Monday, May 31, 2010

பேரனின் பிறந்த நாள்.

இடைவேளை (!) முடிஞ்சு வந்தாச்சு. உறவினர்கள் வருகை, பேரனின் பிறந்த நாள் கொண்டாட்டம் எல்லாம் முடிந்தும் கடந்த ஒரு வாரமாக வேறு சில முக்கிய அலுவல் காரணமாக உடனே பதிவு போட முடியவில்லை.

மே 18ந் தேதி பேரனின் பிறந்த நாள் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் லானில் எல்லா ஏற்பாடுகளும் செய்ய, எங்களுக்கு முன் 'லைலா' "நானும் தான் கலந்து கொள்வேன்" என அடம் பிடிக்க, எல்லா ஏற்பாடுகளையும் அவசர அவசரமாக ஹாலுக்கு மாற்றும்படி ஆயிற்று. 'லைலா'வே வரும்போது நாங்கள் வர மாட்டோமா என விருந்தினர்களும் சரியான நேரத்திற்கு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வந்திருந்தனர்.

பேரனின் பெயருக்கு ஏற்றவாறு 'ப்ரின்ஸ்' தீமில் (அவசரமாக) அலங்கரிக்க பட்ட ஹால்

வந்திருந்த அனைவருக்கும் வெல்கம் டிரிங்.


பலூனுடன் பர்த்டே பாய்.


என்ன செய்தாலும் முகம் காட்ட மறுக்கும் நல்ல பிள்ளை.



கேக்கை க்ரவுன் வடிவத்தில் செய்ய சொல்லி ஆர்டர் கொடுத்தால், கேக்கில் க்ரவுனை மட்டும் வரைந்தே கொடுத்து விட்டார்கள்.
தயாராகவுள்ள பர்த்டே கேக்.


வந்திருந்தோர் அனைவரின் கைகளிலும் 'டாட்டூ' வரையப்பட்டது. 
இது ஜோவின் தாத்தாவின் கையில்.

ஜோவின் மாமா கையில்.



எனது கையிலும் டாட்டூ புடவைக்கு மேட்சான கலரில்.

யாரோட டாட்டூ அழகாக இருக்கு? என் கையிலா? என் பெண்ணின் கையிலா?

சின்ன சின்ன விளையாட்டு போட்டிகளில் கலக்கிய குழந்தைகள் 'என்ன பரிசுகள் எனக்கு?' என ஆவலுடன்.

மழைக்கு இதமாக சூடான டின்னர் (ஸ்வீட் கார்ன் சூப், ருஸ்ஸியன் சாலட், க்ரிஸ்பி வெஜ் ஃப்ரை, ஆலு டிக்கா, தஹி வடை, புதினா பரோட்டா, ஃபுல்கா, ஜீரா ரைஸ், வெஜ் புலாவ், டால் மக்கானி, பனீர் கோலா க்ரேவி, பப்பட், கேரட் அல்வா, ஐஸ்க்ரீம்).


பேரனுடன் நான்.

 கொண்டாட்டங்கள் முடிந்து தூக்க கலக்கத்தில் ஜோ.


அடுத்த நாள் 'ஷோஹன்' சைனீஸ் ரெஸ்டாரென்டில் குழந்தைக்கான இருக்கையில் ஜோக்குட்டி.


32 comments:

ஜெய்லானி said...

//யாரோட டாட்டூ அழகாக இருக்கு? என் கையிலா? என் பெண்ணின் கையிலா?//

மேச் யாருக்கு பொருத்தமின்னு சொன்னா நீங்கதான். அவங்க டிரஸ் அந்த கலரில் போட்டிருந்தால் இது ஆயிரம் ரூபாய் போட்டிக்கான கேள்வி. அவங்க கலரும் நல்லாதான் இருக்கு.

ரோஸ் மிலக் ஒரு கிளாஸ் நான் எடுத்து குடிச்சிட்டேன் யாருக்கும் தெரியாமல்.

குழந்தையும் போட்டோக்களும் அருமை

Asiya Omar said...

போட்டோஸ் அருமை.உங்க கையில் உள்ள டாட்டு தான் சூப்பர்,many more happy returns of the day.சுற்றி போட்டாச்சா?

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள்,
ஜோ குட்டி சூப்பர்,

யார் கை அழகு, அம்மா கையும் பொண்ணு கையும் தான்.

என்ன செல்வி அக்கா எல்லாமே வெஜ் ரெசிபியா?

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

இமா க்றிஸ் said...

பார்ட்டி கலக்கல். ;)

செல்வி கை டிசைன் தான் அழகா இருக்கு. (அப்படித்தானே சொல்லணும்!) ;) எல்லாமே அழகுதான் செல்வி.

நான் அங்க இருந்திருந்தா நீங்க விரும்பின மாதிரி கேக் பண்ணிக் கொடுத்து இருப்பேன். அடுத்த பிறந்தநாளைக்குப் பார்க்கலாம். ;)

Mahi said...

Belated B'day wishes to Joe!
/பேரனுடன் நான்./ this is too much selvi akka! unga mukamum therila, joe mukamum therila antha photola! :) :)

Prema said...

excellent pictures...Belated wishes to joash.Tattos in everybodies hand very nice...

Anonymous said...

அழகான படங்கள். உங்கள் பேரனுக்கு அழகான சுருள் தலமயிர். இந்த கேக் கொடுமையை பத்தி ஏன் கேக்கிறீங்க. இப்படி நிறைய நடக்கும். அதுக்கு நாங்களே செய்றது பெஸ்ட். வெளி நாடுகளில் நிறைய கிட்ஸ் இருக்கு. நாங்களே செய்யலாம். அப்படி ஒன்னு வாங்கிக்கோங்க செல்விம்மா. ஆனாலும் கேக் அழகாத்தான் இருக்கு.

Anonymous said...

//உறவினர்கள் வருகை, பேரனின் பிறந்த நாள் கொண்டாட்டம் எல்லாம் முடிந்தும் கடந்த ஒரு வாரமாக வேறு சில முக்கிய அலுவல் காரணமாக உடனே பதிவு போட முடியவில்லை. //

அதுக்கு தண்டனையாக பனீர் பகோரா ஒரு பார்சல் அனுப்பவும். =))

athira said...

ஜோவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பார்ட்டி அழகு.

செல்வியக்காவுக்கா:), ஜோவுக்கா பிறந்தநாள் என்பது, நீங்க சொல்லித்தான் தெரியுது:).

ஸாதிகா said...

ஜோவுக்கு அன்பு வாழ்த்துக்கள்.விவரிப்பு சுவாரஸ்யமாக இருந்தது.படங்களும் அருமை.

Menaga Sathia said...

ஜோ குட்டியும்,போட்டோஸ்களும் அழகா இருக்கு...

செந்தமிழ் செல்வி said...

மிக்க நன்றி ஆசியா! வீட்டுக்கு வந்தவுடன் முதல் வேலை அது தான்.

செந்தமிழ் செல்வி said...

எங்களுக்கு மட்டும் கடைசியாக டாட்டூ போட்டதால், என் பெண்ணின் டிரஸ்ஸுக்கு மேட்சான கலர் தீர்ந்து போச்சு. அதான் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கு.

/ரோஸ் மிலக் ஒரு கிளாஸ் நான் எடுத்து குடிச்சிட்டேன் யாருக்கும் தெரியாமல்/

ஓ! அது தான் முன்னாடி இருந்த ஒரு டம்ளரைக் காணவில்லையோ? பரவாயில்லை. வந்தவர்கள் குடிப்பதற்கு தானே வெல்கம் டிரிங்கே:-)

மிக்க நன்றி சகோ. ஜெய்லானி.

செந்தமிழ் செல்வி said...

வாழ்த்துக்கு நன்றி ஜலீலா,

எல்லாமே வெஜ் தான் ஜலீலா, வந்திருந்தவர்கள் நிறைய பேர் வெஜிடேரியன். அதான், குழப்பமே வேண்டாம்னு இப்படி முடிவு செய்தார்கள்.

செந்தமிழ் செல்வி said...

மிக்க நன்றி உலவு.காம்!

செந்தமிழ் செல்வி said...

மிக்க நன்றி இமா!

/ெல்வி கை டிசைன் தான் அழகா இருக்கு. (அப்படித்தானே சொல்லணும்!) ;) /
அப்படி எல்லாம் இல்லை. எது அழகோ அதை சொல்லலாம்.

/எல்லாமே அழகுதான் செல்வி./
இது ஓகே:-)

அடுத்த முறை முன்பே சொல்லி அங்கிருந்து பார்சல் வாங்கிடலாமா?
நன்றி இமா.

செந்தமிழ் செல்வி said...

வாழ்த்துக்கு நன்றி மகி!

/this is too much selvi akka! unga mukamum therila, joe mukamum therila antha photola!/

நல்லா கவனித்துப் பார்த்தால் தெரியும்:-)

செந்தமிழ் செல்வி said...

பிரேமா,
வாழ்த்துக்கௌம், பாராட்டுக்கும் நன்றி!

செந்தமிழ் செல்வி said...
This comment has been removed by the author.
செந்தமிழ் செல்வி said...

அனாமிகா,
/உங்கள் பேரனுக்கு அழகான சுருள் தலமயிர்./
இப்ப சின்ன வருத்தம். பிறந்தநாள் முடிந்ததும் மொட்டை அடித்து விட்டார்கள். இப்ப அழகான மொட்டை:-)

கேக் அதிக அளவு என்பதால் ஆர்டர் கொடுத்து விட்டார்கள். எல்லோருக்கும் பேக் செய்து கொடுத்தனுப்பினார்கள்.

பனீர் பகோரா? அப்படின்னா என்னன்னே எனக்குத் தெரியாதே:-)

செந்தமிழ் செல்வி said...

வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி அதிரா!

பர்த்டே பாயின் அம்மம்மான்னு சொல்ற மாதிரி இருக்கணுமில்லே!
(பாட்டின்னு சொல்ல மாட்டேன்) அங்கு நடந்த விளையாட்டுப் போட்டிகளில் ஆளுக்கொரு ஒரு 'கிராண்மா'வை கூட்டி வரணும்னு ஒரு போட்டி வெச்சாங்க.
ஒரு குரூப் என்னைக் கூட்டிச் செல்ல, மற்றவர்கள் என்னை கிராண்மான்னு ஒத்துக்கவே மாட்டேன்னுட்டாங்க;-)

செந்தமிழ் செல்வி said...

மிக்க நன்றி ஸ்னேகிதி ஸாதிகா!

செந்தமிழ் செல்வி said...

நன்றி மேனகா!

vanathy said...

செல்வி அக்கா, நல்லா இருக்கு படங்கள். பேரன் க்யூட் ஆக இருகிறார். டாட்டூ, கேக், அலங்காரம் எல்லாமே அழகு.

geetha said...

செல்விக்கா!
குட்டிப்பையன் போட்டோஸ்,டாட்டூஸ்,எல்லாமே ரொம்ப அழகு.
சாப்பாட்டு ஐட்டங்களும் நல்லா இருக்கு.
"ஜோக்குட்டி" நல்லா வளர்ந்திட்டார். எல்லா போட்டோவிலும் முகத்தை சீரியஸாவே வெச்சிட்டு இருக்கார்.
சிரிக்கிற போட்டோஸ் போட்டா கண் பட்டுடும்னு போடலியொ??!!

Asiya Omar said...

செல்விக்கா உங்களுக்கு பெஸ்ட் ஸ்டோரி ரைட்டர் விருது கொடுத்துள்ளேன்,அன்புடன் பெற்றுக்கொள்ளவும்.

GEETHA ACHAL said...

படங்கள் எல்லாம அருமை...குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...டட்டூஸும் சூப்பர்ப்...

செந்தமிழ் செல்வி said...

அன்பு வானதி,
எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி!

செந்தமிழ் செல்வி said...

கீதா,
ஒரு வருடம் ஆகுதில்லையோ? வளர மாட்டாரா:-)
அவர் செய்யும் குறும்புகள் அத்தனை சுவாரசியம்.
சிரிக்கும் போடோஸ்...? ம்ம்ம்ம், சரியா கண்டுபிடிச்சிட்டே...:-)
நன்றி கீதா!

செந்தமிழ் செல்வி said...

அன்பு ஆசியா,
விருதுக்கு நன்றி. தனிப்பதிவு விரைவில்...
எப்படி முகப்பில் மின்னுது விருது?

செந்தமிழ் செல்வி said...

கீதாச்சல்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி!

Post a Comment