Wednesday, August 17, 2011
நாளை (18.08.11) என் அம்மாவிற்கு நடக்க இருக்கும் இருதய அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து, அம்மா நலமுடன் வீடு திரும்ப அனைவரும் பிரார்த்திக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். எப்போதுமே கூட்டு பிரார்த்தனைக்கு பலன் அதிகம். கிட்டதட்ட ஒன்றரை மாதமாக நாங்கள் ஏஞ்ஜியோகிராம் பார்க்க, வேறு மருத்துவரைப் பார்க்கவென அலைந்து கொண்டிருந்தோம். கோவையில் நாங்கள் பார்த்த மருத்துவமனை டாக்டர்கள், அடைப்பு 90 முதல் 100 சதவீதம் உள்ளது. சர்ஜரி தான் செய்ய வேண்டும், ஆனால் அம்மா சர்ஜரி தாங்கும் நிலையில் இல்லை, மாத்திரை சாப்பிட்டு எத்தனை நாட்கள் இருக்க முடியுமோ அவ்வளவுதான் என்று சொல்லி விட்டார்கள்.
பல டாக்டர்களை நாங்கள் அணுகிய போது மதுரையில் இந்த டாக்டர் மட்டும் பயமில்லை, சர்ஜரி செய்யலாம் என்று கூறவே, வெள்ளியன்றே மருத்துவமனையில் அட்மிட் செய்திருக்கிறோம். நாளை (18.08.11) காலை 9 மணிக்கு அறுவை சிகிச்சை நடக்க உள்ளது. அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து, அம்மா நலம் பெற அனைவரும் பிரார்த்திக்க வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
Labels: பொதுவானவை
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
Wish you all the best for your mom. Our prayers for her get well soon. Take care.
Valga Valamudan
~Elamurugavel
சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து உடல்நிலை நன்கு தேறி உங்களுடன் சேர்ந்து இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
அம்மா சிகிச்சை முடிந்து நலமாய் வீடு திரும்பவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் பிரார்த்திக்கிறேன்.
குடும்பத்துடன் பிரார்த்திக்கிறோம்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html
அன்பின் செல்வி,உங்கள் அம்மாவின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்.
சத்திரசிகிச்சை நல்லபடி நடந்து அம்மா விரைவில் பூரண நலம் பெற என் பிரார்த்தனைகள் செல்வி.
அம்மா சிகிச்சை முடிந்து நலமாய் வீடு திரும்பவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் பிரார்த்திக்கிறேன்!
உண்மைவிரும்பி.
மும்பை.
முழு குணம் அடைந்து விரைவில் உங்களுடன் சந்தோஷமாக இருக்க இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன் .
செல்வி அக்கா அம்மாவுக்கு ஆப்ரேஷன் நல்ல படியாக நடந்து முடிந்தது ஸாதிகா அக்கா மூலம் அறிந்தேன்.
சீக்கிரம் பூரண குணம் அடைய இறைவனிடம் பிரத்திக்கிறேன்.
கவலை வேண்டாம் உடல் நலத்தை பார்த்து கொள்ளுஙக்ள்
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.செல்விக்கா நலமா? அம்மாவின் உடல் நலம் தேறி நல்லவிதமாக இருப்பார்கள்.இந்த பதிவு இப்பொழுது தான் என் கண்ணில் படுகிறது.
Post a Comment