Tuesday, February 23, 2010
நேற்று (22-02-2010) லக்கியின் இரண்டாவது பிறந்தநாளை இனிமையாகக் கொண்டாடினார். எப்படின்னு பாருங்களேன்!
காலையிலேயே ஷாம்பு போட்டு குளித்து, முடியை நன்கு ப்ரஷ் செய்து, பவுடர் எல்லாம் போட்டு, 'போ' கட்டிக் கொண்டு கேக் வெட்ட தயாராக....
கேக்குக்கு முன்பு உட்கார்ந்திருக்கார்.
எவ்வளவு நேரம் தான் உட்கார்ந்திருப்பதுன்னு படுத்துக் கொண்டு....
கேக் தயாராக இருக்கிறது...
சமத்தாக நாங்க கை(கால்) பிடிக்க கேக் வெட்டும் லக்கி....
நான் கேக் ஊட்ட சாப்பிடுகிறார்.
ஓகே! எல்லாரும் அவங்க அவங்க வீட்டில் லக்கி பிறந்தநாளுக்கு கேக் சாப்பிட்டுக்கோங்க:-)
Labels: செல்லங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
அட!
லக்கிக்கு பிறந்தநாளா???
சொல்லவேயில்ல!!!
பிறந்தாலும் இந்த லக்கி மாதிரி "லக்கியா" பிறக்கணும்னு
லக்கி இனமெல்லாம் பொறாமைப்படபோகிறது.
போட்டோவில் மட்டும் கேக்கை காட்டிட்டு எங்களுக்கெல்லாம் பெரிய பீஸாய்
"அல்வா" கொடுத்திட்டீங்களே செல்விக்கா!
//எல்லாரும் அவங்க அவங்க வீட்டில் லக்கி பிறந்தநாளுக்கு கேக் சாப்பிட்டுக்கோங்க:-)//
Hmm...grrrrrrr..how is this possible selvi aunty??
ogai..belated b'day to Lucky!!:D
சூப்பர் கேக்.. சூப்பர் லக்கி.... இருப்பினும் இது கொஞ்சம் ஓவர்தான் லக்கிக்கு:).
லக்கி அண்ணே முறைக்காதீங்க:).. பிறந்தநாள் வாழ்த்துக்கள்... என்ன இருந்தாலும் என்னைவிட 2 மணித்தியால வித்தியாசத்தில நீங்கள் எனக்கு அண்ணே!!!! தான் லக்கி....
Hmm...grrrrrrr..how is this possible selvi aunty?? /// ஜீனோ .. கிச்சினுக்குள் போய்ப் பாருங்கோ, டோரா எங்கேயாச்சும் ஒளிச்சு வச்சிருப்பா....
க்யூட்.. லக்கிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
லக்கி தங்கையே.. இது தான் ஓவராயிருக்கு :))
லக்கிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
லக்கிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். ரொம்ப க்யூட்டா இருக்கான் எங்கே அவன் பிறந்தநாள் ட்ரஸ்???
வாழ்க வளமுடன்
செல்விக்கா ,happy birthday to lucky.லக்கி ரொம்ப லக்கி,சகோ.ஹைஷ் லக்கி பிறந்தப்பா போட்ட ட்ரஸ் தான் போட்டு இருக்கான் ,நலலா பாருங்கோ.
இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லை. அதான் யாருக்கும் பதில் போட முடியலை. மன்னிக்கவும்.
கீதா,
நானெங்கே அல்வா கொடுத்தேன். அதான் அவங்க அவங்க வீட்டில் கேக் சாப்பிட சொல்லிட்டேனே!!!!!
வாழ்த்துக்கு நன்றி கீதா.
ஜீனோ,
பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி. சரி, ஜீனோவுக்காக வீட்டில் கேக் இருக்கு. வந்தால் சாப்பிடலாம்.
அதிரா,
லக்கிக்கு எது ஓவர்:-( இருந்தாலும் வாழ்த்துக்கு நன்றி. பதிலுக்கு லக்கியும் சொல்றானாம்.
சந்தனா & மேனகா,
வாழ்த்துக்கு நன்றி.
ச்கோ. ஹைஸ் வாழ்த்துக்கு நன்றி. அவனை க்யூட்டாக்க நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம்.
எப்பவும் நாங்க தான் குளிக்க வைப்போம். அன்று பின்பக்க கதவு திறந்திருக்க, பைப்பில் தண்ணீரும் வர, இந்த பைப்பில் தானே குளிப்பாட்டிவிடுவார்களென அவனே தலையை நனைத்துக் கொண்டு வந்து துவட்டி விடச் சொல்லி நிற்கிறான்!! மறுபடி அவனைக் கூட்டிப் போய் ஷாம்பூ போட்டு குளிக்க வைத்தோம். 2 முறை குளித்ததனாலோ என்னவோ ரொம்ப க்யூட்டாகிட்டான்:-)
பிறந்த நாள் ட்ரெஸ்? நான் சொல்ல நினைத்ததை ஆசியா சொல்லிட்டாங்க.
ஆசியா,
வாழ்த்துக்கு நன்றி. ம்ம்... நல்லா கவனிச்சிருக்கீங்க;-)
தாமதமாகத்தான் தெரிந்து கொண்டேன். லக்கி பர்த்டே டு யூ லக்கி. ;)
செல்வி... இப்பதான் புரியுது, கொஞ்ச நாளா என் கனவில முதுகில் லவ்பர்ட் அமர்ந்து இருக்க ஒரு வெள்ளைப் பப்பி வந்த ரகசியம்!!
இமா,
லக்கி நன்றி சொல்லச் சொன்னான்.
பின்னாடியே நானும் ஏஞ்சல் டிரெஸ் போட்டுட்டு வந்தேனா?;-)
Post a Comment