Friday, May 14, 2010

இடைவேளை

என் தங்கைக்காக ஒரு புடவை எடுக்க நினைத்து தேடினேன். எனக்கு பிடித்த கலர், டிசைனில் குந்தன் ஸ்டோன் ஒர்க் இல்லை. ஸ்டோன் ஒர்க் செய்த புடவையின் கலரும், டிசைனும் எனக்குப் பிடிக்கவில்லை. யோசித்துக் கொண்டிருந்த போது, எதுக்கு யோசிக்கணும்? பிடிச்ச டிசைனில் புடவை எடுத்துகிட்டு,  அதில் ஸ்டோன் ஒர்க் செய்வது உங்களுக்கு கஷ்டமான்னு என் பெண்ணும், கணவரும் சொன்னார்கள். அந்த ஐடியாவும் சரியாகத் தோன்றவே, பிடிச்ச கலரில் புடவையை தேர்ந்தெடுத்தேன்.

புடவையில் ஸ்டோன் ஒர்க் செய்ய அதிகமாக ஒன்றும் செலவு இல்லை. ஏற்கனவே பெண்ணின் சுடிதாருக்காக வாங்கிய ஸ்டோன் மீதி வீட்டில் இருந்தது. ஃபெவிக்ளூவும் எப்போதும் வீட்டில் இருக்கும். எனக்கு தேவைப்பட்டது நேரமும், வேலை செய்ய கைகளும் தான். நேரம் தான் கொஞ்சம் சிக்கலாக இருந்தது. எப்படியோ இரண்டு நாட்களாக இரவு தூங்கும் நேரத்தில் மிச்சப்படுத்தி வேலையை முடித்து விட்டேன்!!

வாங்கிய புடவை 


 ஸ்டோன் ஒர்க் செய்ய தயாராக....

முழுவதும் ஸ்டோன் ஒட்டிய பின்.....



புடவையின் முந்தானையில் உள்ள பூக்களில் மட்டும் கொஞ்சம் அதிகமாக ஸ்டோன் ஒட்டினேன்.



புடவையின் கலர், டிசைன், ஸ்டோன் ஒர்க் எப்படி இருக்குன்னு சொல்லிட்டுப் போங்க!!

அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்! ஒரு பத்து நாட்கள் நான் பிளாக் பக்கமே வரமுடியாது. பேரனின் பிறந்தநாளை முடித்துக் கொண்டு, நிறைய புது விஷயங்களோடு வருகிறேன்.
அதுவரைக்கும் என் வலைப்பூவிற்கு வரும் அனைவருக்கும் முன்னதாகவே நன்றி சொல்லிக் கொள்கிறேன்!!


22 comments:

இமா க்றிஸ் said...

வேலைப்பாடு ரொம்ப அழகாக இருக்கு செல்வி. அதிஷ்டசாலித் தங்கை. ;)
வேலைப்பாட்டின் முழு அழகும் இங்கு படத்தில் வெளிவரவில்லை என்பது என் எண்ணம். நேரில் இன்னும் அழகாக இருக்கும் என்று தோன்றுகிறது, சரிதானே! எனக்கு போட்டோ டிப்ஸ் சொல்லத் தெரியவில்லை. இரவில் எடுத்தீர்களா? நேர் மேலே லைட் போட்டு இருந்தீர்களா? சேலைகள் படம் எடுப்பது எனக்கும் வராத கலை. பட்டு இழைகள் தேவையில்லாத இடத்தில் பளபளத்துவிடும். ;) தங்கைக்குக் கொடுக்குமுன் இன்னொரு தடவை போட்டோ எடுக்க முயன்று பாருங்கள். ;)

சந்தோஷமாக அமையட்டும் உங்கள் விடுமுறை. வாழ்த்துக்கள். ஜோக்குட்டிக்கும் என் வாழ்த்துக்கள்.

GEETHA ACHAL said...

புடவை மிகவும் அழகாக இருக்கின்றது...சூப்பர்ப்...உங்களுடைய பேரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

Malini's Signature said...

அழகு செல்விமா :-)

தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிடுங்க ...முதல் பிறந்தநாள் விழா வேலை அதிகம் இருக்கும்...உடம்பையும் கொஞ்சம் பாத்துக்குங்கம்மா

athira said...

Super Selviyakka...very nice.

sathishsangkavi.blogspot.com said...

புடவை சூப்பருங்கோ......

vanathy said...

செல்வி அக்கா, கொள்ளை அழகாக இருக்கு. உங்கள் பேரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

ரோஜா ,சாமந்தி , கனக்காம்பரம் மூனு பூவும் ஒரே கொடியில் சூப்பர் டிஸைன். குழந்தைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

அருமையாக இருக்கு சகோதரி.
பேரனின் பிறந்த நாள் சிறக்க வாழ்த்துக்கள்.

செந்தமிழ் செல்வி said...

மிக்க நன்றி இமா.

நீங்க கேட்ட கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதில் 'ஆம்'

இரவில் தான் வேலையை முடித்ததும் போட்டோ எடுத்து உடனே பிளாக்கிலும் போட்டாச்சு. இதை விட்டால் நேரமே இருக்காது. பட்டு என்பதால் ரொம்ப பளபளக்குது.

இன்னுமொரு முறை? முயற்சிக்கிறேன்.

செந்தமிழ் செல்வி said...

வாழ்த்துக்கு நன்றி இமா.

செந்தமிழ் செல்வி said...

நன்றி கீதாச்சல்! வாழ்த்துக்கும் நன்றி.

செந்தமிழ் செல்வி said...

வாழ்த்துக்கு நன்றி ஹர்ஷினிம்மா.
உடம்பை பார்த்துக்கிறேன். நன்றிம்மா.

செந்தமிழ் செல்வி said...

மிக்க நன்றி அதிரா.

செந்தமிழ் செல்வி said...

சங்கவி,
மிக்க நன்றி.

செந்தமிழ் செல்வி said...

நன்றி வானதி.
பிறந்தநாள் வாழ்த்துக்கும் நன்றி.

செந்தமிழ் செல்வி said...

சகோ. ஜெய்லானி,
நீங்கள் சொன்ன பிறகு தான் நானும் கவனித்தேன். நன்றி. பிறந்தநாள் வாழ்த்துக்கும் நன்றி.

செந்தமிழ் செல்வி said...

நன்றி சகோதரர். குமார்.
பேரனின் பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி!

Anonymous said...

அன்பு அக்கா,

சேலை டிசன் சூப்பரோ சூப்பர்!!!

குட்டி பையனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"

அன்புடன்,
சுபத்ரா.

geetha said...

செல்விக்கா!
ரொம்ப நல்ல ஐடியா இது. நான்கூட கல்யாணநாளுக்காக ஒரு பட்டுப்புடவை எடுத்தேன். அதில்கூட இதுபோல் ஸ்டோன்வொர்க் பண்ணலான்னு ஒரு ஐடியாவை கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி!
வொர்க் ரொம்ப அழகாய் இருக்கு. புடவையும், கலரும்கூட ரொம்ப நல்லா இருக்கு.
"ஜோ" குட்டிக்கு எங்கள் அனைவருடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

Asiya Omar said...

செல்விக்கா,சேலையில் ஸ்டோன் ஒர்க்ஸ் அருமை,உங்களுக்கு நல்ல பொறுமை.கலர் காம்பினேஷன் அழகு.
பேரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Menaga Sathia said...

புடவை கலர் சூப்பர்ர்!! ஸ்டோன் ஒர்க் நல்லா செய்திருக்கிங்க. பேரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

பனித்துளி சங்கர் said...

அனுபவம் கலந்த அருமையான பகிர்வு நன்றி !

Post a Comment