Saturday, April 10, 2010

எந்தெந்த சாமான்களை எப்படி பாதுகாப்பதுன்னு இந்த பகுதியில் சொல்லப் போகிறேன். உண்மையில் எத்தனை பேருக்கு இது பயன்படும்னு தெரியலை. இருந்தாலும் ஓரிருவருக்காவது பயன்பட்டால் சந்தோஷமே. வெளிநாட்டில் இருப்பவர்கள் இதனைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். ஆனால், இங்கு இருப்பவர்களுக்கு இப்படி மொத்தமாக வாங்கி வைப்பது தான் நல்லதாக இருக்கும்.

இந்தப் பருவத்தில் எல்லாப் பொருட்களின் விலையும் குறைவாக இருப்பதும் ஒரு காரணம். இன்னொன்று மொத்தமாக வாங்குவதால், பொருட்கள் ஒரே மாதிரி இருக்கும். மாதாமாதம் வாங்கும் போது உளுத்தம்பருப்பே ஒரு மாதம் மாவு காணும். அடுத்த மாதம் சரியாக இருக்காது. முதல் மாதம் போல் போட்டால் சரி வராது. மிளகாய், புளி, கடுகு வகைகளும் அப்படியே. ஒரு வகை மிளகாய் காரம் அதிகமாக இருக்கும். சிலவகை காரமே இருக்காது. மொத்தமாக வாங்கி பயன்படுத்தும் போது ஒரே நாளில் நிதானம் தெரிந்து விடும். பிறகு எவ்வளவு பேர் வந்தாலும் சரியாக சமைக்க முடியும்.

தினப்படி உபயோகத்திற்கென்று கொஞ்சமாக எடுத்து வைத்து பயன்படுத்த வேண்டும். எந்த ஒரு பொருளை எடுப்பதானாலும் ஈரக்கையால் எடுக்காமல், சுத்தமான உலர்ந்த கையால் எடுக்க வேண்டும். தினப்படி உபயோகத்திற்கென முன்னால் வைக்கும் பொருட்கள் தீர்ந்து போகப் போகிறதென்றால், கொஞ்சம் முன்பே நிதானமாக பெரிய கண்டெயினரில் இருந்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சமைக்கும் போது அவசரம் அவசரமாக எடுத்தால் தண்ணீர் ஏதும் படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

காய வைத்த பொருட்கள் நன்கு ஆறியபின் தான் டப்பாக்களில் போட வேண்டும். டப்பாக்களையும் நன்கு கழுவி வெயிலில் காய வைத்து, சூடு ஆறிய பின் தான் பொருட்களை கொட்ட வேண்டும்.

எந்தெந்த சாமான்களை எப்படி பாதுகாப்பாதுன்னு இந்த பகுதியில் சொல்லப் போகிறேன்.உண்மையில் எத்தனை பேருக்கு இது பயன்படும்னு தெரியலை. இருந்தாலும் ஓரிருவருக்காவது பயன்பட்டால் சந்தோஷமே. வெளிநாட்டில் இருப்பவர்கள் இதனைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். ஆனால், இங்கு இருப்பவர்களுக்கு இப்படி மொத்தமாக வாங்கி வைப்பது தான் நல்லதாக இருக்கும்.

இந்தப் பருவத்தில் எல்லாப் பொருட்களின் விலையும் குறைவாக இருப்பதும் ஒரு காரணம். இன்னொன்று மொத்தமாக வாங்குவதால், பொருட்கள் ஒரே மாதிரி இருக்கும். மாதாமாதம் வாங்கும் போது உளுத்தம்பருப்பே ஒரு மாதம் மாவு காணும். அடுத்த மாதம் சரியாக இருக்காது. முதல் மாதம் போல் போட்டால் சரி வராது. மிளகாய், புளி, கடுகு வகைகளும் அப்படியே. ஒரு வகை மிளகாய் காரம் அதிகமாக இருக்கும். சிலவகை காரமே இருக்காது. மொத்தமாக வாங்கி பயன்படுத்தும் போது ஒரே நாளில் நிதானம் தெரிந்து விடும். பிறகு எவ்வளவு பேர் வந்தாலும் சரியாக சமைக்க முடியும்.

தினசரி உபயோகத்திற்கென்று கொஞ்சமாக எடுத்து வைத்து பயன்படுத்த வேண்டும். எந்த ஒரு பொருளை எடுப்பதானாலும் ஈரக்கையால் எடுக்காமல், சுத்தமான உலர்ந்த கையால் எடுக்க வேண்டும். தினசரி  உபயோகத்திற்கென முன்னால் வைக்கும் பொருட்கள் தீர்ந்து போகப் போகிறதென்றால், கொஞ்சம் முன்பே நிதானமாக பெரிய கண்டெயினரில் இருந்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சமைக்கும் போது அவசரம் அவசரமாக எடுத்தால் தண்ணீர் ஏதும் படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

காய வைத்த பொருட்கள் நன்கு ஆறியபின் தான் டப்பாக்களில் போட வேண்டும். டப்பாக்களையும் நன்கு கழுவி வெயிலில் காய வைத்து, சூடு ஆறிய பின் தான் பொருட்களை கொட்ட வேண்டும்.

அரிசி:
====

அரிசியை வாங்கி சாக்குடன் வைக்காமல் 2 நாட்கள் தனி அறையில் கொட்டி வைத்திருந்து (முடிந்தால் புடைத்து) பிளாஸ்டிக் அல்லது எவர்சில்வர் கண்டெயினர்களில் கொட்டி வைக்கணும். இடையிடையே நன்கு காய்ந்த மிளகாயை போட வேண்டும். வசம்பை ஒரு துணியில் முடிந்து உள்ளே புதைத்தும் வைக்கலாம். நன்கு காய்ந்த வேப்பிலையை அடியில் போட்டு மேலே பேப்பர் போட்டு அதன் மேலும் அரிசி கொட்டலாம். இப்படி வைத்தால் வருடத்திற்கும் அரிசியில் வண்டு வைக்காது. தினப்படி உபயோகத்திற்கு சின்ன பாத்திரத்தில் கொஞ்சமாக எடுத்து வைத்து உபயோகிக்கணும்.


பருப்பு வகைகள்:
============

பருப்பு வகைகளை வாங்கி சுத்தம் செய்து வெயிலில் நன்கு காய வைக்கவும். வெயிலில் இருந்து எடுத்து நன்றாக ஆற விடவும். பருப்பு போட்டு வைக்கப் போகும் பாத்திரங்களை நன்கு கழுவி வெயிலில் காய வைத்து, ஆற வைத்து இடைக்கு இடை காய்ந்த மிளகாய் போட்டு டைட்டாக மூடி வைக்கவும். உபயோகிக்க தனியாக ஒரு கிலோ அளவுக்கு சின்ன டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளவும். தீர்ந்த பின் ஈரமில்லாத கையால் எடுத்துக் கொண்டு மீண்டும் இறுக்கமாக மூடி வைத்தால் வண்டு, பூச்சி வரவே வராது.

கடுகு:
====

கடுகை தண்ணீரில் கழுவி கல் அரித்து, தண்ணீரை வடித்து 2, 3 நாட்களுக்கு நன்கு காய வைத்து, ஆற விட்டு டப்பாவில் போட்டு வைக்கணும். தினப்படி உபயோகத்திற்கு கொஞ்சம் சின்ன டப்பாவில் வைத்துக் கொள்ளணும்.

மசாலா பொருட்கள்:
==============

சீரகம், சோம்பு, கசகசா, வெந்தயம், மிளகு போன்றவற்றை சுத்தப்படுத்தி, நன்கு வைத்து சூடு ஆறிய பின், சுத்தமாக கழுவி காய வைத்து ஆற வைத்த டப்பாக்களில் போட்டு வைத்து விட்டால் வருடமும் கெடாமல் இருக்கும்.


கொத்தமல்லியை சுத்தம் செய்து பாதியை வறுத்து வைத்துக் கொண்டு மீதியை நன்கு காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

மிளகாய்:
=======

மிளகாயை காய வைத்து காம்பை நீக்கி பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டு வைக்கணும். பாலிதீன் கவர்களில் போட்டு இறுக கட்டியும் டப்பாக்களில் போடு வைக்கலாம். காம்புடன் வைத்தால் வண்டு வரும் வாய்ப்பு உள்ளது.

புளி:
===

புளியை நன்கு காய வைத்து கொட்டை, தூசு, கோது நீக்கி, கல் உப்பு சிறிது சேர்த்து ஆரஞ்சு பழ அளவு உருண்டைகளாக்கி சுத்தமான பிளாஸ்டிக் கவரில் போட்டு இறுக்கமாகக் கட்டி, ஃபிரீஸரில் அடுக்கி வைத்து விட்டால் வருடம் முழுவதும் நிறம் மாறாத புது புளியாக இருக்கும்.

சோயா, சுண்டல், பொட்டுக்கடலை போன்றவைகளை நன்கு காயவைத்து ஆறியபின் டப்பாக்களில் போட்டு வைக்கலாம்.

வருட சாமான்கள் வாங்கிய பின் சாம்பார் பொடிக்கும் வறுத்து அரைத்து வைத்து விடலாம். (எங்கம்மா அரைக்கும் சாம்பார் பொடி ஒரு வருடமே ஆனாலும் வண்டு வைக்காமல் இருக்கும்.)

கொத்தமல்லி கூட வறுத்து பொடி அரைத்து வைத்துக் கொள்ளலாம். கொஞ்சம் சோம்புப் பொடி, சீரகப்பொடி, மிளகுப்பொடியும் அரைத்து வைத்துக் கொண்டால் அவசர சமையலுக்கு உதவும்.


பட்டை, கிராம்பு, ஏலக்காய், கொஞ்சம் ஜாதிக்காய் சேர்த்து பொடி செய்து வைத்துக் கொண்டால், பிரியாணி, குருமா, அசைவ குழம்புகளுக்கு பயன்படுத்த வசதியாக இருக்கும். நிறைய பேருக்கு முழுதாக தாளித்து வாயில் பட்டால் பிடிக்காது.

சாம்பார் பொடி தவிர மீதிப் பொடிகளை மாதம் ஒருமுறை கொஞ்சம் ஃப்ரீயாக இருக்கும் போது அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

இது போக இன்னும் சில பொடிகளையும் செய்து வைத்துக் கொண்டால் அவசரமாக சமைக்கும் போது டென்ஷனின்றி சமைக்கலாம். என்னென்ன பொடிகள் என்று அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

முக்கியமாக சமையலறையில் எப்போதும் ஒரு பேனாவும், சின்ன நோட்டும் இருப்பது நல்லது. எந்தப் பொருள் தீர்ந்தாலும் அதில் குறித்து வைத்து விட்டால், மாதாந்திர லிஸ்ட் எழுதும் போது மறக்காமல் சேர்க்க வசதியாக இருக்கும்.

கேஸ் சிலிண்டர் மாற்றும் தேதி, அரிசி மூட்டை ஓப்பன் செய்யும் தேதி எல்லாவற்றையும் குறித்து வைத்து விட்டால், தீரும் நாள் உத்தேசமாக தெரிவதால், நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும்.

மூச்சு வாங்குது. கொஞ்சம் ரெஸ்ட்..........

53 comments:

Asiya Omar said...

வருட சாமான் வாங்குபவர்களுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும்,நான் மாத சாமான் வாங்கி தான் பழக்கம்.அதுவே அக்கா மீதியாகி,மீதியாகி அப்புறம் தீர தீர வாங்கி கொள்வது வழக்கம்.நல்ல தகவல்.

geetha said...

செல்விக்கா!
நல்ல விளக்கமாய் தெளிவாய் எழுதியிருக்கீங்க. நீங்க சொன்னமாதிரி இங்கு நாளைக்கு என்ன தேவையோ அதனைத்தான் இன்று வாங்குவோம்.
ஆனா, இந்தியா வந்து செட்டில் ஆகிறப்ப கண்டிப்பாய் உபயோகப்படும்.
போட்டோக்களும் நல்லா அழகாய் தேடிப்பிடிச்சு போட்டிருக்கீங்க!

அண்ணாமலையான் said...

மிக அற்புதமான பதிவு... சூப்பர்.. நெறய பேருக்கு பயன் படும்...

'பரிவை' சே.குமார் said...

அருமையான பதிவு எல்லோருக்கும் பயன்படும்.
குறிப்பா இல்லத்தரசிகளுக்கு மிக முக்கியமான பதிவு.

Menaga Sathia said...

சூப்பர்ர் பதிவு!! இந்தியாவில் செட்டிலானால் உங்களின் இந்த பதிவு நிச்சயம் உபயோகப்படும்.படங்களும அழகா தேடிப்பிடித்து போட்டிருக்கிங்க.நன்றி செல்விம்மா!!

ஸாதிகா said...

சகோதரி உங்களுக்கு விருது வழங்கி உள்ளேன் .அன்புடன் நான் அளித்த விருதினை பெற்றுக்கொள்ளவும்.நன்றி! http://shadiqah.blogspot.com/2010/04/blog-post_10.html

பாச மலர் / Paasa Malar said...

உங்கள் வலைப்பூவில் மிகவும் பயனுள்ள விஷயங்கள் உள்ளன...உங்கள் தோட்டம் எனக்கு மிகவும் பிடித்தது,,,

செந்தமிழ் செல்வி said...

ஆசியா,
மாத சாமான்களையும் ஒரு முறை காய வைத்து எடுத்துக் கொண்டால் மீதி ஆனாலும் கெடாமல் இருக்கும். மிக்க நன்றி.

செந்தமிழ் செல்வி said...

கீதா, கொஞ்ச பேருக்காவது பயன்பட்டால் சரி தான். படங்கள் கூகிள் உபயம். என்ன, கொஞ்சம் மெனக்கெட்டோம்:-))

செந்தமிழ் செல்வி said...

மிக்க நன்றி சகோ. அண்ணாமலையான்!

செந்தமிழ் செல்வி said...

சகோ. ஜெய்லானி, மிக்க நன்றி. நீங்கள் விருது கொடுத்த் நேரம் ஸாதிகாவும் கொடுத்திருக்காங்க! எடுத்து வாசலில் மாட்டி. இரண்டு ஆட்களையும் காவலுக்கு வெச்சிருக்கேன், பாருங்க.

செந்தமிழ் செல்வி said...

சகோ. குமார், மிக்க நன்றி.
வருகைக்கும், பதிவிற்கும் நன்றி.

செந்தமிழ் செல்வி said...

நன்றி மேனகா! உண்மை தான். இந்தியாவில் இருப்பவர்களுக்கு தான் அதிகம் பயன்படும். பாராட்டிற்கு நன்றி!

செந்தமிழ் செல்வி said...

ஸ்னேகிதி ஸாதிகா, மிக்க நன்றி. மாட்டியாச்சு, பாருங்க!

செந்தமிழ் செல்வி said...

அன்பு பாசமலர்,
அம்மா, பெண்ணுக்கு சேர்த்து வைக்கும் சொத்தாக இவ்வலைப்பூவை நினைக்கிறேன். போரடிக்காமல் இருக்க சில சுவாரசியங்கள் இடையில். முதல் வருகைக்கும், பதிவிற்கும் நன்றி.

geetha said...

கொஞ்சம்பேருக்கு அல்ல நிறையபேருக்கே பயன்படும். இங்கு ஸ்டோர் ரூம் தனியா கிடையாது. அதைவிட கரப்பான்பூச்சி தொல்லையும் அதிகம்.
நம்ம அனுமதியும் கேட்காமல், வாடகையும் கொடுக்காமல் நம்மகூடவே குடும்பம் நடத்துவாங்க.
அதுக்கு பயந்துகிட்டே தேவைக்கு மட்டுமே வாங்குவார்கள்!
மெனக்கெட்டாலும் கண்ணுக்கு அழகான போட்டோஸ் கொடுத்திருக்கீங்க.
பாராட்டுக்கள்!

இமா க்றிஸ் said...

Good Selvimaa. கலக்கல். ;)

Suma Gandlur said...

Thanks for your interest in my 'Delicious Dals from India' event. You are welcome to send entries for that event in English version so that people like me who do not understand Tamil can understand, appreciate and try those recipes.

GEETHA ACHAL said...

நல்ல பயனுள்ள பதிவு...சூப்பர்ப்...நிறைய பேர் இருக்கின்ற வீட்டில் இப்படி வாங்கி பாதுகாப்பது நல்லது...

ஹுஸைனம்மா said...

ம்ம்.. மாசக்கணக்குக்கு வாங்கினாலும், இந்த முறைப்படிப் பாதுகாத்து வச்சாத்தான் வண்டு வராமப் பாத்துக்கமுடியுது. நீங்க சொல்லிருக்கதுல பெரும்பாலான விஷயங்கள் நானும் பின்பற்றுபவைதான் என்று தெரிந்து மகிழ்ச்சி; பாட்டிலை வெயிலில் காயவைப்பது - மிகவும் அவசியம். சிலர் நிழலில் உலர்த்துவார்கள், அல்லது துணியால் துடைக்க மட்டும் செய்வர்; ஓவனில் மிதசூடாக்குவதும் உண்டு சிலர்; ஆனால் வெயிலில் (தூசி படாமல்) வைப்பதுதான் சரியான முறை, இல்லையாக்கா?

Priya said...

ஆஹா....படங்களுடன் மிக தெளிவா அழகா எழுதி இருக்கிங்க!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள செல்வி!

உங்களுக்கு எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

Krishnaveni said...

Nice blog and useful information

Anonymous said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

செந்தமிழ் செல்வி உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

செந்தமிழ் செல்வி உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

ஹைஷ்126 said...

அருமையான பதிவு...

சித்திரை திருநாள் வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்

ஸாதிகா said...

என்னப்பா..எங்கே ஆளையே காணோம்??அப்ஸ்காண்ட்....

செந்தமிழ் செல்வி said...

பாராட்டுக்கக நன்றி கீதா!

செந்தமிழ் செல்வி said...

மிக்க நன்றி இமா!

செந்தமிழ் செல்வி said...

Thank you suma. I will try my best.

செந்தமிழ் செல்வி said...

அன்பு கீதாச்சல்,
வருகைக்கு நன்றி! கொஞ்சம் பேர் இருந்தாலும் அதற்கு அளவாக வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது தான்.

செந்தமிழ் செல்வி said...

அன்பு ஹுசைனம்மா,
கண்டிப்பாக தூசு படாமல் தான் வைத்து எடுக்கணும். பொருட்களை இப்படி பராமரித்தாலே வீணாகாமல் இருக்கும்.

செந்தமிழ் செல்வி said...

படங்களுடன் பார்ப்பதே விருப்பமாக இருக்கும், இல்லையா? நன்றி பிரியா.

செந்தமிழ் செல்வி said...

சகோதரி மனோ,
நலமா? நான் 5 நாட்களாக ஊரில் இல்லை. அதனால் தான் உடனே பதில் போட முடியவில்லை. வாழ்த்துக்கு மிக்க நன்றி.
உங்களுக்கும் அனது தாமதமான தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

செந்தமிழ் செல்வி said...

மிக்க நன்றி கிருஷ்ணவேணி!

வாழ்த்துக்கு நன்றி அம்மு! தாமதமான தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

செந்தமிழ் செல்வி said...

மிக்க நன்றி ஸ்டார்ஜன்.
நான் ஊரில் இல்லாததால், பார்க்க தாமதமாகி விட்டது. வந்து பார்த்து பதிவும் போட்டு விட்டேன். நன்றி!

செந்தமிழ் செல்வி said...

சகோ. ஹைஸ்,
நலமா? ரொம்ப நாளாச்சு!
வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி!
உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

செந்தமிழ் செல்வி said...

ஸ்னேகிதி ஸாதிகா,
உண்மை தான். கொஞ்சமாக ஒரு 6 நாட்கள் மட்டும் தான் காணாமல் போனேன்:-)
முன்பே சொல்ல முடியாமல் போய் விட்டது:-(

Pavithra Srihari said...

super postnga .... ithula onnu kooda naan panninadhu illa .. ippo panna arambikka poren ...
Paruppu ellam wash panni kaaya veikanuma illa appadiyae kaaya veikanuma ..naan ithu varaikkum kadugu, sombhu, seerakam edhuvumae wash panninadhu illayae .. wash pannal onnum aagatha ... Vasambai na ennathunu solreengla ..

Great post ... Hope u wud reply me back

செந்தமிழ் செல்வி said...

அன்பு பவித்ரா,
பாராட்டுக்கு மிக்க நன்றி.
பருப்பு வகைகளைக் கழுவக் கூடாது. குச்சி, குப்பை போன்றவற்றை நீக்கி, முடிந்தால் புடைத்து வெய்யிலில் காய வைத்து, ஆற விட வேண்டும்.

பருப்பு வகைகளை போட்டு வைக்க பயன்படுத்தும் பாத்திரங்களை நன்கு கழுவி, காய வைத்து ஆறிய பின்பு, போட்டு இறுக மூடி வைக்க வேண்டும்.

கடுகை மட்டுமே கழுவி, கல் அரித்து காய வைக்கணும். 2,3 நாட்களுக்கு நன்கு காய விடணும். பின்பு கண்டெயினரில் போட்டு வைத்தால் கெடாது.

சீரகம், சோம்பு போன்றவற்றை கழுவக் கூடாது. அப்படியே தான் காய வைக்கணும்.

வசம்பு (Acorus calamus) எல்லா நாட்டு வைத்தியக் கடைகளிலும் கிடைக்கும். காய்ந்த இஞ்சி போல் இருக்கும். பிள்ளை வளர்த்தி, பெயர் சொல்லாதது என்றும் சொல்வார்கள். குழந்தைகளுக்கு உரைப்பானாக ஊற்றுவார்கள்.

இன்னும் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் கேட்கவும்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
செந்தமிழ் செல்வி said...

சுபா என்கிற அனானி,
நீ சொல்லிய பிறகு அவள் விகடனைத் தேடிப் பிடித்து வாங்கிப் பார்த்தேன். நான் சொல்லிய மாதிரி விளக்கமாக அதில் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்படியே காப்பி என்று எதை வைத்து சொல்கிறாய்?

50 வருட காலமாக என் அம்மாவும், 30 வருடங்களாக நானும் பின்பற்றிக் கொண்டிருக்கும் வழி முறை இது. சும்மா நுனிப்புல் மேய்ந்து விட்டு போற போக்கில் ஏதோ ஒண்ணை உளறிக் கொட்டாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்கில் உள்ள எல்லாவற்றையும் முழுதாகப் படித்துப் பார்.
http://senreb.blogspot.com/2010/03/2.html
அது நான் மார்ச் 31 ந்தேதி போட்டிருக்கிறேன். அப்பவே பராமரிப்பது எப்படி என அடுத்த பதிவில் சொல்கிறேன் என்று போட்டு இருக்கிறேன். எனக்கென்ன ஞானதிருஷ்டி இருக்கு! அடுத்த வாரம் அவள் விகடன் போடுவார்கள், காப்பி பண்ணலாம் என காத்திருப்பதற்கு.

பகுதி - 3 இரண்டாவது பகுதி எழுதும் போதே எழுதப்பட்டு விட்டது. ரொம்ப நீளமாக இருக்கவே இரண்டு பகுதியாக பிரித்து போடப்பட்டது. அதில் கொடுத்துள்ள பதிலில் கூட,
//அடுத்த பகுதி ரெடியாகத்தான் இருக்கு. ஒரு நாள் விட்டு போடுகிறேன்:-)//
என்று சொல்லி இருக்கிறேன். பொருத்தமான படங்களுடன் போடவே சிறிது நாட்கள் எடுத்தது.
புத்தகங்களைப் பார்த்து காப்பி அடித்து போட வேண்டிய அவசியம் எனக்கில்லை. என் பிளாக்கை படிப்பவர்களுக்கு நன்கு தெரியும் நான் இது போன்ற அற்பத்தனமான காரியங்கள் செய்பவள் அல்ல என்று.

'என்ன ஜென்மங்கள்' னு நான் கேட்டிருந்தது உனக்கு ஏன் அவ்வளவு கோபம் வருகிறது? நீ தான் அந்த வேலையை செய்தாயா? அதனால தான் எங்கே தப்பு கண்டுபிடிக்கலாம்னு பின்னாடியே சுத்திகிட்டு இருக்கியா?

தாராளமாக எங்கே வேண்டுமானாலும் அனுப்பிக் கொள். எனக்கு பயமில்லை. காப்பி செய்தவர்கள் தான் பயப்படணும்.

'வயதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோங்க' ன்னு நீ எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டாம். என் வயது என்ன, நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என எனக்கு நன்றாகவே தெரியும். நீ யார், எங்கிருந்து பார்க்கிறாய் என்பதெல்லாம் எனக்கு தெரியும்.

இவ்வளவு விளக்கமான பதில் உனக்கு சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. என் பிளாக் படிக்கும் ம்ற்றவர்கள் என்னைத் தப்பாக எண்ணி விடக் கூடாதே என்று தான் இந்த நீண்ட பதில்.

இந்த மாதிரி தேடிகிட்டு இருக்கிறதை விட்டு வீட்டுல உருப்படியாக ஏதாவது காரியம் பார். உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!!!

geetha said...

செல்விக்கா!
நானும்கூட அவள்விகடன் வாங்குகிறேன். என்னிடம் ஏப்ரல் மாத புத்தகம் பத்திரமாய் இருக்கு.
ஆனா, அந்த பதிவினை படித்ததும் நான் அந்த புத்தகத்தினை எடுத்து செக் பண்ணலை.
ஏன்னா, எங்க செல்விக்கா பத்தி எங்களுக்கு தெரியும். நேற்றே உங்களை விட எனக்கு கோபம் வந்தது,
ஆனாலும், நீங்களே வந்து பதில் கொடுக்கத்தான் காத்திருந்தேன்.!

vanathy said...

Selvi akka, very useful informations. My mom used to do this, but now I do not have time or enough sun light to do the same thing.

Vijiskitchencreations said...

செல்வி அக்கா நல்ல பயனுள்ள பதிவு. நானும் நிங்க சொல்வது போல் ப்ரிஜின் கதவில் மேக்னேட் நோட்புக்&பென் இருக்கும். அதில் இன்வெண்டரி லிஸ்ட் இருக்கும்.
நல்ல பதிவு.

எப்ப வர்ரிங்க எங்க சமையலறைக்கு. வழிமேலே விழி வைத்து......மீதி நிங்களே சொல்லுங்க.

செந்தமிழ் செல்வி said...

அன்பு கீதா,
என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிக்க நன்றி. இந்த நம்பிக்கை போதும் எனக்கு. நீயே பதில் சொல்லி இருந்தாலும் எனக்கு சரி தான்.
என் மேல் எதற்கு அவ்வளவு காழ்ப்புணர்ச்சின்னு தான் தெரியலை.
நன்றி கீதா!

செந்தமிழ் செல்வி said...

வானதி,
பெரியவர்கள் நிறைய தெரிந்து தான் இருந்தார்கள். பிறகாவது பயன்படும்னு தெரிஞ்சு வெச்சுக்கணும். வெளி நாட்டில் இது கஷ்டம் தான். நன்றிம்மா.

செந்தமிழ் செல்வி said...

விஜி,
நல்ல முறையை பின்பற்றுகிறாய்! குட்!

சமயலறைக்கு தானே! வருகிறேன், நல்லதொரு டிபன், இஞ்சி டீயுடன் சொல்;-)

seyedkatheeja said...

செல்வி அக்கா இன்னைக்கு தான் உங்க ப்ளாக் பார்த்தேன் அருமையாக இருக்கு.நீங்க சொன்ன குறிப்புகள் எனக்கு கண்டிப்பாக பயன்படும் நன்றி.

Jaleela Kamal said...

செல்வி அக்கா யாரு சுபா ,

என்ன ஆச்சி, பயங்கர கோபமா பதில் போட்டு இருக்கீங்க, ஒன்றும் புரியல நம்மை கண்காணிப்பது தான் இவர்களுக்கு வேலை போல.

நல்ல பயனுள்ள பதிவு.

Jaleela Kamal said...

கடுகு இது வரை கல் அரித்ததில்லை,

படத்தில் கடுகிற்கும், மைசூர் பருப்பிற்கும் நடுவில் உள்ள் பருப்பின் பெயர் என்ன, அது வான்ங்கி வைத்துள்ளேன், பெயர் தெரிய வில்லை.

செந்தமிழ் செல்வி said...

ஜலீலா,
என் குறிப்பை காப்பி அடிச்சு போட்டு இருக்காங்கன்னு நான் எழுதி இருந்தததுக்கு, இந்த பதிவை நான் புக்கில் இருந்து காப்பி அடிச்சு போட்டேன்னு சுபாங்கிற பெரில் கமெண்ட் வந்தது. அதற்கு தான் இந்த பதில். அவர்களுக்கு வேறு வேலைவெட்டி இருந்தால் தானே!

நன்றி ஜலீலா.

கடுகை ஒரு முறை கல் அரித்து, கழுவி பாருங்களேன். பிறகு தெரியும்.!
நான் கழுவும் போது போட்டோ எடுக்க நினைச்சேன். பயந்துடுவாங்கன்னு விட்டுட்டேன்:-)
அம்மாவிடம் கேட்டேன். அது நரிப்பயறு என்று சொன்னார்கள். மிக்சரில் வறுத்து போடுவார்களாம். சும்மா பச்சைப்பயறு போல கடையலாம். கொஞ்சம் ருசி குறைவாக இருக்குமாம்.

Post a Comment