Monday, May 10, 2010


பிளாக்கில் எழுதி ரொம்ப நாட்கள் ஆனது போல் இருக்கு. இன்னமும் இரண்டு வாரங்களுக்கு கொஞ்சம் அதிகமான வேலை தான். உறவினர் வருகை, பேரனின் பிறந்தநாள் எல்லாம் முடித்த பிறகு தான் நேரம் கிடைக்கும். கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் இந்தப் பதிவு.

வருடாந்திரப் பொருட்களைப் பற்றியே தொடர்ந்து எழுதுவது போல் இருக்குன்னு போன பதிவோடு முடித்து விடலாம் என்று இருந்தேன். ஆனால், ஒரு விஷயத்தைப் பற்றி சொல்ல வந்தால் முழுவதும் சொல்லி முடித்தால் தானே உபயோகமாக இருக்கும். அது மட்டுமன்றி மேனகாவின் வேண்டுகோளும் முக்கிய காரணம்.

வருடாந்திரப் பொருட்கள் பாதுகாக்கும் முறை,பராமரித்தல்,சுத்தப்படுத்துதல் எல்லாம் சொல்லியாகி விட்டது. இந்தப் பகுதியில் எந்த அளவு வாங்குவது என்பது பற்றியும் சொல்லி விடுகிறேன்.

சராசரியாக 4 பேர் (2 பெரியவர்கள் + 2 சிறியவர்கள்) உள்ள குடும்பத்திற்கான, ஒரு வருடத்திற்கான அளவு இது. அவ்வப்போது வரும் விருந்தினர்களுக்கும் சேர்த்தே இருக்கும்.

அரிசி - 225 கிலோ (3 x 75 கிலோ),
இட்லி அரிசி - 50 கிலோ,
கோதுமை - 50 கிலோ,
துவரம் பருப்பு - 15 கிலோ (மாதம் ஒரு கிலோ + விருந்தினர் செலவு),
உளுத்தம் பருப்பு - 15 கிலோ,
கடலைப் பருப்பு - 3 கிலோ,
பாசிப்பருப்பு - 3 கிலோ,
புளி - 5 கிலோ,
மிளகாய் - 2 கிலோ,
கொத்தமல்லி (தனியா) - 3 கிலோ
கடுகு - 2 கிலோ,
சீரகம் - 2 கிலோ (தினமும் ரசம் வைப்பதாக இருந்தால் 2 கிலோ,  இல்லைன்னா ஒரு கிலோ போதும்),
மிளகு -1/2 கிலோ,
சோம்பு - 1/2 கிலோ,
வெந்தயம் - 2 கிலோ,
கசகசா -1/2 கிலோ,
மஞ்சள் தூள் - 1/2 கிலோ,
பொட்டுக்கடலை - 5 கிலோ,
நிலக்கடலை - 2 கிலோ,
கொண்டக்கடலை - 2 கிலோ,
பச்சைப் பட்டாணி - 2 கிலோ,
பாசிப்பயிறு (முழு) - 2 கிலோ,
தட்டைப்பயிறு (காராமணி) - 2 கிலோ,
கொள்ளு - 2 கிலோ,
ராகி (கேழ்வரகு)- 5 கிலோ,
வெள்ளை சோயா - 2 கிலோ,
கருப்பு சோயா - 1 கிலோ,
மொச்சை - 1 கிலோ,
சின்ன ஜவ்வரிசி - 2 கிலோ (உப்புமா செய்வதற்கும், பணியாரம், இட்லிக்கு மாவு அரைக்கும் போது சேர்க்க),
கெட்டி அவல் - 2 கிலோ,
மீல் மேக்கர் -1 கிலோ,
பட்டை - 25 கிராம்,
ஏலக்காய் - 25 கிராம்,
கிராம்பு - 25 கிராம்,
பிரிஞ்சி இலை -5 கிராம்,
அன்னாசிப்பூ - 25 கிராம்,
மராட்டி மொக்கு - 25 கிராம்.

வருடத்திற்கும் தேவையான சாம்பார் பொடி அரைப்பதற்கு போதுமான மிளகாயும், தனியாவும் இதனுடன் சேர்ந்துள்ளது. சாம்பார் பொடி அரைக்கவில்லையெனில். ஒரு கிலோ மிளகாயையும், ஒரு கிலோ தனியாவையும் குறைத்துக் கொள்ளலாம்.

எனக்குத் தெரிந்தவரை எல்லாப் பொருட்களையும் கொடுத்துள்ளேன்.விடுபட்டவை எதுவும் இருந்தால் ஞாபகம் வரும் போது சொல்கிறேன். இங்கு கொடுக்கப்பட்ட அளவுகள் தோராயமான அளவு தான். இதிலுள்ள பொருட்களை கூட்டி, குறைத்து வாங்குவது அவரவர் விருப்பம்.

அரிசி மற்றும் கோதுமை தவிர்த்து எஞ்சிய பொருட்கள் வாங்க இந்த வருடம் சுமார் நான்காயிரம் ரூபாய் தேவைப்படும். அரிசியும், கோதுமையும் தரம் பொறுத்து விலை மாறும். மற்ற பொருட்களும் வெவ்வேறு தரத்தில் உள்ளன. இது முதல்   தரத்திற்கான விலை. வருடம் ஒரு முறை வாங்குவதால், விலையைப் பார்க்கக் கூடாது. விலை குறைவென தரக்குறைவான பொருட்களை வாங்குவது புத்திசாலித்தனமல்ல.

மொத்தமாக, சீசனில் வாங்குவதால் பின்னாளில் வரக்கூடிய விலையேற்றத்தைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் வருடம் ழுழுமைக்கும் ஒரே மாதிரியான பொருட்கள் இருப்பதால் சமைப்பதற்கு தேவையான அளவுகளும் மாறாது. ருசியும் மாறாது.

கிடைக்ககூடிய இடங்கள் என்றால், எனக்குத் தெரிந்தவை மட்டும் தான் என்னால் சொல்ல முடியும்.

1) ஈரோடு அருகே அந்தியூர் சந்தையில் எல்லாப் பொருட்களும் தரமானதாகக் கிடைக்கும்.

2) இராசிபுரம் அருகே பேளுக்குறிச்சி சந்தையில் நல்ல பொருட்கள் கிடைக்கும். ஆனால், கொஞ்சம் விழிப்புடன் வாங்க வேண்டும். நன்கு தெரிந்தவர்கள் யாரேனும் கூட இருந்தால் நலம்.

3) சேலத்தில் லீ பஜார் என்னுமிடத்தில் எல்லாம் கிடைக்கும்.

4) கரூர், திண்டுக்கல்லில் மிளகாய் மட்டும் கிடைக்கும்.

5) சில டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்களில் சீசனில் இதற்கென தனி பிரிவே இருக்கும். அங்கேயே சில்லறையில் வாங்குவதற்கும், மொத்த பொருட்கள் வாங்குவதற்கும் விலை வித்தியாசம் உண்டு.

இவ்வளவு பொருட்களை நாம் முன் கூட்டியே வாங்கி விடுவதால், மாதாந்திர மளிகை லிஸ்ட்டில் கணிசமான தொகை குறையும். இவை போக ரவை, மைதா, எண்ணெய் வகைகள், சோப், பேஸ்ட் போன்றவைகள் மட்டும் வாங்கினால் போதும்.

கூடுமானவரை எல்லா விளக்கங்களும் கொடுத்து விட்டேன் என நினைக்கிறேன். அடுத்த பகுதி என்னவாக இருக்கும்னு யோசிச்சுகிட்டேஏஏஏஏஏ இருங்க:-)

21 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லாவே பட்ஜெட் போட்டிருக்கீங்க அக்கா.

மின்மினி RS said...

நல்லதொரு பட்ஜெட். ரொம்ப சூப்பர் அக்கா.

Anonymous said...

ஒரு வருஷத்தில இவ்ளோ சப்படறோமா? எனக்கு மயக்கம் வருது. எங்க வீட்ல 50 கிலோ அரிசி மூட்டை 3 கூட ஒரு வருஷத்தில முடியாது. சாதம் குறைவாகவும் நிறைய சைட் சாப்பிடுவோம். நல்ல தொகுப்பு செல்விம்மா. அரிசி கோதுமை தவிர்த்தா வெறும் 4000 ரூபாய் தானா? நான் இந்தியாவில் வந்து செட்டில் ஆகப்போறேன். பக்கத்தில் ஒரு வீடு பாருங்க செல்விம்மா.ok? =))

Anonymous said...

வாரத்தில் 2 / 3 தடவைகள் கடலைப்பருப்பு வடை அம்மா சுடுவாங்க. அதுக்கே நிறைய கடலைப் பருப்பு செலவாகும். அப்புறம் உளுந்து வடை இன்னொரு 2 /3 நாட்கள். ஞாயிறு மட்டும் எந்த வடையும் இல்லை. அந்த ஊளுந்து வடையில காய்கறி, கொண்டைக்கடலை, கீரை எல்லாம் போட்டு சுட்டு டாச்சர் பண்ணுவாங்க எங்க அம்மா. சும்மா சொல்லக்கூடாது நன்னா இருக்கும். உளுந்து வடை மாலை டிபன்னா இரவு பாலும் பழமும் மட்டும் சாப்பிட்டுட்டு தூங்கிடுவோம். அதை தவிர நிலகடலை வறுத்து உடைச்சு ஒரு டின்ல போட்டு வைப்பாங்க. அது மாதம் 5 கிலோ ஆகும். அது தவிர காலையில தோசை / இட்லினு எங்க சக்க உளுந்து. பயறும் பட்டாணியும் கொண்டைக்கடலையும் ஒரு 2 கிலோ வீதம் ஒரு மாதம் தேவைப்படும். இதெல்லாம் சாப்பிட்டும் நாங்க அன்டர் வெயிட்ல இல்லே இருக்கோம். எங்க வீட்டு லிஸ்ட் பார்த்து மயக்கம் போடுட்டாதீங்க செல்விம்மா.

Mahi said...

செல்வி அக்கா, ஊர் ஞாபகம் வருது உங்க வருடாந்திர பொருட்கள் சேகரிப்பை படிக்கும்போது!பொறுமையா எல்லா விவரமும் தொகுத்து குடுத்திருக்கீங்க! பாராட்டுக்கள்.

Asiya Omar said...

அருமையாக தொகுத்து எழுதி இருக்கீங்க ,பாராட்டுக்கள்.

ஜெய்லானி said...

ஏங்க இந்த கஞ்சதனம் , நா கண்ணுப் படமாட்டேன். கொஞ்சம் நிறையவே போடுங்க.இருந்தாலும் லிஸ்ட் நோட் பண்ணியாச்சு.

அப்புறம், புரோபைலில் எங்க ஊர் பக்கம் போட்டுட்டு, வாங்கற சாமானை 200 கிமீ தள்ளி போட்டுட்டீங்களே..

Menaga Sathia said...

நல்ல விளக்கமா தொகுத்து எழுதிருக்கிங்கம்மா,நன்றி!!

//அப்புறம், புரோபைலில் எங்க ஊர் பக்கம் போட்டுட்டு, வாங்கற சாமானை 200 கிமீ தள்ளி போட்டுட்டீங்களே..
// அதானே..பாண்டியில் இதெல்லாம் மொத்தமாக வாங்கமுடியாதா???

அடுத்த பதிவு என்னன்னு நான் கண்டுபிடித்துட்டேன்,சோ ஸ்வீட் எனக்குதான்...பேரனின் பிறந்தநாள் பதிவாக இருக்கும்னு நினைக்கிறேன்...

குட்டி செல்லத்துக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

GEETHA ACHAL said...

உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ள பதிவு...சூப்பர்ப் கலக்கிவிட்டிங்க....

பொறுமையாக விளக்கமாக எழுதி இருக்கின்றங்க...

செந்தமிழ் செல்வி said...

சகோ.ஸ்டார்ஜன்,
ஹாஹா! பட்ஜெட் திலகமாக்கும் நான்!!! (நானே தான் சொல்லிக்கணும்)
தொடர்ந்த உங்கள் வருகைக்கும், பதிவிற்கும் மிக்க நன்றி.

செந்தமிழ் செல்வி said...

மின்மினி,
பாராட்டுக்கு நன்றி. பதிவிற்கும் நன்றி.

செந்தமிழ் செல்வி said...

அனாமிகா,
இந்தளவு அரிசி ஒரு வேளை சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு தான். அவரவர் தேவைப்படி கூட்டி, குறைத்துக் கொள்ளலாம்.

எங்கள் வீட்டு மாடியில் ஒரு போர்ஷன் கட்டி கொடுத்து விடுகிறோம், சரியா?

4000 ரூபாய் அரிசி, கோதுமையைத் தவிர்த்து இதர சாமான்களுக்கு மட்டும் தான்.

நிஜமாகவே உங்க வீட்டு மெனு பார்த்து மயக்கம் வருகிற மாதிரி தான் இருக்கு. எதுவானாலும் அளவோடு தான் இருக்கணும். அதிகம் பருப்பும் கெடுதல் தான். எல்லாம் கலந்து இருக்கணும். அப்ப்டி சாப்பிட்டும் குண்டாகலைங்கிறது தான் ஆச்சரியம்!

செந்தமிழ் செல்வி said...

மகி,
எங்க ஊர்ப்பக்கம் தானே? அதான்.
பாராட்டுக்கு நன்றி.

செந்தமிழ் செல்வி said...

ஆசியா,
பாராட்டுக்கும், வருகைக்கும் நன்றி.

செந்தமிழ் செல்வி said...

சகோ. ஜெய்லானி,
//ஏங்க இந்த கஞ்சதனம் , நா கண்ணுப் படமாட்டேன். கொஞ்சம் நிறையவே போடுங்க//
எதுக்குன்னு புரியலையே!!

//இருந்தாலும் லிஸ்ட் நோட் பண்ணியாச்சு.//
மிக்க நன்றி.

//அப்புறம், புரோபைலில் எங்க ஊர் பக்கம் போட்டுட்டு, வாங்கற சாமானை 200 கிமீ தள்ளி போட்டுட்டீங்களே.//

ஓ! அப்படியா! நீங்களும் இந்தப் பக்கம் தானா?
ஆனாலும் உங்க ஊர்ப்பக்கம் தான் யாருக்கும் வருஷ சாமான்கள் என்றால் என்னன்னே தெரிய மாட்டேங்குதே! கிலோ என்ன விலைன்னு கேட்கிறாங்க:-)

200 கிலோ மீட்டர் இல்லை, 221 கிலோ மீட்டர்:-) நானும் இங்கு வந்த நாளில் இருந்து எல்லா வருடமும் அங்கிருந்து தான் வாங்கிக் கொண்டு வருகிறேன்.

செந்தமிழ் செல்வி said...

மேனகா,
முக்கியமாக உனக்காகத்தான் இந்த பதிவே.

பாண்டியிலா? நான் சொன்ன சில பேர் அப்படி வாங்கும் காசுக்கு வட்டி என்னவாகும்னு கணக்கு போடறாங்க!

அதெல்லாம் சொல்ல முடியாதுப்பா! ரகசியம். ஸ்வீட் வேணா தர்றேன். பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி.

செந்தமிழ் செல்வி said...

கீதாச்சல்,
செய்வன திருந்தச் செய்ய வேண்டாமா?

பாராட்டுக்கும், வருகைக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் said...

அருமையாக தொகுத்து எழுதி இருக்கீங்க ,பாராட்டுக்கள்.

geetha said...

செல்விக்கா!
இந்த பதிவு ரொம்ப உபயோகமானது. தினம், தினம், மளிகை லிஸ்ட் போட்டுக்கிட்டு கொஞ்சம் சலிப்பாக்கூட இருக்கும் இங்க.
ஊருக்கு வந்திட்டா கண்டிப்பா மொத்த சாமான்கள் வாங்கி பழகனும். அப்ப உங்க ப்ளாக்கை புரட்டிப்பாத்துக்கிறேன்.
நன்றி!

செந்தமிழ் செல்வி said...

சகோ. குமார்,
பாராட்டுக்கு மிக்க நன்றி!

செந்தமிழ் செல்வி said...

கீதா,
இங்கு இருப்பதால் இதெல்லாம் முடிகிறது. ஊர் வந்ததும் இப்படி பழக்கப்படுத்திக்க. ரொம்ப நல்லது.

Post a Comment