Tuesday, April 26, 2011

வந்தேன்...வந்தேன்....வந்தேன்....

                                                                   
வலை உலக நண்பர்கள் அனைவருக்கும் எனதன்பு வணக்கம்!!! மிக நீண்ண்ண்ண்ண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் முகம் காட்ட வந்துள்ளேன். நிறைய நாட்கள் கழித்து திரும்ப வந்திருக்கிறேன். பெண்ணின் விபத்துக்குப் பிறகு நான் திரும்பவும் வர வேண்டுமென நினைத்த போதெல்லாம் ஏதோ ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்தது. மனம் வெறுத்து எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட எண்ணியே முடிவெடுத்திருந்தேன். தோழி ஸாதிகாவின் வார்த்தைகளே திரும்ப என்னை இங்கே வர வைத்தது. நன்றி தோழி :-)

நான் பிளாக் துவங்கி ஒரு வருடமும் முடிந்து விட்டது. ஆனால், நான் போட்டிருப்பது என்னவோ வெறும் 50 பதிவுகளே! என்னால் மற்றவர்களைப் போல அடிக்கடி பதிவிடவும் முடிவதில்லை. ஆபீஸ் போய் வந்து, வீட்டு வேலைகள் முடித்து கிடைக்கும் சிறிது நேரத்தில் முன்பெல்லாம் கம்ப்யூட்டரே கதியென்று இருந்தேன். அதனால் மற்ற வேலைகள் எதையுமே கவனிக்க இயலாமல் கொஞ்ச காலம் போனது. ஆரம்பித்து வைத்திருந்த நிறைய வேலைகள் பாதியில் நின்று போயிருந்தது. கிடைத்த இந்த இடைவெளியில் அவைகளையாவது முடிக்க நினைத்தேன். ஓரிரு வேலைகளை முடிக்கவும் முடித்தேன். அவை என்னவென்று அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேனே:-)

இன்னும் முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கத்தான் செய்கிறது. அப்படிப் பார்த்தால் வேலைகள் முடியவும் போவதில்லை, நாமும் இப்போதைக்கு வரமுடியப் போவதில்லையென்று தோன்றியது. தோழி.ஸாதிகா என்னை இந்த 15 நாட்களாக ரொம்பவே எதிர்பார்த்திருப்பாங்க. அவர்களுக்காகவாவது விரைவில் இங்கு வர வேண்டும் என நினைத்தேன். இடையில் ஒரு முக்கியமான வேலை என்னிடம் ஒப்படைக்கப்பட்டதால், அதை நல்லவிதமாக முடித்த திருப்தியோடு இங்கு வந்திருக்கிறேன். என்னை ஞாபகம் வைத்து, இங்கு எட்டிப் பார்ப்பவர்கள் எல்லோரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க:-)


அட! மறந்துட்டேனே, திருப்தியோடு முடித்த வேலை என்னவென்று கண்டிப்பாக அடுத்த பதிவில்........

15 comments:

Asiya Omar said...

செல்விக்கா வாங்க வாங்க,குலோப் ஜாமுன் எடுத்துக்கொண்டேன்,பார்க்கவே அருமை.அக்கா ப்ளாக் ட்ராஃபிக்கில் பாண்டிச்சேரி பார்க்கும் பொழுது அது நீங்களாக இருக்குமோ என்று நினைப்பதுண்டு..

vanathy said...

welcome back!

செந்தமிழ் செல்வி said...

அன்பு ஆசியா,
நலமா? முதலில் வந்து வரவேற்றமைக்கு நன்றி. நீண்ட நாட்கள் கழித்து மனதில் அளவிட முடியாத மகிழ்ச்சி! நன்றி!

அன்பு வானதி,
வரவேற்புக்கு நன்றி.

ஸாதிகா said...

வருக!வருக!!வருக!!!இனி பதிவுலகில் தொய்வின்றி வீறு நடை போட்டு அனைவருக்கும் உபயோகமான பதிவுகளை பகிர்ந்து இனி எப்பொழுதும் செல்வி நம்முடம் வலம் வருவார் என்பதனை நினைக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

எனது அழைப்பை ஏற்று மீண்டும் வந்தது குறித்து மிக்க சந்தோஷம் தோழி.குலோப்ஜாமூனை இனிக்க,இனிக்க வாயாற சாப்பிட்டுவிட்டு வாழ்த்துகின்றேன்.

//இடையில் ஒரு முக்கியமான வேலை என்னிடம் ஒப்படைக்கப்பட்டதால், அதை நல்லவிதமாக முடித்த திருப்தியோடு இங்கு வந்திருக்கிறேன்.// அட அடுத்த பதிவுவரை வெயிட் பண்ண முடியாது.இருங்க இப்பவே கால் பண்ணுகின்றேன்.

Menaga Sathia said...

நல்வரவு செல்விம்மா!! எப்படி இருக்கீங்க?? நானும் ஸ்வீட் எடுத்துக்கிட்டேன்..மகளுக்கு கைவலி பூரண குணமடைந்துவிட்டதா??
//இடையில் ஒரு முக்கியமான வேலை என்னிடம் ஒப்படைக்கப்பட்டதால், அதை நல்லவிதமாக முடித்த திருப்தியோடு இங்கு வந்திருக்கிறேன்.//அது என்னன்னு நான் கண்டுபிடித்துட்டேன்...நானும் அதை அடுத்த பதிவில் நீங்க எழுதும் போது சொல்கிறேன்.ஹா ஹா...

athira said...

வாங்க செல்வியக்கா... பெரீஈஈஈஈய சவுண்டோட வந்திருக்கிறீங்க, ஆனா குட்டி குட்டி குலாப்ஜாமூன் எடுக்கச் சொல்லியிருக்கிறீங்க...கர்ர்ர்ர்ர்ர்ர்.

இனிக் காணாமல் போயிடாமல் ஒழுங்கா வாங்க செல்வியக்கா.

இமா க்றிஸ் said...

ஸ்வீட் எடுத்தாச்சு செல்வி. திரும்ப உங்களை இங்கு கண்டது சந்தோஷம். விடாமல் வர வேண்டும் இனிமேல்.

Unknown said...

nandri solla varthaigal podhadhu

அஸ்மா said...

வாங்க செல்வியக்கா! தங்கள் வீட்டில் அனைவரும் நலம்தானே? நீங்கள் இனி ப்ளாக்கை தொடர மாட்டீர்களோ என்று அடிக்கடி நினைப்பு வரும். மீண்டும் வந்ததில் ரொம்ப மகிழ்ச்சி :) தொடர்ந்து வாங்க.

GEETHA ACHAL said...

வாங்க செல்வி ஆன்டி...எப்படி இருக்கின்றிங்க...

graceravi said...

இன்றுதான் உங்களைப்பற்றி நானும் வித்யாவாசுவும் பேசிகொண்டோம் அதற்குள் உங்கள்பதிவில் குலோப்ஜாமூன் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி ரொம்ப நன்றாக இருக்கிறது

செந்தமிழ் செல்வி said...

சினேகிதி ஸாதிகா,
வாழ்த்துக்கு மிக்க நன்றி. மனமார வாழ்த்தும் வாழ்த்துக்கு ஈடே கிடையாது. போன் காலுக்காக வெயிட்டிங்:-)

மேனகா,
மகள் நலமே. நீ கண்டுபிடித்த விஷயம் சரியான்னு நாளைக்கு சரி பார்த்துக் கொள்:-)

அதிரா,
எப்பவும் நான் இதைவிட குட்டியாகத்தான் குலோப்ஜாமுன் செய்வேன். இதுவே கொஞ்சம் பெரிய சைஸ் தான்:-) அன்புக் கட்டளைக்கு அடி பணிகிறேன்.

இமா,
இத்தனை பேருடைய அன்புக் கட்டளையை மீற முடியுமா? ஸ்வீட் இனிப்பாக இருக்கா;-)

அடுத்த பதிவையும் பார்த்துட்டு சொல்லுங்க சார்!

அஸ்மா,
அப்படித்தான் நானும் நினைத்திருந்தேன். திரும்ப வந்ததன் காரணம் தான் சொல்லி விட்டேனே! இனி வருகிறேன்.

கீதாச்சல்,
நலமே. வரவேற்புக்கு நன்றி.

கிரேஸ்,
வித்யா நலமா? வருகைக்கு நன்றி.

Jaleela Kamal said...
This comment has been removed by the author.
Jaleela Kamal said...
This comment has been removed by the author.
Jaleela Kamal said...

வாங்க செல்வி அக்கா, இதற்கு முன் போட்ட கமெண்ட் எதில் போட்டேன் தெரியல.

உங்களை இங்கு மீண்டும் பார்த்த்தில் மிக்க சந்தோஷ்ம.
அபப் அப்ப இங்காவது நலம் விசாரித்துகொள்ளலாம் இல்லையா?

பேரன் எப்படி இருக்கார், நல்ல பேசுகிறாரா இப்ப
என் தங்கை பையனும் பேச ஆரம்பித்து விட்டார்,
சேம் தானே இரண்டு பேரும்...

வாங்க அப்படியே நான் கொடுக்கும் அவார்டை பெற்று கொள்ளுங்கள்

http://samaiyalattakaasam.blogspot.com/2011/04/blog-post_21.html

Post a Comment