மேனகா!

Post a Comment