Wednesday, March 31, 2010

சமைக்குமுன் - பகுதி 2


சமையல் பற்றிய தொடர்ச்சி ரொம்ப நாளாக எழுதாமல் அப்படியே இருக்கு. எப்படியாவது இன்று அடுத்த பகுதி எழுத முடிவு பண்ணியாச்சு.

போன பகுதியில் சமைக்கும் போதும், சமையலுக்கு முன்னும் செய்ய வேண்டியது பற்றி சொன்னேன். இப்ப சமையலுக்கான பொருட்களைப் பற்றி சொல்கிறேன்.

எப்பவும் ஒரு மாதத்திற்கு வேண்டிய பொருட்களை மாத ஆரம்பத்திலேயே வாங்கி வைத்துக் கொண்டால் இடையிடையே கடைக்கு ஓட வேண்டி வராது.

கடைக்கு செல்லுமுன் தேவையான பொருட்களை லிஸ்ட் எழுதி தயாராக வைத்துக் கொண்டால் அங்கு போய் குழப்பம் வராது. மளிகை சாமான்கள் தனியாகவும், மற்ற ஐட்டங்கள் (சோப், பேஸ்ட் போன்றவை) எழுதிக் கொண்டால் அந்தந்த பகுதிகளில் எடுக்க வசதியாக இருக்கும்.

விலை குறைவாக இருக்குன்னு தரம் குறைந்த பொருட்களை வாங்கி, வீணாகி தூக்கி எறிவதை விட கொஞ்சம் விலை கூடினாலும் தரமான பொருட்களை வாங்கினால் கொஞ்சம் நாட்கள் இருந்தாலும் கெடாமல் இருக்கும்.

முடிந்தவரை வீட்டுக்குத் தேவையான வற்றல், வடகம், ஊறுகாயை நாமே கோடை காலத்தில் போட்டு வைத்துக் கொண்டால் நம் டேஸ்ட்டுக்கு ஏற்றாற் போலவும் இருக்கும், மாத பட்ஜெட்டிலும் குறைக்கலாம்.

அந்தந்த மாதத்தில் வரும் பண்டிகையையும் மனதில் வைத்து பட்ஜெட்டில் போட்டுக் கொண்டால், பண்டிகை நேரத்தில் கடையில் நேரத்தை வேஸ்ட் பண்ண வேண்டியதில்லை. உதாரணமாக ஜனவரி மாதம் என்றால் பொங்கல் வரும். மளிகை சாமான் லிஸ்டில் பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய், முந்திரி, ஏலக்காய் எல்லாம் சேர்த்து வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

விருந்தினர் வருவார்கள் என்று எதிர்பார்க்கும் மாதத்தில் கொஞ்சம் கூடவே எல்லா சாமான்களையும் வாங்கி வைத்து விட்டால், அவர்கள் வந்த பின் வாங்கும் நிலையை தவிர்க்கலாம்.

இப்ப வருட சாமான்கள் காலம் (பங்குனி மாதம்). துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், புளி, கடுகு, சீரகம், மிளகு, சோம்பு, கொத்தமல்லி, வெந்தயம், கசகசா, மொச்சை, சுண்டல் எல்லாம் வருடத்திற்கு வாங்கி வைத்துக் கொண்டால் இடையில் கன்னா பின்னாவென்று எகிறும் விலைவாசியில் இருந்து ஓரளவு தப்பிக்கலாம். அரிசி கூட வருடத்திற்கு வாங்கி வைத்துக் கொள்ளலாம். இந்தப் பருவத்தில் வாங்கினால் எல்லாமே விலை குறைவாக இருக்கும்.

ஐயோடா! அப்படி வாங்கி வைத்தால் வண்டு, பூச்சி வருமேன்னு கேட்கறீங்களா? சரியாக பக்குவப்படுத்தி வைத்தால் கண்டிப்பாக 2 வருடம் வரை கூட வைத்திருக்கலாம். இப்ப நான் வைத்திருக்கும் பருப்பு போன்றவை வாங்கி 2 வருடமாகிறது. ஒன்றில் கூட வண்டு, பூச்சி கிடையாது. ஒவ்வொன்றாக எப்படி பாதுகாப்பதுன்னு அப்புறம் சொல்கிறேன்.

5 comments:

geetha said...

செல்விக்கா!
ரொம்ப நல்ல தகவல். பருப்பு வாங்கி இரண்டு வருடமாய் பாதுகாப்பாய் வெச்சிருக்கிறதா சொன்னீங்க. ஆச்சர்யமாய் இருக்கு.
இந்த மாதிரி விஷயங்களில் நான் கொஞ்சம் இல்ல ரொம்பவே வீக்.
அடுத்த பதிவிற்காக ஆவலோட காத்திருக்கிறேன்!
பயனுள்ள பதிவு.நன்றிங்க்கா!

Menaga Sathia said...

செல்விம்மா ரொம்ப நல்லா சொல்லிருக்கிங்க.அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்....

//இப்ப நான் வைத்திருக்கும் பருப்பு போன்றவை வாங்கி 2 வருடமாகிறது. ஒன்றில் கூட வண்டு, பூச்சி கிடையாது. // ரொம்ப ஆச்சர்யமா இருக்கும்மா...

செந்தமிழ் செல்வி said...

நன்றி கீதா! இப்பவும் நீதான் முதலில் போல:-)
நான் சொல்லும் முறைப்படி செய்தால் நிச்சயமாக எந்தப் பொருளும் கெடாது. நீங்கள் விரும்பினால், எந்தெந்த பொருட்கள் எவ்வளவு வாங்கணும்னு சொல்கிறேன்.

நன்றி மேனகா! சில பொருட்களை 3 வருடம் கூட வைத்திருக்கிறேன். சிலர் சொல்வது போல் மாதாமாதம் காய வைப்பதெல்லாம் இல்லை. அடுத்த பகுதி ரெடியாகத்தான் இருக்கு. ஒரு நாள் விட்டு போடுகிறேன்:-)

இமா க்றிஸ் said...

asaththureenka Selvi. ;)

ஹுஸைனம்மா said...

//சரியாக பக்குவப்படுத்தி வைத்தால் கண்டிப்பாக 2 வருடம் வரை கூட வைத்திருக்கலாம்.//

எங்க வீடுகளயும் வச்சிருக்காங்க; ஆனா இப்ப என்னால வச்சுக்கணுன்னு நினைச்சாலும், வண்டு,பூச்சிகளின் தொல்லையைவிட, இடநெருக்கடிதான் பெரும்பிரச்னை!!

இதன் அடுத்த பகுதி வாசிக்க ஆவலாருக்கேன் அக்கா.

Post a Comment